Skip to main content

Idealogy About " Muni " !!

என்ன வேண்டும்
என்பதெல்லாம் அவனுக்கு தெரியும்
அவனை மிஞ்சி எதுவும் இல்லை
இவனுக்கு புரியும்,

இப்படி கடவுளின் நிலை அடைய
முயற்சி செய்யும் ஒருவனின் தன்மையை
குறிப்பிடும் படி கடவுள் பற்றிய புரிதல்
இது தான் கடவுள் என்பவன் இவ்வாறு
தான் நமக்குள் பிரதிபலிக்கிறான் என்று
கடவுள் சார்ந்த வரிகளில் தான் பாடல்
அமைந்திருக்கும்,

அன்பு பொழியும் நெஞ்சின் உறவு
கடவுள் ஆகுமே - என்று

ஒருவரிடம் அன்பு செய்தாலே போதும்
நம்முடன் இருப்போருக்கு நம் உறவு
கூட ஒரு கடவுள் போலத்தான் தெரியும்
என்பதை கூட பாடலின் ஒரு வரியில்
சொல்லி இருப்பார்கள்,

வேண்டியதை தருபவரும்
அவன் தான் அன்றோ
வேண்டவைத்து பார்ப்பதுவும்
அவன் தான் அன்றோ,

என கடவுள் பற்றிய
தெளிவான விஷயத்தை
இந்த வரியில் சொல்லியிருப்பார்கள்,

நமக்கு ஒரு விஷயம் வெற்றிகரமாக
நடக்க வேண்டும்,செய்யும் தொழில்
சிறப்பாக நடக்க வேண்டும்,பண வரவு
அதிகரிக்க வேண்டும் என
தினந்தோறும் வீட்டின் பூஜை அறையிலும்
கோவில்களுக்கும் சென்று கடவுளிடம்
தங்கள் வேண்டுதலை கூறி பிரார்த்தனை
செய்கிறோம்,அதே நேரத்தில் நமக்கான
தேவை என்பது கடவுளாகிய அவனுக்கு
தெரிந்து இருந்தாலும் அதை நீ மனம் உருகி
என்னை வணங்கி உனது தேவையை கேள்
என்று நம்மை அவனிடம் வேண்ட வைத்து
பார்ப்பவனும் இங்கே அவன் தானே,
கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் இந்த
கூற்று நிச்சயம் உங்களுக்கு புரியும்,

இப்படி கடவுள்,கடவுள் நிலையை
அடைய முயற்சி செய்யும் ஒருவன்,
கடவுள் பற்றிய புரிதல் உள்ள ஒருவன்
என்று இதை சார்ந்த வரிகள்
அமைந்திருந்த பாடலின் சுவாரஸ்யம்
என்னவென்றால் கல்வியை பற்றி
சொல்லுவது,கடவுளுக்கும் கல்விக்கும்
சம்பந்தப்படுத்தி பார்க்க வேண்டாம்,
அதே நேரத்தில் அறம் கற்ற சான்றோர்
ஒருவர் இன்னொருவருக்கு பாடம்
புகற்றுவது கூட ஒரு கடவுள் மனநிலை
போன்றது தானே,

தான் அறிந்த வித்தைகளை
சொல்ல துடிக்குதே
ஞான நிலை தேடி மனம்
சிறகை விரிக்குதே,

என்ற வரிகள் தான் என்னை
ஆச்சரிய கடலில் மூழ்கடித்தவை,

அவன் அறம் பயின்றவன்,
பகவத் கீதை,பைபிள்,குரான்,
திருக்குறள்,சம நிலை கல்வி
இப்படி  பல,அதே நேரத்தில்
கல்வி அறிவே இல்லாத ஊரில்
பாட சாலை இல்லாத ஊரில்
உள்ள குழந்தைகளுக்கு நற்பண்புகளை
வளர்க்கும் புத்தங்களையும்,சிரிக்கவும்
சிந்திக்கவும் வைக்கும் சார்லி சாப்ளின்
காணொளி மற்றும் சமூக அரசியல்
பற்றிய தெளிவு,ஜாதி பற்றிய புரிதல்,
இப்படி பல கோணங்களில் பல தரப்பட்ட
விஷயங்களை அந்த ஊரில் உள்ள
மாணவர்களுக்கு பயிற்று விக்கிறான்,

சில பேரு இருப்பாங்க தனக்கு 
நல்லா தெரிஞ்ச ஒரு விஷயத்த
இன்னொருத்தவங்களுக்கு
சொல்லித்தரமாட்டாங்க,

தன்னோட இன்னொருத்தன்
வளர்ந்துட கூடாதுன்னு ஒரு போட்டியும்
பொறாமையும் இருந்துகொண்டு தான்
இங்க இருக்கு, பல பேரு இந்த மாதிரி
நிஜ வாழ்க்கையில நீங்க பார்க்கலாம்
உங்கள் பள்ளி,கல்லூரி தினங்களில்,

