Skip to main content

Title : "The Tales of Red Roses "

இந்த மண்ணில் அன்புக்கு ஏங்குபவர்கள் அதிகம். அதில் வெகு சிலருக்கு அது அக்ஷய பாத்திரம் போல் கிடைக்கும், சிலருக்கு அந்த அன்பு நமக்கு கிடைக்குமா என்ற ஏக்கத்திலயே ஒரு வித தனிமையை அவர்களுக்கு உருவாக்கும். தேடாமல் கிடைத்து, தேடியும் கிட்டாமல், கிடைத்தும் உதாசீனப்படுத்தி என அன்புக்கு பலமுகங்கள் உண்டு.

ரஹ்மான் சொன்ன இந்த கூற்றில் இருந்து நம் கதையை தொடங்குவோம்
“All My Life I have had a Choice of Hate and Love. I Chose Love and I am here..!!"

Now : (நிகழ்காலம்)

அப்பா : ஹலோ மைக்கேல் இப்போதான் உன் நண்பன் சொன்னான் நீ இந்தியா வந்துட்டேன்னு, Are You Alright Micheal..?

மைக்கேல் : Daddy ஐ லவ் யூ! நான் உங்கள பாக்கணும் உங்க தோள்ல சாய்ஞ்சு அழுகணும், என்னோட இந்த நாள்ல நீங்க என்கூட இருக்கணும்

என்று கண்ணில் நீர் ததும்ப மைக்கேல் அவன் அப்பாவிடம் தன்னுள் அடக்கிவைத்திருந்த கண்ணீர்களை அந்த கடற்கரையின் கரையில் சிந்தினான்.

அவன் கால் தட சுவடு படிந்த அந்த கடற்கரையின் உப்புக்காற்று வீசும் ஆர்ப்பரிப்பில்லாத இரவு நேர அலைகளில் இருந்து ஒரு இதமான சுமையில்லாத மனமுடைய அமைதியை தன்னுள்
உணர்ந்துக்கொண்டிருக்கிறான் அவன். எழுச்சி மிகுந்த கடல் அலைகள் கரையோரத்தில் அமர்ந்திருக்கும் இவன் பாதங்களை தொட்டதும் அடியனுக்கு கட்டுப்படுகிறது. இது இயற்கை நியதி தானே என்று எடுத்துக்கொள்ளமுடியாது. ஏனென்றால் அவன் கால் தடம் பேசும் மொழியிலும் இக்கடலுக்கும் நிறைய தொடர்பிருக்கிறது. இந்த கடற்கரையில் இந்த மண் மீது அலைகள் செய்யும் சங்கமத்தில்
கடற்கரை ஓரத்தில் இருக்கும் புனித ஆலையத்தின் ஜெப ஒலியும் நாலா புறமும் சுழலும் கலங்கரை விளக்கத்தின் கதிரொளியும் தனிமையில் அமர்ந்திருக்கும் இவன் மீது தங்கள் (ஒலி - ஒளி) கதிர்களை வீசி இவனுடைய பெயரை நமக்கு சொல்கிறது

Yes The Name is Micheal (Micheal Desouza)..!!

சிறுவயதிலேயே அம்மாவை இழந்து அப்பாவின் தாலாட்டில் வளர்ந்தவன் மைக்கேல். பொதுவாகவே ஒரு ஆம்பள பையனுக்கு அப்பாவை விட அம்மா தான் ரொம்ப புடிக்கும். அதுனாலயே என்னவோ அம்மா இல்லாததால மைக்கேல் அவனோட இன்ப துன்பங்கள் எதையும் யார்கிட்டயும் பகிர்ந்துக்கமாட்டான். Even அவனோட அப்பாக்கிட்ட கூட, அவங்க அப்பா இவனோட தேவைகளை சரியா புரிஞ்சு இவனுக்காக உலகத்தில் விலை கொடுத்து வாங்கமுடிகின்ற எந்த ஒரு பொருளையும் வாங்கி கொடுப்பார். ஆனால் இவன் அம்மா இல்லாததால் என்னவோ சிறுவயதில் இருந்தே கொஞ்சம் Rude ஆக Behave பண்ணுவான். காலம் கடந்து செல்ல இன்று அவன் Short Temper (Depending on the Surrounding People) ஆக இந்த உலகம் அவனை மாற்றியது. அவன் அன்புக்கு ஏங்குபவன். அந்த அன்பு அவனுக்கு சரியாக கிடைக்கவில்லை. அவன் அப்பாவும் பணக்காரர் என்பதால் Business என்ற இன்னொரு பொண்டாட்டியுடன் காலத்தை செலவு செய்வதிலேயே அவர் நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தது. தன் மகனுக்கு விலை உயர்ந்த பொருளை வாங்கி கொடுத்தால் அவன் சந்தோஷமாக இருப்பான் என்று நம்பும் ஒரு தந்தை அவர். அவன் மகனுக்குள் இருக்கும் தனிமையையும் வலியையும் அவர் உணரவில்லை. மைக்கேலுக்கு அன்பு கிடைக்காமல் Mostly தனிமையில் அதிகமாக தன் நேரத்தை செலவிடுவான். அவன் கோபத்தினால் நிறைய மனிதர்களையும் இழந்து நிற்கிறான். அவன் வாழ்வில் அவன் எப்போதும் விரும்புவது தனிமையும் அமைதியும். இவ்விரண்டும் வெவ்வேரு கண்கள் என்றாலும் கண்ணோட்டம் ஒன்று தான். அவனுக்கென ஒரு நண்பன் மட்டுமே இருந்தான். அவன் பெயர் ஆதித்யா.

