Skip to main content

தொடரும்

03.02.2018
என் வாழ்வின் மிக முக்கிய நாள்..?

என் திருமண அழைப்பிதழ் தயார் நிலையில் இருந்தது,
என்னுடைய நண்பர்கள் சூழ் வட்டத்திற்கு மட்டும் என் சார்பில் அடித்த திருமண அழைப்பிதழ், புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் "Friends Card" !!

என்னுடைய சார்பில் யாருக்கு முதல் பத்திரிக்கை கொடுக்க வேண்டும் என்பதில் கலப்படம் இல்லா தூய பாற்கடல் போல் நான் தெளிவாக இருந்தேன்,

மதுரை காளவாசலில் என் சித்தி வீட்டில் இருந்தேன் அங்கிருந்து நான் முதல் பத்திரிக்கை கொடுக்க நினைக்கும் நபரின் வீடு மிகவும் பக்கம், நண்பனை உடன் அழைத்து செல்ல மொபைலில் உரையாடிய போது நண்பர்கள் வட்டத்தில் சில எதிர்ப்புகள்..? முதல் அழைப்பிதழ் அந்த நபருக்கு வேண்டாம், இது உன் திருமணம் விளையாட்டுக் காரியமாக உன் சுயநல போதையை தலையில் ஏற்றிக்கொள்ளாதே என்று,

சிறு தடுமாற்றம் நண்பர்களுடனான உரையாடலுக்கு பிறகு..?
என் தெளிவான முடிவு தெளிவில்லா முடிவாக இறுதிச்சுற்றை அடைந்தது சில மன வருத்தத்துடன்..! அந்த நபருக்கு முதல் அழைப்பிதழை வைக்க இயலவில்லை,

நண்பர்களுக்காக மன மாற்றம் செய்து முதல் அழைப்பிதழை நண்பன் DG Krish வீட்டில் இருந்து தொடங்கி Aathavan M  வீட்டில் கொடுத்துவிட்டு மேலும் சில நண்பர்களுடன் சேர்த்து ஒரு பத்து வீட்டிற்கு அழைப்பிதழை கொடுத்துவிட்டு மதிய உணவு இடைவேளையை நண்பனுடன் ஹோட்டலில் முடித்து பிற்பகல் மூன்று மணிக்கு வீடு திரும்பினேன்..?

வீட்டில் சிறிது நேரம் இளைப்பாறிய நேரத்தில் மனம் ஒத்துழைக்க மறுத்தது, என்ன இருந்தாலும் முதல் அழைப்பிதழுக்கு சொந்தக்கா(ரி) அந்த நபர்..? அவர்களை திருமணத்திற்கு அழைக்காமல் இருந்தால் எப்படி..? நானே கேள்வி நானே பதில் என்பன போல் கேள்வியும் பதிலும் ஒரே நேர்கோட்டில் என்னுடைய ஆழ்மனதில் பயணித்தது..?

நண்பணுக்கு போன் செய்தேன், இன்று நிகழ்ந்த உரையாடல்களை கூறினேன்,
இப்போ மணி 5.45 PM கிளம்பி ரெடியா இரு 6.15 PM உன் வீட்டுல நான் இருப்பேன் கிளம்புறோம் "நான் உன்கூட வரேன் மச்சான்"னு சொல்லிட்டு போன் வச்சுட்டான்,

நண்பணின் ஆசையை(கர்வத்தை) நிறைவேற்றுவது ஒரு விதமான போதை தானே..? நான் ஏன் என்னுடைய ஆசையை கர்வம் என்று தப்பான வார்த்தையில் சொல்கிறேன் என்று பலருக்கும் மனதிற்குள் கேள்வி எழுந்திருக்கும்..? மணி 6.15 PM நானும் அவனும்(Mohammed Shaak) அந்த முக்கிய நபருக்கு பத்திரிக்கை வைக்க வீட்டில் இருந்து கிளம்பினோம்..?

அந்த முக்கிய நபரின் விலாசம் தெரியாது வீடு தெரு சந்து என்று எதுவும் தெரியாது அவர்கள் ஹோட்டல் வைத்திருக்கிறார்கள் அந்த நபரின் தந்தை பெயர் இரண்டு மற்றும் தெரிந்த வண்ணம் அந்த நபரின் விலாசத்தை தேடி நண்பனின் டூவிலரில் விரைந்தோம் இடைவேளையில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு..?

மதுரை காளவாசல் Fenner தாண்டியவுடன் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் அந்த நபரின் தந்தை ஹோட்டல் இருக்கின்றது,அந்த ஏரியாவை அடைந்தோம் அங்கே சென்று அந்த நபரின் தந்தை பெயர் மற்றும் ஹோட்டல் வைத்திருக்கிறார் என்று ஒரு சாலையோர பூ விக்கும் பூக்கார மூதாட்டியிடம் நண்பன் விசாரித்துவிட்டு என் பக்கம் வந்தான்..?

சிவா : மச்சான் என்னாச்சு..? கண்டுபிடிச்சுட்டயா..?
ஷகில் : நமக்கு பின்னாடி இருக்க எம்.ஜி.ஆர் சிலை அருகே ஒரு சிறிய ஹோட்டல் இருக்கிறதே அது தான் அந்த நபரின் தந்தை நடத்தும் ஹோட்டல் என்றான்..?

கடைக்கு சென்றோம்..?
அந்த குடும்பத்தில் என்னை யாருக்கும் தெரியாது அது எனக்கு மிகுந்த பலம்..! ஆனால் சம்பந்தப்பட்ட அந்த நபருக்கு நான் ஒரு வேற்று கிரகத்து வாசி போல்..? என்னை பிடிக்காது என்று கூட பொதுவாக சொல்லலாம்..?
அப்பறம் ஏன் அந்த நபருக்கு நான் அழைப்பிதழை வைக்க இவ்வளவு ஆசை படுகிறேன் என்று கேட்டீர்கள் ஆனால் பதில் இதோ..!

அவர்கள் கடைக்கு சென்றோம் நானும் நண்பணும்..?

அந்த முக்கிய நபரின் அப்பா,அம்மா,அண்ணன் மூவரும் இருந்தார்கள், கடையில் அந்த பரின் தந்தையிடம் சென்று நண்பன் கேட்டான்.?

அப்பா..?
இங்க (--------) அவங்க அப்பா (---------) நீங்கதான..?

அந்த நபரின் அப்பா : ஆமாம் பா சொல்லுங்க..?

நண்பன் : நண்பனுக்கு திருமணம்..? Invitation கொடுக்க வந்துருக்கோம் (--------) இருக்காங்களா..? அவங்க Classmate நாங்க (முதல் பொய் திருமணத்திற்கு இன்னும் 999 பொய்கள் பாக்கி இருக்கின்றது)

இரண்டு வாழைக்காய் பஜ்ஜியை சாப்பிட கொடுத்து சாப்பிட சொன்னார்..? வேண்டாம் வேண்டாம் என்று சொன்ன வேகத்தில் இரண்டு பஜ்ஜியையும் நண்பன் வயிற்றுக்குள் சீராக செலுத்தினான்..?

அந்த நபரின் அப்பா : அவர்கள் வீட்டில் இருக்கிறார்கள் என்னுடன் வாருங்கள் என்று அவர் வீட்டிற்கு கூட்டி சென்றார்..?

நண்பன் முன்னே செல்ல அவர்களிடம் என்ன பேசி எப்படி அழைப்பிதழை கொடுக்கப்போகிறோம் என்கிற சிந்தனையில் (30 நொடிகளுக்குள் அந்த இடத்தில் இருந்து திருமண அழைப்பிதழை கொடுத்துவிட்டு வெளியேற வேண்டும் என்று முடிவு செய்தேன்..?

