மிக நீண்ட அடர்த்தியான கூந்தல் நீளம் கொண்ட அந்த பெண்ணுக்கு உடம்பில் இருந்த ஏதோ ஒரு பெயர் தெரியாத நோயினால் வலது கையின் கட்டை விரலுக்கு அருகே உள்ள விரலானது பாதி அளவு வெட்டப்பட்டு இருந்தது,இதுவும் ஒரு வகை "ஊனம்" என்றே சொல்லலாம்..?
உடுக்கை இழந்தவன் கை போல என்ற பழங்கால வாக்கியம் ஒன்றை நாம் பாடம் வழியாகவும் செவி வாயிலாகவும் கேட்டும் படித்தும் அறிந்துள்ளோம்,
ஆனால் அந்த பெண் அதை "ஊனம்" என கருதவில்லை, அவள் கணவனும் இறந்து ஒன்றரை வருடங்கள் தான் ஆகியிருந்தது, அவளுக்கு அப்போது பதினோறு வயதில் ஒரு மகன் இருந்தான், பதினோறு வயதாகும் அவள் மகனுக்கு தட்டில் இருக்கும் சாப்பாடை கையில் எடுத்து சாப்பிட தெரியாது, இலையுதிர் காலங்களில் சாலைகளின் வழித்தடங்கள் மீது படர்ந்து கிடக்கும் இலை போல அவள் மகன் அந்த ஒரு தட்டு சாதத்தை சாப்பிட்டு முடிப்பதற்கு முன் தன் உடம்பெல்லாம் அந்த சாதத்தை சிந்தி அவன் குறும்புத்தனத்துக்கேற்ற ஒப்பற்ற அழகு சேர்ப்பான், அதனாலோ என்னவோ வெட்டப்பட்ட தன் விரல்களின் வலியையும் பொருட்படுத்தாமல் தன் மகனுக்கு அந்த சாப்பாடு முழுவதையும் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் தன் கையால் ஊட்டிவிட்டு அவனுக்கு வயிராற உணவளித்து அதில் பேரின்பம் அடைவாள்..?
ஏறத்தாழ பதினைந்து வருடங்கள் கழிந்தன, அந்த பெண் அவள் மகனின் பண்ணிரெண்டாவது வயதில் இந்த உலக ஜீவ ராசிகளிடம் இருந்து விடை பெற்றாள், இன்று அவள் தூக்கி வளர்த்த மகனுக்கு இருபத்தி ஆறு வயது முடியப்போகிறது இன்று வரை அவன் கையில் எடுத்து சாப்பிடும் போது அவன் அம்மாவிற்கு வெட்டப்பட்ட வலது கை அந்த கட்டை விரலின் பக்கத்து விரல் இன்று வரை இவன் சாப்பிடும் போதும் செயலற்று இருக்கிறது, ஆம் ஐந்து விரல்களையும் ஒன்றாக சேர்த்து வச்சு சாப்பிடு என்று இவனுக்கு அறிவுரை வழங்காத பெரியோர்களும் இல்லை, நான்கு விரல்களில் சாப்பாடை எடுத்து சாப்பிடுகிறான் என்று இவனை கேளி செய்யாத நட்பு வட்டாரங்களும் இல்லை, ஆம் இன்று வரை அவன் சாப்பிடும் போது அந்த வலது கையின் கட்டை விரலுக்கு பக்கத்து விரலை விட்டுவிட்டு மீதமிருக்கும் நான்கு விரலில் மட்டுமே அவன் தனக்கான சாப்பாடை சாப்பிடுகிறான், இந்த பழக்கத்தை அவன் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை..?
இதற்கு பெயர் "ஊனம்" என்று இந்த ஊர் அவனை கேளி செய்தாலும் அவன் இந்த ஊனத்தை மிகவும் அழகான அவன் வாழ்வின் ஒரு நட்சத்திரமாக பார்க்கிறான்..!!
ஊனம் என்ற சொல்லின் பொருள்
ஊக்கத்தின் அடையாளம் என்பதே..?
- A Writeup With Soulful Content ❤

Comments
Post a Comment