புத்தகமும் இசையும் ஒருவனுக்கு எந்த வித மாற்றத்தையும் கொடுக்கும் என்ற கூற்றை அதிகமாக நம்புவான் மைக்கேல். அவன் நண்பன் ஆதித்யா ஒரு கடை வைத்திருந்தான்.

கடையின் பெயர் : இசைஞானியும் கவிப்பேரரசும்

திரைப்படம், ஆன்மீகம் என எல்லா வகையான பாடல்களும் புனைக்கதை, கவிதை, சிறுகதை, நெடுந்தொடர் என எல்லா வகையான புத்தகங்களும் அடங்கிய நண்பனின் கடையில் தான் மைக்கேல் தன்னுடைய பொழுதை கழிப்பான். எப்போதாவது அப்பாவின் வற்புறுத்தலால் அவர் Business - இன் Administration வேலைகளையும் மேற்கண்டவாறு பார்த்துக்கொள்வான்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்.
தனுஷ்கோடியில் தமிழக மீனவர்கள் சுடப்படுகிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இந்தியன் ஆஸ்கார் விருது வாங்கினார்.
அப்துல்கலாம் என்னும் விஞ்ஞானி இந்திய ஜனாதிபதி ஆனார்.

இந்த மாதிரி Headlines - ஐ நம் இன்டர்நேஷனல் மீடியாக்கள் சாதித்த தமிழர்களை இந்தியனாகவும் பாதிக்கப்பட்ட மனிதர்களை தமிழனாகவும் குறிப்பிட்டு ஒளிபரப்புவது முதலில் எனக்கு வருத்தமளித்தது. பின்பு தமிழர்களும் தமிழ் பற்றிய சிந்தனைகளும் பெர்முடா முனையில் இருக்கும் ஒரு தமிழன் வரை போய் சேர்கிறது இக்கால சமூக வலைதளங்கள் மூலமாக என்பதை நினைக்கும்போது நம் மொழி உலகறிய பரவுகிறது என்ற பெருமையில் நெஞ்சம் நிமிரவும் திமிரவும் செய்கிறது.

இது போன்ற சமூக பேச்சுக்கள் மற்றும் கம்யூனிசம்,யாழ் நகரத்தின் அழுகை,மண் சார்ந்த கதைகள், ராஜாவின் மெல்லிசை, Bethoven Sympony என ஆதித்யாவும் மைக்கேலும் நிறைய பேசுவார்கள். இக்கால இளைஞர்களிடம் இருந்து இந்த இருவரும் காக்கை கூட்டத்தின் இடையில் உலாவும் குருவிகளை போல் சற்று தனியாகவே தெரிவார்கள்.

இப்பொழுது மைக்கேல் இங்கிலாந்து நாட்டில் ஒரு வருட காலமாக வசித்து வருகிறான். அவனுக்கு அமைதி வேண்டும் என்றால் இங்கிலாந்தின் Wales நகரத்திற்கு வந்துவிடுவான்.

மைக்கேலுக்கு காதல் என்றால் மிகவும் பிடித்த ஒன்று.
உண்மையான காதலர்களை பார்த்து சிலிர்த்துக்கொள்வான்.
அவனுக்கு மிகவும் பிடித்த பாதித்த ஒரு காதல்னு சொல்லணும்னா
அது இளவரசி டயானாவின் காதல்.
எல்லாரும் டயானாவ ரசிச்சாங்க
ஆனா மைக்கேல் மட்டும் டயானாவின் காதலை ரசிச்சான்.
மற்றவர்களுக்கு டயானா சமாதி ஒரு நினைவிடம்
ஆனால் மைக்கேலுக்கு அது அமைதி தரும் கோவில்.

இது தான் மைக்கேல் தன்னை அடைகாத்துக்கொள்ளும் சிறு உலகம்
இது போக மேலும் ஒரு நவ நாகரிக காதலி !

மைக்கேல் அமைதியை தேடி எதற்காக Wales நகரத்திற்கு சென்றான்..?
எதற்காக அவன் அப்பாவிடம் அலைபேசியில் கண்ணீர் சிந்தினான்..?
அவன் கோபத்தையும் அமைதியையும் தனிமையையும் ரசிக்கும்
அவனுடைய காதலி யார்..?

1 Year Ago :

எப்போதும் தனிமையை விரும்பும் குணத்தினாலும் அமைதியாய் இருக்கும் மைக்கேலுக்கு ஒரு காதலி இருக்கின்றாள். Hello FM 106.4 என்னும் ரேடியோ சேனலில் வேலைப்பார்த்து வருகிறாள். இவனும் அவளும் பள்ளிக்கூடத்தில் இருந்து கல்லூரி வரையில் இணைந்து படித்த நண்பர்கள் தான். பின்பு புரிதலின் அழகால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. மைக்கேலுக்கு உறுதுணையாக இருக்கும் ஒரே ஜீவன் இந்த உலகில் அவன் காதலி மட்டுமே. அவனுடைய கோபங்களையும் வெறுப்புகளையும் சந்தோஷமான தருணங்களையும் சிறு வயது முதலே பார்த்து வளர்ந்தவள். மைக்கேலை பத்து மாதம் சுமந்து பெறாத தாய் என்றே சொல்லலாம். அந்த அளவு காதலையும் பாசத்தையும் ஒரு சேர அவனுக்கு பகிர்ந்தவள் அவள். அவளுக்கு அப்பா அம்மா இல்லை. சிறு வயதில் இருந்தே ஒரு ஆசிரமத்தில் Sponsers உதவியுடன் படித்து வந்தாள். Hello FM - இல் தினமும் இரவு பத்து மணிக்கு "Diary With RJ Manaza" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தாள்,

Yes, The Name is Manaza (RJ)

மைக்கேல் எந்த வேலை செய்தாலும் இரவு 9.55 மணிக்கு தன் அறைக்குள் வந்து விடுவான். அவன் அறையின் ஜன்னலை திறந்து விட்டு மிதமான குளிரில் AC யை ON செய்துவிட்டு அந்த ரேடியோபெட்டியை Hello FM 106.4 என்கிற அலைக்கதிருக்கு Stay Tune செய்த பிறகு Manaza-வின் குரலுக்கு காத்திருப்பான்.

Manaza தொகுத்து வழங்கும் Diary நிகழ்ச்சியின் Special என்னவென்றால் வாசகர்கள் அனைவரும் தங்களின் வாழ்வில் நடந்த தங்களுக்கு மறக்கமுடியாத விஷயங்களை Hello FM - ற்கு மின்னஞ்சல்(Mail) செய்வார்கள். அவர்கள் அனுப்பும் கதையில் சந்தோஷம் பூத்து குலுங்கும் மலர்களாக இருந்தால் அதை வாசகர்களுக்கு படித்துக்காட்டும் Manaza -வின் குரலில் மழலை தன்மை கொஞ்சும் கீச்சொலியாக உற்சாகமாக அந்த கதையை வாசகர்களின் சிந்தனையில் கொண்டு சேர்ப்பாள். அதே வாசகர் அனுப்பும் கதை ஒரு பிரிவை பற்றியோ அல்லது மனம் குறுகியோ இருந்தால் அதை வாசிக்கும் Manaza-வின் குரலில் தனிமை நிழலாடும். அந்த இரவுக்கு தேவையான மௌனம் நிகழ்ச்சி எங்கும் பரவிக்கிடக்கும். இறுதியில் அந்த சோகமான கதைக்கு தனக்கு தெரிந்த Oru Solution -உடன் Manaza அன்றைய நிகழ்ச்சியை முடிப்பாள். Manaza ஒவ்வொரு கதையை உரையாடும் போதும் Mild Tune ஆக ஒரு Bethoven Symphony போன்ற இசை Background -இல் ஒலித்துக்கொண்டே இருக்கும். இது தான் Diary நிகழ்ச்சியின் Special,

அன்று Manaza -வின் பிறந்தநாள், தான் சிறு வயதில் இருந்து வளர்ந்த ஆசிரமத்தில் தன்னை போல் வளரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்றைய மதிய நேர உணவை ஒரு உணவகத்தின் மூலம் தயார் செய்து ஆசிரமத்திற்கு கொண்டு வர செய்தாள். அன்று Manaza - Micheal இருவரும் அன்றைய மதிய நேர உணவை அந்த குழந்தைகளுக்கு உணவளித்து தாங்களும் உணவருந்தினர். பிறகு அங்கிருக்கும் குழந்தைகளுடன் தங்கள் நேரத்தை செலவழித்தனர். அந்த ஆசிரமத்தில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள்,பெற்று வளர்ந்த பிள்ளைகளால் கடைசி காலத்தில் கைவிடப்பட்ட முகத்தில் தோள் சுருங்கிய முதியவர்கள்,எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என எல்லோரும் ஒற்றுமையாக இவர்கள் இருவருடன் கைக்கோர்த்து நடனம் ஆடிப்பாடி, அந்த முதியவர்கள் மடியில் இவர்கள் இருவரும் படுத்து உறங்கி. ஒருவரை ஒருவர் உத்வேகப்படுத்தும் Hug - ஐ ஒவ்வொரு குழந்தைகளும் முதியவர்களும் Manaza -வின் பிறந்தநாள் பரிசாக வழங்கினர், இறுதியில்அந்த Aids - இல் பாதிக்கப்பட இரண்டு குழந்தைகளின் கைகளை பிடித்தவாறு ஒரு குழந்தையை மைக்கேலும் இன்னொரு குழந்தையை Manaza-வும் அவர்களின் பஞ்சு போன்ற இதமான உள்ளங்கைகளில் தங்கள் முகத்தில் வைத்து அந்த Jesus-இடம் பிரார்த்தனை செய்துவிட்டு அந்த இரண்டு குழந்தைகளின் கையில் தங்கள் இதழ் கோர்த்து முத்தமிட்டு அவர்கள் தலை கோதி விட்டனர். அந்த இரண்டு குழந்தைகளும் இவர்கள் இருவரின் கன்னத்திலும் முத்தம் கொடுத்து விட்டு தங்கள் பாதங்கள் மண்ணிலே கரை படிய ஓடிவிட்டனர். மழலை கொஞ்சும் மொழி பேசிக்கொண்டு,

அந்த ஒரு தருணம் மைக்கேல் மற்றும் Manaza இருவரும் இளவரசி டயானா - வின் கருணையையும், அவர்கள் மற்றவர்கள் மீது காட்டிய அன்பையும் ஒரு எடுத்துக்காட்டாக இந்த ஆசிரமத்தில் இந்த மண்ணில் விதைத்துவிட்டு சென்றனர்.

பிறகு இவர்களின் காதலும் தண்ணீர் ஊற்றி வளர்த்த ரோஜா செடி போன்று மொட்டுக்கள் பூவாக Healthy - ஆக வளர்ந்து கொண்டு இருந்தது
அப்போது தன் அப்பாவின் Business விஷயமாக லண்டன் செல்ல தயார் ஆகிறான் மைக்கேல். அவனை வழி அனுப்ப விமான நிலையம் வந்திருந்தாள் Manaza, ஒரு மாதத்தில் வந்து விடுவேன் பத்திரமா இருந்துக்கோ, நீ தினமும் Host செய்யும் Diary நிகழ்ச்சியை எனக்கு Live மூலம் நீ தினமும் பகிர வேண்டும் என செல்லக்கட்டளை விடுத்து அவள் நெற்றியின் உச்சி குளிரும்படி ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து British Airways வழித்தடத்திற்கு விடைபெறுகிறான் மைக்கேல்.

லண்டன் சென்ற பிறகு தினமும் Wales நகரத்தில் அல்தார்ப் பகுதியில் இருக்கும் Princess Diana அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்த பிறகு தான் தினமும் மைக்கேலின் காலை அந்த அழகிய குளிர் கால அமைதியான நகரத்தில் விடிந்தது. இதற்கு இடையில் அப்பாவின் Business வேலைகள், பிறகு இரவு நேரத்தில் Manaza அனுப்பும் Diary Live Updates -கள் என பத்து நாட்கள் இப்படியே கடந்தது. இந்த தனிமையும் ஆங்கில நாட்டின் குளிர் தேசத்தின் அமைதியும், தினமும் சென்று வரும் டயானா நினைவிடமும் தான் சிறு வயதில் தொலைத்த அம்மா இவனுடன் இருப்பது போல் மைகேல் உணர்ந்தான்.

லண்டன் சென்ற மைக்கேலுக்காக ஆயர்பாடியில் கண்ணனுக்காக காத்திருந்த ராதை போல் இங்கு Manaza தினமும் நாட்காட்டியில் தேதிகளை கிழித்துக்கொண்டு அவன் வருகையை எதிர்நோக்கி இருந்தாள். அன்று இரவு அவளுக்கு Bleeding அதிகமாக இருந்தது. வழக்கம் போல் Periods (மாதவிடாய்) என்று Sanitary Napkin வைத்துவிட்டு மிகவும் சிரமத்துடன் தூங்கமுடியாமல் அவஸ்தி பட்டாள். அடுத்த நாள் காலை Bleeding மேலும் அதிகமாக அவளுக்கு நான்கு அறைகளுக்குள் ஒரு மாயப்பின்பம் தோன்றியது போல தலை சுற்றி கீழே விழுந்தாள். அவள் தங்கியிருந்த Apartment - இல் இருப்பவர்கள் அவளை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவள் காதலித்ததும் அவளுடன் FM -இல் வேலைபார்க்கும் யாருக்கும் தெரியாது. Manaza எப்போதும் ரொம்ப Privacy யாக இருப்பாள். அவளுக்கான ஒரு தகவலை கொடுக்க வேண்டும் என்றால் அவள் சிறு வயதில் இருந்து வளர்ந்த ஆசிரமத்தில் மட்டுமே சொல்லமுடியும். அவளை மருத்துவமனையில் admit செய்துவிட்டு அவள் Neighbours ஆசிரமத்திற்கு நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். அவர்கள் மைக்கேலுக்கு இந்த விஷயத்தை கூறவேண்டும் என நினைக்கும்போது லண்டனில் இருக்கும் அவனுடைய இந்திய மொபைல் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. அங்கு இங்கு என விசாரித்து மைக்கேலின் அப்பா தாமஸ் செல்லையாவிற்கு ஆசிரமத்தின் மூலம் விஷயம் சொல்லப்பட்டது.

மருத்துவமனைக்கு வந்த தாமஸ் அவர்கள் மருத்துவரிடம் Manaza உடல்நலம் பற்றி விசாரித்தபோது மருத்துவர் கூறிய விஷயம் தாமஸ் அவர்களுக்கு தூக்கி வீசியது போல் இருந்தது,

Manaza - விற்கு சிறு வயதில் இருந்தே Bleeding Ulcer என்னும் நோய் இருந்து வந்திருகிறது. ஆனால் இது ஒரு நோய் என்று அப்போதிலிருந்து இப்போது வரை Manaza - விற்கு தெரியவில்லை, மாதவிடாய் காலங்களில் Manaza -விற்கு Bleeding அதிகமாக இருந்திருகிறது. Menstrual Cycle - இன் சுழற்சி முறை சரியாக இல்லாததால் Irregular Periods இருந்திருக்கிறது. இதற்கான எந்த ஒரு Treatment - ஐயும் Manaza எடுக்கவில்லை, Bleeding Ulcer இருக்கும்போது Bleeding அதிகமாகவே இருக்கும். அதை Periods என நினைத்து எளிதில் விட்டதன் விளைவு இன்று பெரிய ஆபத்தில் முடியப்போகிறது என்று மருத்துவர் தாமஸிடம் கூறினார்.

Manaza உயிரோடு இருப்பது இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே என்று மருத்துவர் கை விரித்தார்.

இறுக்கமான கன மனதுடன் ICU அறைக்குள் Manaza – வை பார்க்க தாமஸ் உள்ளே நுழைந்தார். பிறக்கும் குழந்தை இந்த உலகத்தை முதன் முதலாக தன் கண்களை திறந்து பார்ப்பது போல் சோம்பலும் அசதியும் ஒரு சேர சங்கமித்த அவள் முகத்தில் இருந்து கண்கள் மட்டும் திறந்தது.

பேசுவதற்கு வார்த்தைகள் கடுகளவில் மிகவும் சிறியதாக மிகவும் சிரமமாய் “யாரு அங்கிள் நீங்க..?” என்று தாமஸிடம் கேட்டாள். “நான் தான் மா மைக்கேலின் அப்பா தாமஸ் செல்லையா” என்று அவர் சொன்னதும் இவள் கண்களின் ஓரத்தில் அவள் கன்னக்குழிகளை ஊற்று நீராய் நிரப்பும் கண்ணீர்கள் வடிந்தோடின.

Micheal – Manaza காதலை பற்றி தாமஸ் Manaza – விடம் கேட்டு தெரிந்துக்கொண்டார். அவளை Discharge செய்து தன் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். தன் மகன் காதலித்ததை தன்னிடம் சொல்லவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தாலும் Manaza – வின் கடைசி காலத்தில் அவளுக்கு மகிழ்ச்சி என்ற ஒரு மட்டும் தான் அவள் வாழ்க்கை முழுவதும் நிரம்பி கிடக்க வேண்டும் என்று அவள் ஆசிரமத்தில் வளர்ந்த எல்லா குழந்தைகளுடன் ஒரு குழந்தையாய் Manaza – என்னும் தன் மகளான மருமகளை ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து அவளிடமும் உண்மையை சொல்லாமல் இங்கிலாந்து நாட்டில் இருக்கும் மைக்கேலிடமும் உண்மையை சொல்லாமல் காலம் தாழ்த்தினார். இங்கு Manaza வழக்கம் போல் மைக்கேலுடன் தன் உரையாடல்களை தொடர்ந்து கொண்டே இருந்தாள். கொஞ்சம் Severe Bleeding அதனால Diary Show Host பண்ணல கொஞ்சநாள் என்று மைக்கேலிடம் சொல்லிவிட்டு அவள் E – Mailsக்கு வந்த வாசகர்களின் கதைகளை அந்த தொய்வான குரலில் மைக்கேலுக்கு கைப்பேசி வழியே Diary நிகழ்ச்சியை Live ஆக நடத்தினாள்.

ஒரு மாதத்தில் வேலையை முடித்துவிட்டு திரும்பி வருவதாக இருந்த மைக்கேலுக்கு அவன் அப்பா தாமஸ் அப்பாவின் உடல் சரியாக Travel-க்கு ஒத்துழைக்காத காரணத்தினால் மேலும் இரண்டு மாதங்கள் இங்கிலாந்தில் தங்கி தங்கள் Business - இன் Next Consignment வேலைகளையும் முடித்துவிட்டு வருமாறு கூறினார், சரி என்று மைக்கேலும் அப்பாவிடம் சொல்லிவிட்டு அன்று இரவே Manaza – விடமும் கொஞ்சம் திட்டுக்களுடன் சம்மதம் வாங்கினான்.

Manaza மைக்கேலின் வீட்டில் இருப்பதையும் , அவர்கள் காதல் தனக்கு தெரிந்தது பற்றியும் தாமஸ் மைக்கேலுக்கு எந்த சூழ்நிலையிலும் சொல்லவில்லை. அதே நேரத்தில் மைக்கேல் இந்தியா வரும்போது தன் வீட்டில் இருப்பதை பார்த்து ஒரு Surprise பண்ணவேண்டும் என்று Manaza-வும் அவனிடம் சொல்லவில்லை.

அடுத்த இரண்டு மாதம் கழிந்தது.
பௌர்ணமி தினத்தன்று Manaza – வின் உயிர் அதிகாலை ஐந்து மணிக்கு இந்த உலகை விட்டு பிரிந்தது.

இரண்டு நாட்களாக Manaza-வின் மொபைலுக்கு தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளுக்குள் பரிதவித்தான் மைக்கேல். Hello FM முகப்புத்தக பக்கத்தில் Manaza –வின் பழைய RJ Host செய்த ஆடியோக்களை கேட்கலாம் என அன்றைய இரவு தன் Laptop – பில் முகப்புத்தகத்தில் Hello FM பக்கத்திற்கு சென்றான்.

Hello FM Page –இன் முதல்பதிவை பார்த்தவுடன் மடியில் இருந்த லேப்டாப்பை அப்படியே சட்டென்று தான் உட்கார்ந்திருந்த Bed – இல் போட்டுவிட்டு சட சட வென பின்னோக்கி சென்று Bed – இன் நுனை கம்பத்தில் இடித்து கீழே விழுந்தான். தலையை பிடித்துக்கொண்டு மெதுவாக எழுந்து வந்து லேப்டாப்பில் அந்த பதிவை மீண்டும் பார்த்தான்,

Manaza வளர்ந்த அதே ஆசிரமத்தில் அவள் உடலை சுற்றி அவள் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள்,அந்த ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகள் படை சூழ ஆகஸ்ட் 31 அன்று காலை ஐந்து மணிக்கு Bleeding Ulcer நோயினால் சிறுவயதில் இருந்து பாதிக்கப்பட்ட Diary என்னும் உயிரோட்டமான ஒரு Show –வை Host செய்யும் உங்கள் மனம் கொள்ளை கொண்ட தாரகை RJ Manaza இந்த உலகை விட்டு பிரிந்தார். மேலும் May Her Soul Rest in Peace என்ற வாக்கியத்துடன் அந்த பதிவு இருந்தது.

ரோஜாப்பூக்கள் பூத்துக்குலுங்கும் தேவதைகள் சூழ் மேலோகத்தில் இந்த இளவரசி அங்கு உடல் மாய்த்து உயிராய் திரியும் பல ஜீவன்களுடன் தன் வருங்காலத்தை தொடருவாள் என்ற ஒரு வாசகரின் கமெண்ட் மைக்கேலுக்கு இழக்க கூடாத ஒரு இழப்பை இழந்திருக்கின்றோம் என்று உணர்த்தியது.

மைக்கேலுக்கு உண்மை தெரிந்தது. அவன் அப்பா தாமஸ் –ற்கு தெரியாது என நினைத்து அவனுக்கு வழக்கமாக போன் செய்து சாப்பிட்டயாப்பா உடம்பு எல்லாம் நல்லா இருக்கா..? என்று நலம் விசாரித்து பொதுவாக பேசினார். அப்போதும் மைக்கேல் அவன் அப்பாவிடம் சாப்டேன் பா, நல்லா இருக்கேன் பா என்று அந்த துயரத்தின் பிடியிலும் அப்பா மனம் கோணாதபடி நடந்துகொண்டான். மகனுக்கு இந்தியா வந்தவுடன் இதை பற்றி சொல்லிக்கலாம் என தாமஸ் முடிவு செய்தார். கடைசியாக அப்பா நான் கொஞ்ச நாள் லண்டன்-ல இருந்துட்டு வரேன்ப்பா எனக்கு அமைதி வேணும் இந்த ஊருல இந்த மக்கள் கிட்ட எனக்கு அது கிடைக்குதுப்பா என்று கூறினான், அது தான் உனக்கு சந்தோசம் கொடுக்கும்னா நீ பொறுமையா வா மைக்கேல் என்று சொல்லிவிட்டு அந்த இரவு நேர உரையாடல்களை இருவரும் முடித்தனர்.

மேலும் பத்து மாதங்கள் அவன் தனிமை, அவன் கோபம், அவன் அமைதி, அவன் சோகம், அவன் வெறுப்பு, அவன் தன்னிலை என எல்லாவற்றையும் இந்த Wales நகர தெருக்களும் டயானா நினைவிடத்தில் இருக்கும் மலர் வளையங்களும் இவனுடைய “10 Months of Wales Days” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையே எழுதும் இந்த அமைதியை விரும்பும் மைக்கேலையும் அவன் காதலையும் பற்றி,

காதல் தொலைந்து போனது
காதலி தன் அம்மாவுடன் தேவதைலோகம் சென்றாள்
பத்து மாதங்கள் தனிமையின் பிடியில் இருந்த இவனுக்கு ஒரே ஆறுதல் மருந்து டயானா நினைவிடம் மட்டுமே

எந்த சூழ்நிலையிலும் மைக்கேல் Weed,Alcohol,Cigarette என எந்த ஒரு போதைக்கும் தன் உடலை அர்ப்பணிக்கவில்லை. அந்த ஒரு விஷயத்தில் மட்டும் மைக்கேலுக்கு நிகர் மைக்கேல் மட்டுமே.

பத்து மாதங்களில் மைக்கேல் ஐநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்து முடித்தான். அந்த Wales நகர உலக புத்தக மேடையில், அவன் வேண்டிய தனிமையையும் அமைதியையும் இந்த பத்து மாதத்தில் அவனுக்கு கொடுத்தது இந்த ஐநூறு கணக்கான புத்தகங்களும் டயானா-வின் நினைவிடமும் Youtube வலைதளங்களில் கேட்கும் Diary With RJ Reshma (New RJ Replace of Manaza) நிகழ்ச்சியும் மட்டுமே.

Now : (நிகழ்காலம்)

இறுதியாக ஜூன் 30-ஆம் தேடி British Airways – இல் இந்தியா வந்தடைந்தான் மைக்கேல், அவனை வரவேற்க அவன் நண்பன் ஆதித்யா விமான நிலையத்திற்கு வந்திருந்தான், மைக்கேல்லை பூங்கொத்துடன் வரவேற்ற ஆதித்யா Something Different in Your Face Man, Are You Okay..? என்று மைக்கேலிடம் விசாரித்தான். ஹ்ம்ம் நான் நல்லாருக்கேன் என்ற சிறு புன்முருவளுடன் இரண்டு பெரும் காரில் அங்கிருந்து மைக்கேல் வீட்டுக்கு கிளம்பினர்,

அன்றைய இரவு கடற்கரையில் தனிமையில் அமர்ந்திருந்தான் மைக்கேல், அப்பாவிடம் இருந்து மைக்கேலின் மொபைலுக்கு அழைப்பு வந்தது.

அப்பா : ஹலோ மைக்கேல் இப்போதான் உன் நண்பன் சொன்னான் நீ இந்தியா வந்துட்டேன்னு, Are You Alright Micheal..?

மைக்கேல் : Daddy ஐ லவ் யூ! நான் உங்கள பாக்கணும் உங்க தோள்ல சாய்ஞ்சு அழுகணும், என்னோட இந்த நாள்ல நீங்க என்கூட இருக்கணும்

என்று கண்ணில் நீர் ததும்ப மைக்கேல் அவன் அப்பாவிடம் தன்னுள் அடக்கிவைத்திருந்த கண்ணீர்களை அந்த கடற்கரையின் கரையில் சிந்தினான்.

அப்பா : என்னப்பா ஆச்சு மைக்கேல்..? என் இப்படி பேசுற..? நீ இப்படி பேசி அப்பா பார்த்தது இல்லையே மைக்கேல்..?

மைக்கேல் : அப்பா இப்போகூட நடிச்சா எப்படிப்பா..? என்கிட்ட ஏன் பா நீங்க சொல்லவே இல்ல Manaza அவளோட கடைசி நாட்கள் உங்க கூட இருந்தது, நீங்க அவல ஒரு மகளா தூக்கி வளர்த்தது,அவளோட கடைசி காலத்துல நீங்க ஒரு அப்பா மாதிரி இருந்து அவளுக்கு சந்தோஷத்த கொடுத்தது, அவளுக்கு இப்படி ஒரு நோய் இருக்குன்னு ஏன் ப்பா என்கிட்டே மறைச்சிங்க..?

என்று மனதுக்குள் பூட்டி வைத்திருந்த மைக்கேலின் ஒட்டு மொத்த அழுகையும் இன்று தான் வெளிவருகிறது இந்த கடற்கரை காற்றில் ஈரப்பதமாக..!

(மைக்கேலின் அப்பாவுடன் துணையாக இருந்து Manaza-வின் கடைசி நாட்களில் அவள் தேவைகள் என எல்லாவற்றையும் ஒரு ரத்த சொந்தம் உடைய அண்ணன் போல் உடன் இருந்து பார்த்த ஆதித்யா தன் நண்பன் மைக்கேல் இந்தியா வந்தவுடன் விமான நிலையத்தில் இறங்கியதும் அவன் கடைசியாக Manaza-வை சந்தித்த அந்த Entry Gate முன் நின்று சிந்திய ஒரு சொட்டு கண்ணீரை பார்த்து தாங்கமுடியாமல் ஒட்டுமொத்த உண்மையையும் மைக்கேலிடம் காரில் வரும்போது உடைத்து விட்டான்)

அப்பாவின் அழைப்பை அழுதுக்கொண்டே துண்டித்தான் மைக்கேல். கடலின் அமைதியில் தன்னை அர்பணித்து கடல் மண்ணில் “Still You Are With Me” என்று எழுதினான்.

கடலின் அமைதியை தனக்குள் உள்வாங்கிக்கொண்டு கடற்கரையில் அமர்ந்திருந்த மைக்கேலை சட்டென பின்னால் இருந்து Manaza வளர்ந்த ஆசிரமத்தில் இருக்கும் ஒரு குழந்தை கூட்டம் சூழ “ஹே வாண்டு குட்டீஸ்” நீங்க எப்போ இங்க வந்திங்க என்று செல்லமாக எல்லாரையும் விசாரித்தான். நாங்க தாமஸ் மற்றும் ஆதித்யா அங்கிள்ஸ் கூட இங்க வந்தோம் என அக்குழந்தைகள் கூற ஒரு குழந்தை மட்டும் தான் தலையில் கட்டியிருந்த கருப்பு ரிப்பன் துணியை எடுத்து நன்றாக மைக்கேலின் கண்களை கட்டியது.

ஒரு காரில் தாமஸ் மற்றும் குழந்தைகள்,இன்னொரு காரில் ஆதித்யா Drive செய்ய மைக்கேலும் மற்ற குழந்தைகளும் அங்கிருந்து கிளம்பினர்.

“கண்ணை கட்டி எங்க கூட்டிட்டு போறீங்க” என்று குழந்தைகளிடம் மைக்கேல் கேட்டான்.
அதெல்லாம் கேக்கக்கூடாது, ஆதித்யா அங்கிள் நீங்க ஸ்பீடா போங்க” என்று குழந்தைகள் ஆதித்யாவிற்கு கட்டளை இட்டனர்.

இரண்டு கார்களும் ஒரு இடத்தில் போய் நின்றது, குழந்தைகள் படை சூழ மைக்கேல் கண்கள் கட்டப்பட்டு அந்த இடத்தின் உள்ளே சென்றான். உடன் ஆதித்யாவும் தாமஸும் சென்றனர். மைக்கேலை கூட்டி சென்ற குழந்தைகள் ஒரு அறைக்குள் மைக்கேலை தள்ளிவிட்டு கதவை மூடினர். ரிப்பனை பிரித்து கண்களை திறந்த மைக்கேல் அந்த அறையை பார்த்தான்.

அந்த அறை முழுவதும் ஐநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்ணாடி கதவுக்குள் Showcase ஆக வைக்கப்பட்டு இருந்தது. இளையராஜாவின் Karoke அடங்கிய பாடல் இசைகள் மெல்லிய சப்தத்தில் அறைக்குள் Play செய்யப்பட்டு இருந்தது. மேஜை மேல் இருந்த ஒரு பலகையில்,

“Mr.Micheal Desouza”
Managing Director
The Memories of Princess Manaza

என்று பொறிக்கப்பட்டு இருந்தது,

ஆம் Manaza வளர்ந்த இடத்தை மைக்கேலின் அப்பா தாமஸ் செல்லையா மகனின் காதலுக்காகவும் Jesus பிறப்பிடம் போல் தன் மருமகள் சிறு வயதில் இருந்து வளர்ந்த இந்த மழலையும் முதுமையும் சங்கமிக்கும் இந்த ஆசிரமத்தை மகனின் பெயரில் பல கோடி மதிப்பில் பதிவு செய்துவிட்டார்.

அந்த அறையின் ஜன்னல் கதவை மைக்கேல் திறந்தான், அவன் கண்ட காட்சி அவனால் நம்பமுடியவில்லை அந்த தினத்தில்.

“With Love Princess Manaza” என்று ஆசிரமத்தின் பின்புறத்தில் ஒரு நினைவிடம்,அங்கு நூற்றுக்கும் மேலான மலர் வளையங்கள் சூழ “Happy Birthday to Our RJ Queen” என்ற வாசகத்துடன் பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடப்பட்டது முழுக்க முழுக்க Wales நகரத்தில் இருக்கும் Princess Diana அவர்கள் நினைவிடத்தின் மாதிரியாக இந்நினைவிடம் ஒரே மாதிரியாக இருந்தது.

அறையை விட்டு வெளியே வந்த மைக்கேல் Manaza நினைவிடத்தில் ரோஜா பூக்கள் மொட்டுகளின் மேல் துளிர் விட்ட பனி உறங்கிய ஒரு மலர் வளையத்தை வைத்தான். அவனை சுற்றி நூற்றுக்கணக்கான குழந்தைகளும் ஐம்பதுக்கும் அதிகமான முதியவர்களும் சூழ்ந்து நின்று “Welcome to Our New God’s Child” மைக்கேல் என்று ஒரு சேர வாழ்த்தினர்.

~ நீ வேணும்னா பாரு உனக்காக பத்தாயிரம் தேவதை வருவாங்க

- கதை முற்றும்..!!

வாலி சொன்ன விஷயம்.
/சோகங்கள் எனக்கும்
நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே/
இதுவே வாழ்க்கை. வழியும் உணர்வுகளில் வலியும் அனுபவம். தத்துவத்திற்காக சோகத்தையும் கஷ்டத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் எல்லோருடைய தேடுதல் அமைதியையும் சந்தோஷங்களையும் சார்ந்து தான் உள்ளது. சேர்ந்தே தேடுவோம். கிடைத்தால் பகிர்வோம். கிடைக்கும் வரை தேடுவோம், கிடைத்த பின்னும் தேடுவோம். ஏனெனில் சுகம் என்பது கிடைப்பதில் அல்ல, தேடுதலில்.
நல்லா இருப்போம்

திரும்ப ரஹ்மான் சொன்னது தான் உங்களுக்கும் சொல்றேன்.
“All My life I have had a Choice of Hate and Love. I Chose Love and I am here.”

இணைந்திருங்கள்
Hello FM 106.4
Diary With RJ Reshma..!!

- A Scribbles by @Shiva_Chelliah

Final Credits :

இயக்குனர் அகத்தியன் :
காதல் கவிதை(Movie) - Main Inspiration
Hello FM 106.4 – FM Channel
A.R.RAHMAN – Quotes of Core Story
Mari Selvaraj – Quotes (Pariyerum Perumal)
Balu Mahendran – Princess Diana Thoughts
Reshma Dhynu – Usage of RJ Girl Name
Balu – கதையை மெருகேற்றிய ரசனையாளன்
Elambarithi Kalyanakumar – சில Inspirational எழுத்துக்கள்


ஒரு தெளிவுக்காக Bleeding Ulcer பற்றிய Research :

What causes a bleeding ulcer, and is it serious?
Peptic ulcers may be in the stomach, the small intestine just below the stomach,
or the food pipe above the stomach.
Sometimes, peptic ulcers can bleed (known as bleeding ulcers). More severe bleeding, known as hemorrhaging, can be life-threatening. Minor bleeding in an ulcer, however, is usually not as immediately serious and may go unnoticed, but it still requires treatment.

Fast facts on bleeding ulcers:
Symptoms vary in severity, but notably, there is a pain in the upper abdomen.
Infections and some medications can cause bleeding ulcers.
With proper treatment, bleeding ulcers can be cured.
Bleeding ulcers are usually diagnosed and often treated by an endoscopy.
A severely bleeding ulcer can cause rapid loss of blood and possibly death if left untreated.









Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