அந்த நபரின் வீட்டுக் கதவை அவர் அப்பா திறந்து உள்ளே வாருங்கள் என்று கூறிவிட்டு டியூப்லைட்டை ஆன் செய்துவிட்டு உள்ளே ஒர் அறையில் அமர்ந்திருந்த அந்த நபரை வெளியே வீட்டின் மையப்பகுதியான ஹாலிற்கு வரும்படி அழைத்தார்,

முன்னே சென்றது என் நண்பன்,
அவனை யாரென்றே அந்த நபருக்கு தெரியாது ..? இருந்தாலும் சிறிய புன்னகையுடன் நம் தமிழ் மண்ணின் விருந்தோம்பலுடன் குழப்பமுடைய முகபாவனையில் "வாங்க" என்று என் நண்பனை அழைத்தார்..?

பின்னே அழைப்பிதழ் மடல்கள் நிறைந்த ஒரு Handbag உடன் நான் மெதுவாக உள்ளே சென்றேன்..?
எனக்கு பிடித்த பிங் நிற ஆடையில் அந்த அறையில் இருந்து வெளியே வந்தாள் 

(இப்போ போகும் பார் உன் சிரிப்பு என்று ஒரு வசனம் விவேகம் படத்தில் வரும் வில்லனுக்கு அஜித் உயிரின் பயத்தை காட்டும் ஒரு காட்சியில்)

அதே வகையறா தான் இங்கும்..?
உள்ளே சென்ற என்னை பார்த்தவுடன் அந்த நபருக்கு தூக்கிவாரி போட்டது!
அந்த நபரின் கைகள் பெரிதும் பதற்றத்துடன் நடுங்கியதை நான் கண்டேன்,
முகத்தில் சாவின் உச்சக்கட்ட பயமும் தொற்றிக்கொண்டது
எதும் பிரச்சனை செய்ய இவன் இங்கு வந்திருக்கானோ..? என்கிற கேள்வியும் அந்த நபர் ஆழ்மனதில்
இருக்காதா பின்னே,
ஆறு வருடம் என்னுடனான காதல் வாழ்க்கையின் "பொற்காலம்" அந்த நபர்..?
மூன்றரை வருட பிரிவிற்கு பிறகு என்னை காணும் Unexpected Meet அந்த நபருக்கு அதிலும் அந்த நபர் வீட்டிலேயே..?

ஆம்..!
நான் இவ்வளவு நேரம் குறிப்பிட்ட
"அந்த நபர்" என் கனவு தேசத்தின் வைதேகியாம்
என்னுடைய "முந்நாள் காதலி -------- ஆவாள்..?

Hai (-----)
நல்லாருக்கிங்களா..?
மார்ச் மாதம் 5 - ஆம் தேதி திங்கட்கிழமை  என்னுடைய திருமணம் மதுரையில்!
நீங்கள் கண்டிப்பாக வரணும்
நான் ஆசை படுறேன்
கண்டிப்பா வாங்க !!

கண்டிப்பா வரேன் என்கிற அந்த பயம் கலந்த ஒரு பதில் மட்டும் அவளிடம் இருந்து இறுதியாக..!

கடைசியாக அவர்கள் அப்பா,அம்மா,அண்ணன் என்று அனைவரிடமும் கூறிவிட்டு அங்கிருந்து விடை பெற்றோம் நானும் நண்பனும்..?

என்னுடைய 30நொடி கால அவகாசம் முடிந்துவிட்டது இதற்கு மேல் நான் அங்கிருந்தால் என் கண்கள் நீர் நிறைந்த தெப்பமாய் காட்சி அளித்திருக்கும்..? நானும் சாதாரண மனிதன் தானே..?

அவளை எவ்விதத்திலும் காயப்படுத்திவிடக்கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன்..!

(பொதுநலன் கருதி எந்த ஒரு பெயர்களும் இங்கு குறிப்பிடவில்லை,
என்னுடைய முந்நாள் காதலியின் பெயர் தெரிந்தவர்கள் இங்கு அவளின் பெயரை குறிப்பிட வேண்டாம் என்ற விண்ணப்பத்துடன்)

பயணங்கள் முற்று பெற்றது !
எழுத்தும் நிகழ்ந்தமையும் : Shiva Chelliah 💛

Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