Skip to main content

Oh Crazy Minnal

உலகின் சமநிலை பரப்பை ஐந்திணை கொண்டு நம் பண்டைய கால கடவுள் பிரித்திருக்கிறார்கள் என்று நாம் பள்ளிப்பருவத்தில் கோனார் தமிழ் உரையில் படித்து தெரிந்திருக்கிறோம்,

ஐந்திணை நிலங்களான குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என்று ஒவ்வொரு நிலங்களுக்கும் தனித்தனியே ஒரு கடவுள்,அங்கு வாழும் மக்களுக்கு ஒரு பொதுவான தொழில், பொதுவான உணவு கடைபிடிப்பு என்று நம் முன்னோர் காலத்து மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர்,

ஆனால் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் காலில் கொதிக்கும் சுடு தண்ணீரை ஊற்றியது போல் ஒரு கட்டுப்பாடின்றி உலாவுகின்றனர், பண்டைய கால சமாச்சாரங்கள் அழிக்கப்பட்டு ஆண்ட்ராய்ட்,விண்டோஸ்,ஆப்பிள் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் பிடியில் நாம் வேற்று கிரகத்தில் வாழ்வது போல் நாளுக்கு நாள் Advance என்னும் கலாச்சாரத்தை நோக்கி மேலே மேலே சென்று கொண்டு இருக்கிறோம்,

கலாச்சாரம்,பண்பாடு என்று மக்கள் வேறுபட்டாலும் உணவு முறை,வழிபாட்டு கடவுள் என்று மாறினாலும் அன்றிலிருந்து இன்று வரை பூமியில் மனிதர்களால் அதிகம் தேடப்படுவதும்,அதிகம் வேண்டுவதும் "அன்பு" என்ற மூன்று மந்திரம் தான்,

அன்பு என்பது மூன்று எழுத்துக்களுக்குள் அடங்காமல் மனித இனம், பறவை இனம், விலங்கு இனம்,சிறு பூச்சிகளின் இனம், என்று எல்லாவற்றிலும் அளவற்று கிடக்கிறது பாற்கடலில் பொங்கி வரும் அமிர்தம் போன்று,

அன்பு என்பது பிற்காலத்தில் அதாவது இன்று நாம் வாழ்ந்துகொண்டு இருக்கும் இந்த ஊரில் காதல் என்று சொல்லப்படுகிறது,நிறைய காதல் கதைகளை நாம் பார்த்திருப்போம் இதுவும் அதில் ஒன்றே,புதுமை எதிர்பார்க்க வேணாம், உண்மை கதைகளுக்கு புதுமை என்பது என்றும் கிடைக்காத ஒரு கடவுச்சொல் போன்றது தான்,

வெயில் சுட்டெரிக்கும் காலை வேளையில் பத்து மணி அளவில் இருபது ருபாய் டிக்கெட் இரண்டு எடுத்துக்கொண்டு பூங்காவிற்குள் நுழைந்தனர் பிரகாஷ் மற்றும் ராதிகா, அன்று சனிக்கிழமை என்பதால் பூங்காவில் குழந்தைகளின் ஆரவாரமும் வருகையும் அதிகமாக இருந்தது, ஒரு மலை அடிவாரத்தில் இருக்கும் அப்பூங்கா முழுவதும் நூற்றுக்கும் மேலான மரங்கள் மற்றும் இருநூறுக்கும் மேலான செடிகளால் சூழப்பட்டு இருந்தது, வெயில் எவ்வளவு தூரம் சுட்டு எரித்தாலும் அப்பூங்காவில் இயற்கை அன்னையின் பரிசாக மரங்கள் மற்றும் செடிகளின் உதவியால் போர்வை போர்த்திய நிழல் பூங்கா முழுவதும் பரவிக்கிடக்கும் அது தான் அந்த பூங்காவின் தனித்துவமும் கூட,

அந்த பூங்காவிற்கு பிரகாஷும் ராதிகாவும் அடிக்கடி செல்பவர்கள் தான் என்பதால் அவர்களுக்கு என்றே ஒரு பொதுவான இடத்தை எப்போதும் Occupy செய்து விடுவார்கள், அன்றும் அந்த இடம் இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தாலுகா போன்று ஆளின்றி வெற்றிடமாய் இருந்தது, இருவரும் அங்கு சென்று அமர்ந்து தங்களின் அன்றைய பொழுதை எப்படி கடக்கலாம் என பேசிக்கொண்டிருந்தனர்,

பிரகாஷ் என்பவன் கொஞ்சம் ரசனை மிகுந்த காதலன் என்றே சொல்லலாம், ராதிகா என்பவள் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் வரும் ஜெஸ்ஸீ கதாப்பாத்திரம் போல் என்று சொல்லலாம், ரொம்ப சிம்பிள் மேக்அப் எல்லாம் போடமாட்டாள்,பிணைந்த இரு பாம்புகள் போல் ஜடையை மட்டுமே ஒரு Clip-இன் உதவியால் அணிவாள்,நான் முன்னே சொன்னது போல் பிரகாஷ் என்பவன் கொஞ்சம் ரசனை தன்மை உடையவன், அவனுடன் ராதிகா இருக்கும் நேரத்தில் அவள் Loose Hair-இல் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அவனுடைய குழந்தை தனமான ஆசைகளுள் ஒன்று, இதை ராதிகா தொண்ணூறு சதவிகிதம் நிறைவேற்றுவாள் இவனின் குழந்தை தனமான ஆசையை, சில நேரங்களில் பிரகாஷுக்கு ஏமாற்றங்களே மிஞ்சும், அன்றும் அவள் பிணைந்த இரு பாம்புகள் போல் ஜடையை மட்டுமே ஒரு Clip-இன் உதவியால் அணிந்திருந்தாள், க்ளிப் Remove செய்து விட்டு Loose Hair விடு மா என்று பிரகாஷ் ராதிகாவிடம் கூறினான், ஆம் பிரகாஷ் ராதிகாவை மா,அம்மா,அப்பா என்ற மூன்று வார்த்தைகளில் தான் அழைப்பான் அது அவள் மீது உள்ள காதலாலும் அவன் இறந்து போன அம்மா அப்பா மீது கொண்ட ஏக்கத்தினாலும்,

அவனின் விருப்பத்திற்கு இணங்க ராதிகா Loose Hair விட்டாள்,சாக்லேட்டை கண்ட குழந்தை போல் பிரகாஷிற்கு மனதிற்குள் அவ்வளோ சந்தோசம் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறந்து கொண்டிருக்க அருகில் இருந்த கேண்டீனில் ஒலிக்கும் இளையராஜா பாடலுடன்,

ராதிகா வந்ததில் இருந்து மொபைலும் கையுமாக இருந்தாள் கொஞ்சம் பர பர என்று,அங்கும் எங்கும் நடந்து கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தாள்,இவனுக்கு சிறிது கோவம் அவள் மேல், கொஞ்சம் மொபைல சைலென்ட்ல போட்டுட்டு நம்ம பேசலாமே என்றான் பிரகாஷ், சரி சொல்லுமா என்று பேச தொடங்கினாள் ராதிகாவும், பிரகாஷ் என்பவன் காலையில் பொதுவாகவே சாப்பிடமாட்டான் என்பதை அறிந்தவள் ராதிகா, அன்று அவனுக்கு பிடித்த சப்பாத்தியும் குர்மாவும் செய்து கொண்டு வந்து இருந்தாள் அவள் மழலை கைக்குள் அடங்கும் Semicircle வடிவிலான டிபன் பாக்ஸ்-இல், சப்பாத்தியை பிரகாஷிற்கு ஊட்டி விட்டாள் ராதிகா, அவனும் அம்மாவிடம் மூணு கண்ணு திருடன் வரான் என்று அடம்பிடித்து சாப்பிடும் வண்ணம் அவள் செய்த சப்பாத்தியையும் குர்மாவையும் கிண்டல் செய்து கொண்டே சாப்பிட்டு முடித்தான்,

Dairy Milk Silk Bubbly Family Pack ஒன்றாய் அன்று ராதிகாவிற்கு பிரகாஷ் வாங்கி கொண்டு வந்து இருந்தான் அதை ஒரு Surprise-ஆக அவளிடம் கொடுத்தான், பொதுவாகவே ராதிகா என்பவள் ஒரு குழந்தை தனமான Crazy சேட்டைகள் செய்பவள்,சாக்லேட்டை கண்டதும் அவள் அவனை நோக்கி Eeee என்று 32 பற்களும் தெரிய சிரித்துக்கொண்டு வாங்கியவள் அதை அவளின் LKG குழந்தை கூட சுமக்கும் எடையுள்ள Handbagஇல் வைத்தாள்

இவர்கள் இருவரின் எதிரில் இரண்டு பெண்மணிகள் நின்று கொண்டு இருந்தனர், அதில் ஒருவர் பிரகாஷை நோக்கி தம்பி இங்க வாங்க என்று அழைத்தார், பிரகாஷுக்கு கொஞ்சம் மனதுக்குள் பயம். தன் உறவினர் யாரோ ஒருவர் போல் நம்முடன் ஒரு பெண் இருப்பதை பார்த்துவிட்டாள் செத்தோம் இன்னக்கி என்று அந்த இரண்டு பெண்மணிகளை நோக்கி நடந்தான், 

ம்ம் சொல்லுங்க எதுக்கு கூப்டிங்க என்று அவர்களுடன் கேள்வி எழுப்பினான் பிரகாஷ்

நீங்க பிரகாஷ் தானே என்று அந்த பெண் கேட்டாள்
அமாம், நான் பிரகாஷ் தான் சொல்லுங்க என்ன விஷயம் என்று இவன் மறுபடியும் கேட்டான், அந்த இரு பெண்மணிகளின் அருகில் இருந்த ஏறத்தாழ ஒரு முப்பது குழந்தைகள் பிரகாஷை நோக்கி "Happy Birthday to You" என்று பாட்டு பாட தொடங்கினர்,அவனுக்கு சற்று வியப்பாகவே இருந்தது யார் இவர்கள் என் பிறந்தநாள் இவர்களுக்கு எப்படி தெரியும் என்று..? வாழ்த்து பாடலை பாடி முடித்ததும் அந்த அழகு குட்டி தேவதைகளான அனைத்து குழந்தைகளுக்கும் நன்றி என்று தன் கடமையை கூறிவிட்டு ராதிகாவை நோக்கி நடந்து வந்தான் அவள் Handbag-இல் வைத்திருந்த Dairy Milk சாக்லேட்டை அந்த குழந்தைகளிடம் கொடு என்று இவனிடம் கொடுத்தாள், இது உனக்கு வாங்கிக்கொடுத்து என்றான் பிரகாஷ், நான்தானே கொடுக்குறேன் கொடு என்றாள் ராதிகா, அந்த சாக்லேட்டை வாங்கிக்கொண்டு அந்த குழந்தைகளை வழி நடத்தும் அந்த இரண்டு பெண்மணிகளிடம் (ஆசிரியர்கள்) கொடுத்து அக்குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுக்கும் படி கூறி விட்டு இவன் அங்கிருந்து விடைபெற்று ராதிகாவிடம் வந்து அமர்ந்தான்

ஆம் அன்று பிரகாஷின் பிறந்தநாள்,
என்ன ராதிகா என்ன ஏற்பாடு இதெல்லாம்..? யாரு இதெல்லாம் பண்ண..? இதுக்குதான் அவளோ நேரம் மொபைல்ல பேசிட்டு இருந்தயா என்று கேள்வி மேல் கேள்வி வைத்தான் ராதிகாவிடம், அவள் சிரித்துக்கொண்டே எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனக்கு தெரியாது என்று கை காட்டிவிட்டாள், இவனுக்கு ஒரே குழப்பம்,அந்த குழப்பத்திற்கு பதில் கிடைக்காமல் ராதிகாவிடம் மேலும் தன் பேச்சுக்களை தொடர்ந்து கொண்டு இருந்தான்,

ராதிகாவிற்கும் பிரகாஷிற்கும் பொதுவான நண்பர்கள் இரண்டு பேர் தான், அதில் ஒரு நண்பனான சூர்யா என்பவன் அப்பொழுது வந்தான்,

சூர்யா என்பவன் இயக்குனர் ஆக வேண்டும் என்று கனவு கொண்டவன், ஆக அவனின் சிந்தனைகள் கொஞ்சம் Creative ஆக இருக்கும், இதை புரிந்துகொண்ட பிரகாஷ் டேய் நாயே உண்மைய சொல்லு அந்த குழந்தைகள விட்டு பாட்டு பாட வச்சது நீதானா..? என்று கேட்டான், அப்படியா..? குழந்தைகள் பிறந்தநாள் வாழ்த்து பாடினார்களா..? என்று எதுவும் தெரியாதது போல் நடித்தவன் கடைசியில் நாங்க செய்த Plan தான் என்று Surrender ஆனான்,

பிறகு மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க அங்கு என்ட்ரி ஆனவன் தேவ், தேவ் என்பவன் இரண்டாவது பொதுவான நண்பன் ராதிகாவுக்கும் பிரகாஷுக்கும், தேவ் மிகவும் கோவக்காரன் ஆனால் எல்லோருடனும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்று குணம் உள்ளவன்,

நால்வரும் பூங்காவின் ஒரு திசையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க அங்கு Creative Mind உடைய சூர்யா ஒரு Game Conduct செய்தான், அவன் முதல் Clueவை சொல்லினான் அந்த Clue ஒரு இடத்தை குறிக்கும் அந்த இடத்தை கண்டுபிடித்தால் அங்கே ஒரு பேப்பர் துண்டு இருக்கும் அதில் எழுதபட்டிருக்கும் மற்றொரு Clue-வில் உள்ள இடத்தை கண்டுபிடித்து செல்லவேண்டும் இப்படியே Clueகளும் இடங்களும் மாறி மாறி வந்து கொண்டு இருக்க ஒரு கட்டத்தில் ஒரு பேப்பர் துண்டில் Couples என்று Clue எழுதப்பட்டு இருந்தது, இந்த Clue புரியவில்லை என்று சூர்யாவிடம் பிரகாஷ் கூறினான், அதற்கு சூர்யா இந்த பூங்காவில் இருக்கும் ஏதோ ஒரு Couples-இடம் ஒரு பொருள் உள்ளது அதை நீ வாங்க வேண்டும் என்று கூறினான், டேய் என்ன விளையாடுறையா..? செருப்படி வாங்கவா போடா முடியாது என்று மறுத்த பிரகாஷ் சூர்யாவின் கட்டயத்தால் இறுதியில் சம்மதித்தான், புலன் விசாரணை செய்யும் போலீஸ் போன்று தீவிரமாக சிந்தித்தான், அவனுக்கு ஒரு Couple மேல் தான் மிகவும் சந்தேகம், அது பிரகாஷ் ராதிகா இவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு பின்புறம் ஒரு Couple இவர்கள் இருவரையும் அடிக்கடி பார்த்த படி பேசிக்கொண்டிருந்தனர் அவர்களிடம் தான் சூர்யா கூறிய அந்த பொருள் இருக்கும் என்று சந்தேகத்தின் பெயரில் பிரகாஷும் ராதிகாவும் அந்த Couples-ஐ நோக்கி சென்றனர் இவர்களை பின்தொடர்ந்து சூர்யா மற்றும் தேவ் நடந்து சென்றனர், டேய் சூர்யா இவர்கள் தான..? இவங்ககிட்ட தானே இருக்கு..? என்று பிரகாஷ் சூர்யாவிடம் கேட்டான், எனக்கு அதெல்லாம் தெரியாது என்று கை காட்டினான் சூர்யா, அந்த Coupleஇடம் சென்று உங்ககிட்ட யாரும் ஏதும் ஒரு Cover Bagல Something ஏதோ ஒரு பொருள் வச்சு Surpriseனு சொல்லி கொடுத்தாங்களா..? என்று இருவரும் கேட்டார்கள், அதற்கு அந்த Couples இல்லையே என்று ஒரே வார்த்தையில் சிம்பிளாக முடித்தனர்,பிரகாஷ் மறுபடி மறுபடி கேட்க அவர்கள் இல்லை என்று சாதிக்க திடீரென்று அந்த Couples-இல் சிரித்து விட்டனர், பிரகாஷ் உறுதி செய்து விட்டான், இல்லை நீங்க அப்போ இருந்து எங்க ரெண்டு பேரையும் பார்த்து சிரிச்சு பேசிட்டு இருந்திங்க என்று மறுபடியும் கேட்டான் உங்ககிட்ட தான் இருக்கும் Sure I Know என்று, மிகவும் சாதித்த பின் அந்த Couples சூர்யாவின் சம்மதத்துடன் அந்த Cover Bag-ஐ பிரகாஷிடம் கொடுத்தனர், அதை வாங்கிய பின் தேவ்,சூர்யா,பிரகாஷ்,ராதிகாநால்வரும் தங்களின் இடத்தில் வந்து அமர்ந்தனர்,

டேய் யாரு டா அந்த Couples எப்படிடா அவங்கட்ட கொடுத்து வச்ச..? என்று சூர்யாவிடம் பிரகாஷ் கேட்டான். இந்த Cover Bag தான் Last Clue இதை எங்க வைக்குறதுன்னு காலைல உனக்கும் ராதிகாவுக்கும் முன்னாடியே பூங்காவிற்கு வந்து யோசிச்சேன், அப்போதான் நம்ம பையன் என் Classmate அவன் ஆளு கூட பூங்கால உட்கார்ந்து இருந்தத பார்த்தேன்,அப்பறம் அவன்ட பேசி கொடுத்து வச்சேன் என்றான் சூர்யா,

அந்த Cover Bag-ஐ பிரகாஷ் பிரித்தான்

முதல் Gift :

Black Shirt - சூர்யாவின் Gift

இரண்டாவது Gift :

Tea Cup - பிரகாஷ், சூர்யா,தேவ் மூன்று பேரும் ஒன்றாக இருக்கும் ஒரு புகைப்படம் பிரிண்ட் செய்யப்பட்ட டீ கப் அது, முன் ஒருநாள் அந்த புகைப்படத்தை ஒரு Restaurant - இல் வைத்து எடுத்ததும் ராதிகா தான், - தேவ் Gift

மூன்றாவது Gift :

அதில் என்ன சந்தேகம்..?
ஆம், ராதிகாவின் Gift!
இங்குதான் பிரகாஷுக்கு நெஞ்சு பட படக்கிறது ராதிகாவின் Gift-ஐ பிரிக்கும்போது அந்த ஒரு தருணம் எதிர்பார்ப்பின் மொத்த ஆளுமையும் அவனை தொற்றிக்கொண்டது,

வண்ண பேப்பர் தாள்களை பிரித்து Gift-டின் உள்ளே பார்த்தான் , குட்டி Surprise ஆனாலும் மிகவும் பிரகாஷிற்கு பிடித்த Brown Colour Woodlands Branded Wallet,

மூன்று Gifts-உம் பார்த்து விட்டு தேவ் வாங்கி வந்த கேக்-கை அங்கிருந்த மரங்களில் கட்டப்பட்டிருந்த நான்கு ஐந்து பலூன்களை வெடிக்க செய்து கேக்கை வெட்டி நால்வரும் சாப்பிட்டு அருகே இருந்த Couples அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் என்று எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து கொண்டு இருந்தனர்,

இறுதியில் நீங்கள் பேசிட்டு அப்பறமா வாங்க நாங்க கிளம்புறோம் என்று தேவ் மற்றும் சூர்யா இருவரும் பூங்காவில் இருந்து விடை பெற்றனர்,
மேலும் ஒரு மூன்று மணி நேரம் கையில் Coffeeயுடனும் ராதிகாவின் Loose Hair அழகை பிரகாஷ் ரசித்த வண்ணமும் அதாவது மாலை ஒரு ஆறு மணி வரை அந்த பூங்காவில் பிரகாஷும் ராதிகாவும் அமர்ந்து நிறைய பேசிக்கொண்டு இருந்தனர்,

கடைசியில் செல்ல மனமின்றி அங்கு இருந்து இருவரும் விடைபெற்றனர், இருவரும் கை கோர்த்து மாலை இளங்காற்றை நுகர்ந்தவாறு அந்த பூங்காவின் சாலையில் நடந்து சென்று பேருந்தில் ஏறினர், பேருந்தில் கை கோர்த்து விடை பெற மனமில்லாமல் கோர்த்த தங்களின் கைகளை பிரிக்க மனமின்றி கடைசியாக பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றவுடன் கைகளை பிரித்தனர்,ராதிகா அவள் வீட்டிற்கு அங்கிருந்து செல்ல இன்னொரு பேருந்து ஏற வேண்டும், அவள் வீட்டிற்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டு பேருந்து கிளம்பியவுடன் ஜன்னல் வழியே அங்கிருந்து பிரகாஷை தன் இரு கண்களில் தேம்பி நிற்கும் கண்ணீருடன் ராதிகா பார்த்து கொண்டிருக்க பேருந்து அங்கிருந்து கிளம்பியது,

அன்று தெரியவில்லை அவர்களுக்கு இதுதான் அவர்கள் கடைசியாக மிகவும் மகிழ்ச்சியாக மிகவும் Comfort -ஆக, சிறு சண்டை கூட இல்லாமல் மிகவும் தங்களின் Future Plans களை Discussion செய்த அவர்களின் கடைசி காதலின் தருணம் என்று..?

ஆம், நம் ஊரில் இருக்கும் சில விதியின்(ஜாதி மற்றும் அந்தஸ்து) கோட்பாடுகளினால் இன்று அவர்கள் பிரிந்து விட்டனர்,ஆனாலும் பிரகாஷின் வாழ்வில் ராதிகா அந்த துள்ளி திரியும் குழந்தை தனமான Crazy சேட்டைகள் செய்யும் ஒரு "Crazy மின்னலாக" தான் இன்னும் அவன் மனதிற்குள் பெய்யும் மலையில் மின்னொளியில் ஜொலி ஜொலிக்கிறாள் பரவிக்கிடக்கும் அவனின் அன்பில்,

அன்று அவர்கள் இருபது ருபாய் டிக்கெட் இரண்டு எடுத்துக்கொண்டு நுழைந்த அந்த பூங்காவின் நுழைவு வாயிலில் இன்று பிரகாஷ் மட்டும் இருபது ருபாய் டிக்கெட் வாங்கி கொண்டு பூங்காவிற்குள் தனியே உள்ளே நுழைகிறான் வலியுடனான பல நினைவுகளை நெஞ்சில் சுமந்த வண்ணம்..?

- Penned By Shiva Chelliah 🖤

Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ...