Skip to main content

கவலை வேண்டாம்


ஏறக்குறைய இருபத்தி நான்கு வருடங்கள்
முன்னோக்கி நகருவோம்,
அன்று அபிமன்யுவின் வயது ஐம்பது ஆகி
மூன்று மாதங்கள் ஆகயிருந்தது,,?

நரை வந்த பின் தான் உலகம் புரியும்
என்பது போல் அவன் முகமெங்கும்
புரிதலின் ஒளி சற்று அதிகமாகவே காணப்பட்டது,
பாதி முதுமை கடந்த பின்பு
அவன் காணும் விஷயங்கள் யாவும்
பார்க்கும் காட்சிகள் யாவும்
பக்குவமாகவும் தெளிவாகவும்
அவன் கண் வழியே
அறிவாற்றலுடன் காணப்பட்டது,

முகமெங்கும் கருப்பு சாயம் பூசியது போல்
தாடியின் உயரம் வளர்ந்து தொங்க
கரும்புதருக்குள் அவன் முகம்
காலையில் பூத்த அனிச்சம் பூ போல்
சற்று மலர்ந்து இருந்தது,

(குறிப்பு -
பெண்களை மட்டுமே பூவுடன்
வர்ணிக்க வேண்டும் என்ற கூற்றை உடைப்போமாக)

அன்று நல்ல மழை,
வருணன் தன் கருணையை
அவன் மீது பொழிய
அவனோ அதன் தன்மையை உள்வாங்கிக்கொண்டு
காலை வேளையில் கால்களுக்கு தெம்பு கொடுக்க
அந்த தெரு முனையில் இருக்கும் கார்டனில்
அகலம் பதித்து நடந்து கொண்டிருந்தான்,

இங்கு அவன் கண்ட காட்சிகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம் வேற்றுமையில்

கராத்தே பழகும் குழந்தைகள்
செய்த்தித்தாள் படிக்கும் மனிதர்
உடற்பயிற்சியில் ஈடுபடும் ஆண் பெண்
அருகம்புல் ஜூஸ் விற்கும் அண்ணே
அரசியல் அரட்டை அடிக்கும் முதியவர்கள்

என்று அவன் கண்ட மனிதர்கள்
வேற்றுமையில் பல விதங்கள் ஒவ்வொரு ரகமாய்,

காலை பனி முகத்திற்கு நேரே தென்றலாய் வீச
பூங்காவின் அழகியல் சார்ந்த காட்சிகளை
அபிமன்யு தன் இருக்காலின் முட்டுக்களையும்
அமுக்கி கொண்ட வாரே
தொங்கும் தோட்டமான ஊஞ்சலில்
குழந்தை போல் ஆடிக்கொண்டு இருந்தான்
அருகில் இருந்த டீ கடையில் ஒலித்த
"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்"
என்ற இளையராஜா பாடலை கேட்டவாறு,

அதிகாலையில் பெய்யும் மழையை
அபிமன்யு மிகவும் விரும்புவான்,
பனி விழும் இரவுகளின்
ஒட்டு மொத்த குளிர்ச்சியையும்
அதிகாலை மழையானது அள்ளிக்கொண்டுவந்து
நம் உச்சியினை குளிரச்செய்யும்,
ஆதிசேஷனின் உச்சியை குளிர செய்த
அவன் மனைவி கங்கை போல்..?

மழை நேரங்களில் பொதுவாகவே
குடையை தவிர்ப்பவன் அவன்,
குடைக்குள் மழை என்பன போல்..?
ஒருவேளை அவன் குடையை கையில் வைத்திருந்தாலும்
குடையை நேராக கையில் பிடிக்க தெரியாது அவனுக்கு,
மழைகாற்றின் அசைவுகளுடன் சேர்ந்து
இவன் கை செல்லும் திசையும்
எதிர் எதிர் வினையாகவே அமையும்,

அபிமன்யு என்பவன்
தன் வாழ்வில் சில தேடல்களுடன்
தன்னை அறிதல் என்னும் Self Realisation வாயிலாக
தன் வாழ்க்கை தவிப்பை கடக்கின்றவன்,
முடிந்த வரை பிறரின் சிரிப்பில்
தன் துக்கத்தை தொலைப்பவன்
என்றே சொல்லலாம்,
பிறர் சிரிப்பின் சுகத்தில் நனைவது
அவனுக்கு கொள்ளை பிரியம்,
அது அவனுடைய Passion - உம் கூட..?

தன் ஐம்பது வயதில்
காலின் முட்டை பிடித்தவாறு
பூங்காவின் ஊஞ்சலில் தன் இளமை நேரத்து
வசந்த காலங்களின் கொஞ்சும் நினைவலைகளில்
பத்து வயது சிறுவன் போல் 32 பற்களும் தெரிய
தனக்கு தானே உற்சாகப்பட்டு
தனக்கு தானே சிரிக்கவும் செய்தான்
அருகில் விளையாடிக்கொண்டிருந்த
குழந்தைக்கு தான் வைத்திருந்த
Dairy Milk Chocolate. - ஐ கொடுத்த வண்ணம்..?

Dairy Milk Chocolate. - ஐ வாங்கிய குழந்தை
தென்னாட்டு அரசனுக்கு இருக்கும்
பயமுறுத்தும் முறுக்கு மீசை போல்
சாக்லேட்-டின் அடர்ந்த காக்கி நிறம்
அதன் செவ்விதழுக்கு மேல் படர்ந்து விளங்க
இவன் கொடுத்த சாக்லேட்டை உண்டு மகிழ்ந்து
அது சாப்பிடும் அழகை
இவனையும் பார்க்கவைத்து
இவனும் "மகிழ்வித்து மகிழ்" என்று சொல்லாமல் சொல்லியது இவனுடைய காரணிகளை..?

காட்சிகளின் ரசனையில்
மூழ்கி இருந்த அபிமன்யுவின் அருகில்
ஒரு காலேஜ் படிக்கும் இளைஞன் அமர்ந்தான்,
அவன் பெயர் குரு..?
தினமும் அவனும் பூங்காவிற்கு வந்து
உடற்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டவன்,
அவன் 26 வயது நிரம்பிய
சிந்தனையில் ரசனை மிக்க ஒரு இளைஞன்,
அவன் நிறைய புத்தகங்கள்
படிக்கும் பழக்கம் கொண்டவன்,

என்ன தாத்தா இங்க உக்காந்து இருக்கீங்க.?
மழையை ரசிச்சுட்டு இருக்கிங்களா இல்ல
பூங்காவில் சுற்றித் திரியும் மனிதர்களின்
நடவடிக்கைகளை கவனிக்கிறீர்களா..? என்றான்

காலை வேளைகளில் நடக்கும்
அதிசயங்கள் தான் எத்தனை
என்று வியப்புடன் காண்கிறேன்,
நீ வருவதற்கு சிறிது நேரம் முன்பு
இரண்டு காட்சிகளை இந்த பூங்காவில்
நான் கண்டேன் மிகவும் ரசித்து சிந்தித்து..?

முதல் காட்சியும் அதன் தாக்கமும் :

சீருடை அணிந்து
பள்ளிக்கு ஒரு சிறுவன் சென்றான்
தன் அம்மாவின் இடுப்பில் ஏறி அமர்ந்தவாறு,
அந்த சிறுவனை பற்றி சொல்ல வேண்டுமென்றால்
நீங்கள் சொல்லும் Chubby வகையறா தான்,
மழையினால் சாலையின் பள்ளத்திலும் சேற்றிலும்
தன் மகன் நடந்து போனால்
விளையும் இடிபாடுகளை தவிர்க்க
தன் வலிகளை தாங்கிக்கொண்டு
அந்த பிஞ்சு மலரின் பாதங்கள்
தரையை தொடாமல்
ரதத்தில் சுமந்து செல்வது போல்
அந்த மேடு பள்ளம் நிறைந்த
குண்டு குழியுமான சாலைகளில்
அந்த சிறுவனும் அவனுடைய அம்மாவும்
பவனி சென்றார்கள் தங்க ரதம் போல்..?

இரண்டாம் காட்சியும் அதன் தாக்கமும் :

சீருடை அணிந்து
பள்ளிக்கு ஒரு சிறுவன் சென்றான்
தன் அப்பாவின் சைக்கிளில் ஏறி அமர்ந்தவாறு,
அந்த சிறுவனை பற்றி சொல்ல வேண்டுமென்றால்
நீங்கள் சொல்லும் Chubby வகையறா தான்,
மழையினால் சாலையின் பள்ளத்திலும் சேற்றிலும்
தன் மகன் நடந்து போனால்
விளையும் இடிபாடுகளை தவிர்க்க
தன் கால் வலியையும் பொறுத்துக்கொண்டு
அந்த பிஞ்சு மலரின் பாதங்கள்
தரையை தொடாமல்
ரதத்தில் சுமந்து செல்வது போல்
அந்த மேடு பள்ளம் நிறைந்த
குண்டு குழியுமான சாலைகளில்
அந்த சிறுவனும் அவனுடைய அப்பாவும்
பவனி சென்றார்கள் தங்க ரதம் போல்..?

இங்கு இன்னொரு சிறு காட்சியும் அரங்கேறியது,

சரியான சுழற்சி முறையில்
சுழன்ற சைக்கிளின் சக்கரம்
ஒரு மளிகை கடை முன் சட்டென நின்றது,
அந்த சிறுவனின் தந்தை
50-50 பிஸ்கட் ஒன்றை வாங்கி வந்து
இவனிடம் கொடுத்தார்,
அச்சிறுவனுக்கு 50-50 பிஸ்கட் என்றால்
கொள்ளை பிரியம் போல்,
சேற்றில் முளைத்த செந்தாமரை போல்
அவன் முகம் பேசும் சந்தோசத்தின் அழகு தான்
நான் கண்ட வியப்பு என்னும் மந்திரமோ..?

இந்த இரண்டு காட்சிகளும்
என்னை என் பழமை சார்ந்த தினங்களுக்கு
கொண்டு சென்றது என்று
அபிமன்யு அந்த இளைஞன் குருவிடம் கூறினான்,

குரு சிரித்தான்,
தாத்தா உங்களுக்கு அம்மா அப்பா-ன்னா
ரொம்ப புடிக்கும் போல..?
அதிலும் அப்பா - ன்னா உசுரு போல என்றான்..?

ரொம்பவே குரு,
அந்த மனுஷன புகழாத ஆளே இல்ல,
அவர் செஞ்ச விஷயங்கள்
அவர் பழகிய அன்பான விதங்கள்
மற்றவர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதை
பிறர் தேவை அறிந்து உதவும் தன்மை
அண்ணே என்று மதுரை ஸ்லாங்கில்
தன் சக மனிதர்களிடம் மிகவும்
நம்பகத்தன்மையான மனிதனாய் பழகியது,
எம்.ஜீ.ஆர் பாடல்களை விரும்பி கேட்பது,
இசை ஆர்வத்தை மிகைப்படுத்திக்கொள்வது
என்னுடைய ஆசையை பூர்த்தி செய்வதும்
என் ஆசைக்கு அதிகப்படி செலவிடுவதும்
அம்மா மீது உள்ள தீராக்காதலும்
அம்மா உடல்நலம் பற்றிய கவலையும்
அவர் உடல்நலம் பற்றி கண்டுகொள்ளாததும்

என்று அவர் வாழ்கையை
அவருக்காக "வாழாமல் வாழ்ந்தவர்"
என்று சொல்லுவது தான் சரி குரு,
என்று அப்பாவின் கூற்றுகளை
குருவிடம் சொல்லி சிறு புன்னகையை
முகத்தில் விதைத்தான்,
அந்த புன்னகையில் சிறுவயதிலேயே
அவன் அப்பாவை இழந்த தாக்கம் மேலோங்கியது..?
எனினும் புன்னகைத்தான் மறுபடியும் ஒருமுறை,

சரி தாத்தா,
அம்மா பற்றிய சில வார்த்தைகள்..?

சுருக்கமாக சொல்கிறேன் குரு,
இரும்பு மனுஷின்னு சொல்லலாம்
அப்பாவோட எல்லா நிலையிலும் உடனிருந்தவங்க
நான் பிறக்கும்போது தாய்ப்பால் கொடுத்தால்
குழந்தைக்கு ஆபத்து என்ற காரணத்தினால்
குழந்தையான என் உடல்நலம் வேண்டி
அவள் கனவான தாய்ப்பால் கொடுக்கும்
ஸ்தானத்தை தவிர்த்தவள்
என் உயிர் மூச்சு இந்த பூமியில்
சுவாசிக்க வேண்டும் என்ற
ஒற்றை காரணத்துக்காக
தன் வாழ்நாள் கனவை தொலைத்தவள்,

என்று அவர் வாழ்கையை
அவருக்காக "வாழாமல் வாழ்ந்தவர்"
என்று சொல்லுவது தான் சரி குரு,
என்று அம்மாவின் கூற்றுகளை
குருவிடம் சொல்லி சிறு புன்னகையை
முகத்தில் விதைத்தான்,
அந்த புன்னகையில் சிறுவயதிலேயே
அவன் அம்மாவை இழந்த தாக்கம் மேலோங்கியது..?
எனினும் புன்னகைத்தான்
மறுபடியும் இன்னொருமுறை
இந்த முறை கண்களில் சிறு கண்ணீர்த்துளி,

அம்மாவை பற்றி சொல்லி முடித்த பின்பு
என்ன குரு ஒன்னும் பேசமாட்ற..? என்று
குருவிடம் திரும்பினான் அபிமன்யு..?

அங்கு குரு இல்லை,
குரு உட்கார்ந்த தடமும் இல்லை
அபிமன்யு சுற்றிப்பார்த்தான் பூங்கா முழுவதும்
அந்த பூங்காவில் மனித தடமே இல்லை,

மழைச்சாரலும் இல்லை
கராத்தே கற்ற குழந்தைகளும் இல்லை
செய்தித்தாள் படிக்கும் மனிதர்களும் இல்லை
உடற்பயிற்சி செய்யும் ஆண் பெண்ணும் இல்லை
அருகம்புல் ஜூஸ் விற்கும் அண்ணனும் இல்லை
அரசியல் அரட்டை அடிக்கும்
வயது வரம்பான முதியர்வர்களும் இல்லை,

மாயப்பின்பமாக இருந்தது
மயான அமைதி சூழ்ந்தது
கண்களை மூடினான்
இரண்டு நிமிடம் அமைதி காத்தான்
அபிமன்யு அபிமன்யு என்று தன் பெயரை
தனக்கு தானே சொல்லிக்கொண்டான்,

கண்களை திறந்தான்
அவன் எதிரே ஒரு கணிப்பொறி
அதில் அபிமன்யு,குரு என்கிற பெயரில்
"கவலை வேண்டாம்" என்ற தலைப்பில்
அவன் இந்த கதையை முழுவதுமாக
Type செய்து கொண்டு இருந்தான்
முகப்புத்தகம் வாயிலாக
அவனுக்கு பிடித்த 50-50 பிஸ்கட்டை சுவைத்தவாறு,,?

அடுத்த சீன்-ன்னு தெரியவேணாம்
தெரிஞ்சா வாழ்வே Bore-ருடா
Live the Moment - Moment...?

"கவலை வேண்டாம்"
Well Prepared & Penned by Shiva Chelliah 🖤

Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ...