Skip to main content

Posts

ஆறாவது விரலில் நட்சத்திரம்

மிக நீண்ட அடர்த்தியான கூந்தல் நீளம் கொண்ட அந்த பெண்ணுக்கு உடம்பில் இருந்த ஏதோ ஒரு பெயர் தெரியாத நோயினால் வலது கையின் கட்டை விரலுக்கு அருகே உள்ள விரலானது பாதி அளவு வெட்டப்பட்டு இருந்தது,இதுவும் ஒரு வகை "ஊனம்" என்றே சொல்லலாம்..? உடுக்கை இழந்தவன் கை போல என்ற பழங்கால வாக்கியம் ஒன்றை நாம் பாடம் வழியாகவும் செவி வாயிலாகவும் கேட்டும் படித்தும் அறிந்துள்ளோம், ஆனால் அந்த பெண் அதை "ஊனம்" என கருதவில்லை, அவள் கணவனும் இறந்து ஒன்றரை வருடங்கள் தான் ஆகியிருந்தது, அவளுக்கு அப்போது பதினோறு வயதில் ஒரு மகன் இருந்தான், பதினோறு வயதாகும் அவள் மகனுக்கு தட்டில் இருக்கும் சாப்பாடை கையில் எடுத்து சாப்பிட தெரியாது, இலையுதிர் காலங்களில் சாலைகளின் வழித்தடங்கள் மீது படர்ந்து கிடக்கும் இலை போல அவள் மகன் அந்த ஒரு தட்டு சாதத்தை சாப்பிட்டு முடிப்பதற்கு முன் தன் உடம்பெல்லாம் அந்த சாதத்தை சிந்தி அவன் குறும்புத்தனத்துக்கேற்ற ஒப்பற்ற அழகு சேர்ப்பான், அதனாலோ என்னவோ வெட்டப்பட்ட தன் விரல்களின் வலியையும் பொருட்படுத்தாமல் தன் மகனுக்கு அந்த சாப்பாடு முழுவதையும் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் தன் கையால...

Oh Crazy Minnal

உலகின் சமநிலை பரப்பை ஐந்திணை கொண்டு நம் பண்டைய கால கடவுள் பிரித்திருக்கிறார்கள் என்று நாம் பள்ளிப்பருவத்தில் கோனார் தமிழ் உரையில் படித்து தெரிந்திருக்கிறோம், ஐந்திணை நிலங்களான குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய ்தல்,பாலை என்று ஒவ்வொரு நிலங்களுக்கும் தனித்தனியே ஒரு கடவுள்,அங்கு வாழும் மக்களுக்கு ஒரு பொதுவான தொழில், பொதுவான உணவு கடைபிடிப்பு என்று நம் முன்னோர் காலத்து மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர், ஆனால் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் காலில் கொதிக்கும் சுடு தண்ணீரை ஊற்றியது போல் ஒரு கட்டுப்பாடின்றி உலாவுகின்றனர், பண்டைய கால சமாச்சாரங்கள் அழிக்கப்பட்டு ஆண்ட்ராய்ட்,விண்டோஸ்,ஆப்பி ள் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் பிடியில் நாம் வேற்று கிரகத்தில் வாழ்வது போல் நாளுக்கு நாள் Advance என்னும் கலாச்சாரத்தை நோக்கி மேலே மேலே சென்று கொண்டு இருக்கிறோம், கலாச்சாரம்,பண்பாடு என்று மக்கள் வேறுபட்டாலும் உணவு முறை,வழிபாட்டு கடவுள் என்று மாறினாலும் அன்றிலிருந்து இன்று வரை பூமியில் மனிதர்களால் அதிகம் தேடப்படுவதும்,அதிகம் வேண்டுவதும் "அன்பு" என்ற மூன்று மந்திரம் தா...

கவலை வேண்டாம்

ஏறக்குறைய இருபத்தி நான்கு வருடங்கள் முன்னோக்கி நகருவோம், அன்று அபிமன்யுவின் வயது ஐம்பது ஆகி மூன்று மாதங்கள் ஆகயிருந்தது,,? நரை வந்த பின் தான் உலகம் புரியும் என்பது போல் அவன் முகமெங்கும் புரிதலின் ஒளி சற்று அதிகமாகவே காணப்பட்டது, பாதி முதுமை கடந்த பின்பு அவன் காணும் விஷயங்கள் யாவும் பார்க்கும் காட்சிகள் யாவும் பக்குவமாகவும் தெளிவாகவும் அவன் கண் வழியே அறிவாற்றலுடன் காணப்பட்டது, முகமெங்கும் கருப்பு சாயம் பூசியது போல் தாடியின் உயரம் வளர்ந்து தொங்க கரும்புதருக்குள் அவன் முகம் காலையில் பூத்த அனிச்சம் பூ போல் சற்று மலர்ந்து இருந்தது, (குறிப்பு - பெண்களை மட்டுமே பூவுடன் வர்ணிக்க வேண்டும் என்ற கூற்றை உடைப்போமாக) அன்று நல்ல மழை, வருணன் தன் கருணையை அவன் மீது பொழிய அவனோ அதன் தன்மையை உள்வாங்கிக்கொண்டு காலை வேளையில் கால்களுக்கு தெம்பு கொடுக்க அந்த தெரு முனையில் இருக்கும் கார்டனில் அகலம் பதித்து நடந்து கொண்டிருந்தான், இங்கு அவன் கண்ட காட்சிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் வேற்றுமையில் கராத்தே பழகும் குழந்தைகள் செய்த்தித்தாள் படிக்கும் மனிதர் உடற்பயிற்சியில் ஈடுபடும் ஆண் பெண் அருகம்புல் ஜ...