Skip to main content

ஹே சினாமிக்கா

*❤️

" ஹே சினாமிக்கா "

50- களில் பிறந்து
70 - களின் இளமை காதலில் தவழ்ந்து
80 - களில் சினிமாவுக்குள் வந்து
தான் பார்த்த காதலை எழுத்துக்களின்
மூலம் திரைக்கு கொண்டு வந்து
பின்னர் 90 - களின் காதலில் ஒவ்வொரு
ரசிகனையும் தன் காட்சியின் தாக்கம்
மூலம் கவர செய்து பிறகு 2K - களின்
இளமை ததும்பும் ஊடல் மிகுந்த காதலை
Live in Relationship மூலம் மூன்று
தலைமுறையினருக்கும் பிடித்தவாறு
ஒரு இயக்குநர் படமெடுப்பது மிகவும்
சவாலான விஷயம் அதுவும் மூன்று
தலைமுறை படைப்புகளையும் ஹிட்
கொடுப்பது என்பது சினிமாவில்
எளிதான காரியமல்ல,

80'களில் - மௌன ராகம்
90'களில் - அலைபாயுதே
2K'க்களில் - ஓ காதல் கண்மணி

இன்றுடன் படம் வந்து
ஐந்து வருடங்கள் நிறைவு
பெற்றிருக்கிறது,

90'ஸ் கிட்ஸ் களுக்கு எப்படியோ
2K - கிட்ஸ்களுக்கு
"ஆதித்யா வரதராஜன் - தாரா
காளிங்கராயர் " இந்த Pair எப்போதும்
Favourite என்று சொல்லும் அளவிற்கு
2K - கிட்ஸ்களின் மத்தியில் படம் 2015 - ல்
தலையில் வைத்து கொண்டாடப்பட்டது
அவ்வளவு ஏன், படம் வந்து ஐந்து
வருடங்கள் பிறகும் இன்று வரை
வாட்ஸாப் ஸ்டேட்டஸ்களில் அழகான
சினாமிக்காக்கள் முதல் கண்மணிகள்
வரை இன்றும் தாரா கொண்டாடப்பட்டு
வருகிறாள், அதே நேரத்தில் எத்தனை
கள்வர்கள் இன்றும் ஆதியின் போக்கில்
காதல் மட்டும் ஓகே, கல்யாணம் என்றால்
பயம் (Lot of Commitments,Bla Bla Bla)
என்றும் இருக்கிறார்கள்,

ஆதி - தாரா ஒரு பக்கம் என்றால்
கணபதி அங்கிள் - பவானி ஆண்டி
இன்னொரு பக்கம்,

படத்தின் லீட் ஆதி - தாராவை விட
கணபதி - பவானி காம்பினேஷனில்
மணிரத்னம் அவர்களின் எழுத்து திறமை
பாற்கடல் அமிர்தம் போல அள்ளி அள்ளி
பருகும் அளவிற்கு மொத்த அழகையும்
ஒன்று சேர்த்து எழுதப்பட்டிருக்கும்,

இங்கு நிறைய பேர் 2K - Culture ஆன
Live in Relationship மிகவும் தவறு
அதை மணி சார் படமாக்கிய விதமும்
தவறு இந்த படத்திற்கு கொண்டட்டம்
ஒன்று தான் அவசியம் என்றெல்லாம்
சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள்
வறுத்தெடுத்த கதை எல்லாம்
இந்த படத்திற்கு உண்டு,

ஹ்ம்ம், இந்த படத்தின் Relationship -
குள்ள இருக்க கொஞ்சம்
நெருடல்களையும் அந்த நெருடல்
பூங்கொத்து போல மிகவும் அழகான
பெட்டகமாக மாறும் தருவாய்யையும்
கொஞ்சம் எனக்கு தெரிந்தவரை
விவரிக்கிறேன் முடிந்த அளவு முயற்சி
செய்து,

Live in Culture - நம்ம ஊருக்கு செட்
ஆகாத ஒரு விஷயம் தான் கரெக்ட்,
அதை மணிரத்னம் எப்படி இங்கே
கையாண்டிருக்கிறார் என்பதே
படத்தின் மிகபெரிய பலம்,

எந்த கமிட்மென்ட்ஸ்க்குள்ளும்
தன்னை நுழைத்துக்கொள்ளாமல்
Game Developing - IT Fun, Onsite Plan
என தன்னை சுதந்திரமாய்
வைத்துக்கொள்ளும் ஆதி முதன்
முதலாக ஒரு தற்கொலை முடிவில்
ஈடுபடும் தாராவை ஒரு ரயில்
நிலையத்தில் சந்திக்கிறான்,

பிறகு நட்பு, நட்பு காதலாக மாறும்
தருணம் என அனைத்திலும் ஆதி - தாரா
இருவரரின் Wavelength - களும் ஒரே
நேர்கோட்டில் தான் பயணம் செய்கிறது,

காதல் ஊடல் வழியே காமமாக
மாறுகிறது, திருமணத்திற்கு முன்
இருவரும் ஒன்றாய் ஒன்றாய் ஒரே
வீட்டில் Paying Guest ஆக தங்கும்
Live in முறைக்கு இருவரும்
தங்களை இணைத்துக்கொள்கின்றனர்,

அந்த Paying Guest - ஆக தங்கும்
வீட்டில் ஒரு முதுமை காலத்து
தம்பதியினர் இருக்கின்றனர்,

"கணபதி - பவானி"

பவானி ஆண்டி :

கர்நாடக இசை பிரியை மற்றும்
அதில் கை தேர்ந்தவரும் கூட,
சீக்கிரமாக மறக்க கூடியது,
Loss of Motivation என்ற Symptoms
கொண்ட Neurodegenerative Disease
என்று சொல்லப்படும் "Alzheimer"
என்னும் நோய் பவானி ஆண்டிக்கு
இருக்கும்,

கணபதி அங்கிள் :

எந்நேரத்திலும் தன் சுயநினைவை
இழக்கும் ஒரு காதல் மனைவிக்கு
பணிவிடை செய்வது, பவானி ஆண்டிக்கு
சுயமே மறந்தாலும் கணபதி என்ற ஒரு
மனிதன் மட்டும் எண்ணத்தில் இருக்கும்
அளவிற்கு இருவருக்கும் அப்படி ஒரு
காதல், தன் மனைவிக்காகவே ஒரு
வாழ்க்கை வாழ்பவர் கணபதி அங்கிள்,

முதுமையில் தான் காதல்
மழலை போல புது பிறப்பெடுக்கும் என்று
சொல்லுவார்கள், அப்படி ஒரு காதலுடன்
வாழும் இவர்களின் வீட்டில் Paying Guest -
ஆக இக்காலத்தின் Live in முறையில்
ஆதி - தாரா தங்கி இருக்கின்றனர்,

ஒரு நாள் தாராவிற்கு தன் கனவான
மேல் படிப்பிற்கான பாரிஸ் நாடு
செல்வதற்கு விசா Approve ஆகிறது
ஆனால் ஆதியை பிரிந்து செல்ல அவள்
மனம் தவிக்கின்றது இதை கணபதி
அங்கிளிடம் அவள் கூறுகிறாள்,

ஆதி - க்கும் அவன் வடிவமைத்த Game
Onsite - ற்கு Approve ஆகி வீடியோ
கேம்ஷின் Skills Learning Development -
ற்காக US செல்ல தயார் ஆகிறான்
அவனுக்கும் தாராவை பிரிந்து
செல்ல மனம் தவிக்கிறது,

ஆதியும் தாராவும் ஒரு பத்து நாள்
பிரிவு,தவிப்பு, அழுகை,ஏக்கம்
இதெல்லாம் எதுமே இல்லாம
சந்தோஷமா ஊர் சுத்திட்டு அவர் அவர்
ஆசை பயணம் நோக்கி பிரிந்து
போகலாம் என முடிவு செய்கிறார்கள்,

ஜாலியாக சுற்றிவந்த இருவரின்
வாழ்விலும் காதல் கொஞ்சம்
கொஞ்சமாக மலர்ந்தது, ஆம் ஒரு உறவு
பிரியும் போது தானே அவர்களிடத்தில்
அன்பும் அரவணைப்பும்
அதிகமாகும்,அந்த அதீத அன்பும்
அரவணைப்பும் காதல் என்னும்
உருவகமாக மாறுகிறது இங்கே,

சந்தோஷமாக ரெண்டு மூணு நாள்
கழிந்தாலும் அடுத்து வரும் நாட்கள்
எல்லாம் அழுகை,செண்டிமெண்ட்ஸ்,
சண்டை,தவிப்பு என்றே இருவருக்கும்
செல்கிறது,

காதலில் விழுந்துவிட்டால் தவிப்பின்றி
இருந்துவிட முடியுமா என்ன..? நாம்
நடித்தாலும் காதல் காட்டிக்கொடுத்து
விடும் என்பது போல் இருவரும்
தங்களுக்குள் தங்கள் காதலை உணர
ஆரம்பிக்கும் நேரத்தில் மனம்
பரிதவிக்கும் சமயத்தில் ஒரு நிகழ்வு
நடக்கிறது,

பவானி ஆண்டி காணாமல் போகிறார்,
கொட்டும் மழையில் மும்பை மாநகத்தில்
பவானி ஆண்டியை தேடி இருவரும்
காரில் ஒன்றாக செல்கின்றனர், ஒரு
பக்கம் கணபதி அங்கிளும் தேடுதல்
முயற்சியில் இறங்குகிறார் தன் காதல்
மனைவியை தேடி,

காரில் செல்லும் இருவருக்கும்
நடக்கும் விவாதத்தில் பிரிவின் தவிப்பு
அதிகமாகிறது, கணபதி அங்கிள் பவானி
ஆண்டியை பார்த்துக்கொள்வது போல்
யாராலும் பார்த்துக்கமுடியாது என தாரா
கூற ஆதி அதை மறுக்கிறான்,
அதெல்லாம் பாத்துக்க முடியும்
என பொதுவாக சொல்கிறான்,

இவ்வளவு நாள் இருவருக்கும்
சுமையாக இருந்த கல்யாணத்தை
பற்றி தாரா ஆதியிடம் கேட்கிறாள்,

நீ பாரிஸ் போ கீரிஸ் போ
ஆனா என்ன கல்யாணம்
பண்ணிட்டு போ

- என ஆதி தாராவிடம் சொல்கிறான்,

ஒரு Positive Vibe இருக்குமிடத்தில்
நாமும் இருந்தால் நமக்கு ஒரு புது
வெளிச்சம் பிறக்கும் தானே
அந்த கூற்று தான் இங்கேயும்,

பிறகு ஒரு கூட்டம் நிறைந்த சலசலப்பான
இடத்தில் பவானி ஆண்டியை ஆதியும்
தாராவும் பார்க்கின்றனர், தன்
பாதிக்கப்பட்டிருக்கும் நோயினால் தன்
சுயநினைவின்றி அவர் இங்கே வேறு
ஒரு இடத்திற்கு வந்து விடுகிறார்,
அவர்களை அழைத்துச்சென்று
இருவரும் கணபதி அங்கிளிடம்
ஒப்படைக்கின்றனர்,

மழையில் நனைந்த தன் காதல்
மனைவிக்கு ஈரக்கூந்தலை துவட்டிவிட்டு
பவானி ஆண்டிக்கு தேவையான
பணிவிடைகளை கணபதி அங்கிள்
அங்கு அவரது அறையில்
செய்துக்கொண்டிருப்பார்,

ஆதி - தாரா இருவரும் திருமணம்
செய்யலாம் என முடிவெடுத்து கணபதி
அங்கிள் - பவானி ஆண்டி தலைமையில்
திருமணம் செய்துகொண்டு அவர் அவர்
ஆசையான US மற்றும் Parris
செல்கின்றனர் அவர்களின்
கனவுகளுக்காக, படமும் நிறைவு
பெறுகிறது,

நெட்டிசன்கள் Live in - பற்றி தப்பாக
மணிரத்னம் படம் எடுத்திருக்கிறார் என
கூறினார்களே அவர்கள் சொல்வதை
போல் பார்த்தால் கடைசி வரை ஆதியும்
தாராவும் live in - இல் தங்கள் Relationship
- ஐ கொண்டு செல்லவில்லையே,

ஒரு முதுமை காதலை பார்த்து மனம்
உருகி கல்யாணத்திற்கு பிறகு
இவ்வளவு அழகான விஷயங்கள்
திருமண வாழ்க்கையில் இருக்கிறது என
புரிந்து காதல் செய்து நமது கலாச்சாரம்
தான் சிறந்தது என திருமணம்
செய்துக்கொண்டு பின்னர்
தங்களுக்கென இருக்கும் தனிப்பட்ட
ஆசைகளுக்ககாகவும் தங்களின்
அடிப்படை தரத்தை உயர்த்திக்கொள்ளும்
நோக்கில் இருவரும் அந்த பயணத்தை
மேற்கொள்கின்றனர்,

எவ்வளவு அழகான ஒரு விஷயத்தை
கையில் எடுத்து மணிரத்னம் அவர்கள்
நமக்கு கொடுத்திருக்கிறார், 58 வயது
இந்த படம் இயக்கும் போது மணிரத்னம்
அவர்களின் வயது, கவிஞர் வாலியை
எல்லோரும் சொல்லுவாங்க
வயசானாலும் அவரோட வரிகள்ல
இளமை ததும்பும் - ன்னு அதே தான்
மணிரத்னம் அவர்களுக்கும்,
வயதானாலும் அவர் எழுத்துக்களில்
இன்னும் பதினெட்டு வயது சிறுவன்
தான்,

ஏ.ஆர். ரஹ்மான்,வைரமுத்து,
ஸ்ரீகர் பிரசாத், P.C.ஸ்ரீராம்

நால்வரும் மணிரத்னம்
அவர்களின் படை தளபதிகள்,

தன் அரசனை சுற்றி வட்டமிட்டு
அவனின் எண்ணத்திற்கேற்ப
செயலை முடித்துக்கொடுக்கும்
வித்தை தெரிந்தவர்கள் இவர்கள்,

கண்மணியையும் (தாரா)
கள்வனையும் (ஆதி)
கொண்டாட வாருங்கள்
என் எழுத்துக்களுடன் சேர்ந்து..!!

Scribbles by
Shiva Chelliah : )

Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