Skip to main content

லவ் யூ டாடி !!

அணைகின்ற விளக்கு
சுடர் விட்டு எரிவது போல்
இறப்பதற்கு முன் அவர் குரலில்
கடைசியாக சொன்ன வார்த்தை
எந்தன் பெயர் மட்டுமே,

நீங்கள் என்னை விட்டு சென்று
சரியாக 18 வருடங்கள் ஆகிவிட்டது,

தூங்குவோம் என கண்ணை மூடினால்
எந்தன் கனவுகளில் உங்கள் உருவம்
என் இரவு முழுவதையும்
உங்கள் வசப்படுத்திக்கொண்டது,

யாரோ ஒரு அப்பா தன் கால் வலிக்க
மிதிவண்டியை மிதித்து தன் மகனை
சொகுசாக கூட்டிச்செல்லும் போது இன்னும்
கொஞ்ச நாள் நான் மழலை வகுப்பில்
படித்திருக்கலாமோ என மனம் நாடுகிறது,

வெளியூரில் வேலை பார்த்தாலும்
சொந்த ஊருக்கு போய் புரோட்டா
சாப்பிடும் போதெல்லாம் ஞாயிற்று
கிழமை நீங்கள் வாங்கிக்கொடுக்கும்
புரோட்டா மட்டுமே கண்களின் முன்
வந்து செல்கிறது,

கேட்டவை எல்லாம் கிடைத்தது நடுத்தர
குடும்பத்தில் பிறந்தும் கூட நான் மட்டுமே
தனிக்காட்டு ராஜா நீங்கள் உடன் இருந்த
வரை,

அன்று நீங்கள் வாங்கிக்கொடுக்கும்
எனக்கு பிடித்த 50-50 பிஸ்கட்டுகளின்
சுவை இன்றைய தினத்தில் காலாவதி
ஆகிவிட்டது போல் அச்சுவையிலிருந்து,

ரஜினி படமென்றால் முதல் காட்சி
டிக்கெட்டை எப்படியாவது வாங்கி என்னை
கூட்டிச்சென்று அவரின் ஸ்டைலை ரசிக்க
வைத்தீர்கள் இன்றோ அந்த விண்டேஜ்
ரஜினியை கூட திரையில் பார்க்க
முடியவில்லை,

யாரோ முகம் தெரியாத உறவினர்கள்
கூட சொல்கிறார்கள் உங்கள் பெருமையை
ஹ்ம்ம் அவர்கள் வாயில் இருந்து நல்ல
விஷயம் வருவதே அரிது எப்படி இப்படி
ஒரு நற்பெயரை சம்பாதித்தீர்கள் என்ற
ஆச்சரியம் இன்று வரை எனக்கு இருந்து
கொண்டு தான் இருக்கிறது,

அது என்னமோ சரி தான்
நல்ல மனசு உள்ளவங்க
சீக்கிரமா தனக்கான இடத்த
தேர்ந்து எடுத்துப்பாங்கல ஹ்ம்ம்,

எந்த சூழ்நிலையிலும் கலங்காம
சிரிச்சிட்டே கடந்து போற மனநிலை
கூட உங்ககிட்ட கத்துக்கிட்டது தான்,

என்ன இப்போ நீங்க கூட இருந்திருந்தா
இந்த கொரோனா போன்ற கட்டுப்பாடு
விதித்த நாள்ல வீட்டுக்குள்ளேயே இருந்து
உங்க மடில படுத்து மனசு விட்டு பேச
கொஞ்சம் நேரம் கிடைச்சுருக்கும்,

சரி,எனக்கு கொடுத்து
வைக்கலன்னு நினைச்சுக்குறேன்,

கனவுல டெய்லி கால் பண்ணி
நீங்களும் அம்மாவும் பேசுவீங்களே
பத்து நிமிஷம் அது தொடரும்ன்னு
நினைக்குறேன்,

ஷேர் பண்ண நிறைய ஆசைகளும்
பிரியமும் இருக்கு மம்மியையும்
நல்லா பாத்துக்கோங்க,

ஹ்ம்ம், போங்க டாடி
அம்மா கூட ரொமான்ஸ் பண்ணுங்க
நீங்க வசிக்கின்ற அந்த மேல் உலகத்துல
சந்தோஷமா இருங்க,

என்ன பத்தி கவல படாதீங்க
கடைசி வர எந்த கெட்ட பழக்கத்துலையும்
என்ன நுழைச்சுக்கமாட்டேன் உங்களுக்கு
செஞ்சு கொடுத்த அந்த ப்ராமிஸ காப்பத்தி
இன்னார் பையன் - ன்னு உங்க பேர்
சொல்லும் பிள்ளையா தான் இருப்பேன்,

நீங்க சொல்லுவது போல
உலகம் ரொம்ப பெருசு தான் டாடி
ஆனா நிறைய வருஷம் போராடி
என்ன நான் இணைச்சுக்கிட்டேன்
ஊரோடு ஊராய் மனிதனோடு மனிதனாய்,

என்னால முடிஞ்ச வர
சின்னச்சின்ன அன்ப விதைச்சுட்டு
இருக்கேன் சில பேர சந்தோஷமாவும்
வச்சுக்குறேன் என்னோட எழுத்து மூலமா,

என்ன சுத்தியே உங்க தேடல் இருக்கும்
என்னோட தேடலும் நீங்களும் மம்மியும்
மட்டும் தான்,

நீங்க தான் எல்லாமே
நீங்க தான் எல்லாமுமே,

நைட் கால் பண்ணுங்க
கதைக்க ஓராயிரம் கதைகள் இருக்கு,

~ லவ் யூ டாடி ( சின்ன சிரிப்புடன் ) ❤️

Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

Chai with Halitha Shameem Akka!

* Chai With Halitha Shameem Akka!  எதிர்பாரா வாய்ப்புகள் எப்போதாவது தான் அமையும்,அப்பறம் நம்ம எதிர்பார்த்து காத்திருந்தாலும் பரிபோன வாய்ப்பு போனது தான்,கிடைக்கும் போது வாய்ப்பை சரியான முறையில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும், அப்படி ஒரு வாய்ப்பு இயக்குநர் ஹலிதா அக்கா - வை சந்திக்க அரங்கேறியது,அவர்களின் சொந்த ஊரான தாராபுறத்தில் மாலை ஐந்து மணிக்கு தாராபுரம் பழனி பிரிவில் உள்ள சூர்யா பேக்கரியில் சந்திக்கலாம் என்று தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்திருந்தார், கோடை கால விடுமுறையில் மதிய நேரம் வரும் ஐஸ் வண்டிக்காக ஒரு மணி நேரமாக வீட்டு திண்ணையில் ஐஸ் வண்டி சத்தம் கேட்குதா என எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் சிறுவனை போல நானும் மாலை அங்கு சென்று விட வேண்டும் அவர்களை சந்திக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மட்டுமே மனசுக்குள் ஓடிக்கொண்டிருந்தது,இயக்குநர் அக்காவிற்கு ஒரு மெசேஜ் அனுப்பி வைத்தேன் இன்று மாலை சூர்யா பேக்கரிக்கு உங்களை காண வருகிறேன் என்று, "வாங்க" என்று பதில் ரிப்ளை செய்திருந்தார்கள், கோவையில் இருந்து கிளம்பி போகும் வழியில் காரணம்பேட்டையில் Dhanasekar D  - ஐயும் அழைத்துக்கொண்