அதே நேரத்தில் ரொம்ப கொஞ்ச பேர்ன்னு
சொல்லுற அளவு நமக்கு நல்லா தெரிஞ்ச
ஒரு விஷயத்த இன்னொருத்தவங்களுக்கு
கற்றுக்கொடுக்கும் போது நம்ம முகத்துல
ஏற்படுற சந்தோஷத்துக்கு எல்லையே
இருக்காது,

அப்படி ஒருத்தவங்களுக்கு
கற்றுக்கொடுக்கும் போது
கற்றுக்கொடுக்குற விஷயத்துல
புரிதல் அதிகமா இருக்கணும்,
புரிதல் அதிகமா இருக்கப்போ
சொல்லிக்கொடுக்குற நமக்கும் சரி
கற்றுக்கொள்கிற மனிதர்களுக்கும் சரி
அதன் ஆழம் வரையிலும் சொல்ல வர
விஷயம் போய் சேரணும்,

ஒரு உதாரணத்துக்கு நீங்கள்
தமிழ் இலக்கணம் அல்லது
English Grammer - இல் தேர்ந்தவராக
இருப்பின் அதில் உள்ள மாத்திரை
அளவுகள்,Vowels,Noun போன்று தான்
தொடங்கிய விஷயத்தை ஆணிவேரில்
இருந்து நீங்கள் இன்னொருவருக்கு
கற்றுக்கொடுக்கும் போது தான்
அது கற்போரின் செவிகளுக்கு
ஆழமாக சென்றடையும்,

இப்படி தனக்கு தெரிஞ்ச
ஒரு விஷயத்தை இன்னொருத்தருக்கு
அவன் கற்றுக்கொடுக்கும் போது அவன்
மனம் ஒரு ஞான நிலை அடைந்து
தான் கற்ற கல்வி தன்னோடு நிற்காமல்
இன்னொருவருக்கும் சென்று சிறகு
விரித்து பறக்கிறது என்று அவன்
மகிழ்ச்சியில் பேரின்பம் அடைகிறான்,

அதிகமான புரிதல்,அதிகமான சிந்தனை
என பாடல் நம்மை சிலிர்க்க வைக்கும்
ஒவ்வொரு முறை பாடல் கேட்கும் போதும்,

மன அழுத்தம் அதிகமாக இருக்கும்
நேரமும்,அமைதியும் தனிமையும்
மனம் நாடி திரியும் நேரத்தில் என்
சிந்தைக்கு தோன்றுவது இந்த பாடல்
மட்டுமே,

எஸ்.எஸ்.தமன் இசை அமைத்து
பல பாடல்கள் ஹிட் அடித்திருந்தாலும்
இந்த " முனி " பாடல் அவர் வாழ்நாளின்
பின்புலம் பேசும் ஜீவ சுகம் தரும்
ஆதி பேரன்பின் பாடல்,

பாடல் எழுதிய கவிஞர் முத்துலிங்கம்
என்பவரின் பேனா முனை வாழ்க்கைக்கான தேவைகளை
அதிகம் வார்த்தை ஜாலங்களில்
இந்த பாடலின் மூலம் பேசியிருக்கிறது,

கொஞ்சம் இளையராஜா சாயல்
அடிப்பது தான் அனந்துவின் குரலில்
உள்ள ஒரு மாய ஈர்ப்பு,குரலை
போலவே பாடலுக்கும் ஈரமான உணர்வை
கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம்,

கடைசியாக காட்சியில் தோன்றிய ஆர்யா,
அவரோட கண்ணு தான் இங்க ஒவ்வொரு
ஃபிரேம்லையும் பேசும்,

ஆர்யாவோட பலமே
அவரோட கண்கள் தான்
இதை நான் சொல்லலங்க
இயக்குநர் பாலா ஒரு நேர்காணல்ல
சொல்லியது,

முனி - ன்ற கதாபாத்திரம்
ஆர்யா தவிர வேறு யாருமே
இங்க நினைச்சு பார்க்ககூட முடியாத
அளவு அந்த கதாபாத்திரத்துக்கான
தெளிவு அவரோட நடிப்புல நம்ம
பார்க்கலாம்,

என்னோட புரிதல்ல இருந்து இந்த
பாடல் பத்தி இங்க சொல்லியிருக்கேன்,

தனிமையில் இருக்கும்போதும் சரி
தன்னிலை நீங்கள் உணரும் போதும் சரி
தவிப்பின் வலியில் அழும் போதும் சரி
தாமதிக்காமல் இந்த பாடலை கேளுங்கள்
தனித்துவம் பல உங்களுக்குள் உணருங்கள்,

Song Link : 

https://youtu.be/ynMr9kQb91U

#Magamuni | #MuniSong | #Santhakumar | #Arya ❤️

Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ...