Skip to main content

Posts

தன்னை அறிதல்

ஓவர் நைட் Convo - ல பசங்களுக்கு ஒரு பொண்ணு மேல லவ் வரும் அதுக்கு கவிதை தெரியாது ரசனையா Propose செய்ய தெரியாது கோர்வையா பேசக்கூட தெரியாது மனசு ஒரு நிலையில இருக்காது தட்டித்தடுமாறி அலைபாயும் ஆனா சந்தோஷம் மனசுலயும் முகத்துலயும் நீரோடை போல தவழ்ந்து ஓடும் கண்மூடித்தனமா இருப்பான் அந்த நேரத்துல அவனுக்கு அங்க ஒரு Skill பிறக்கும் அப்போ அவனுக்கு அது தெரியாது அதற்கான தேடல்களையும் அவன் அப்போ தொடரமாட்டான் நாளடைவில் அவள் விட்டு சென்றதும் ஒரு தனிமை உலகத்துக்குள் அடைபடுவான் அடை காத்த கோழி போன்று, தன் தனிமையின் துயரையும் தன் பெருங்காதலையும் சேர்த்து பக்கம் பக்கமாக கவிதைகளையும் புனைக்கதைகளையும் எழுதுவான் அன்று அவன் உடனிருக்கும் நண்பர்கள் யாரென்று தெரியாத மூன்றாம் நபர்கள் கூட அவன் எழுத்துக்களை படித்துவிட்டு அவனை ஊர் மெச்சும் படி போற்றுவர், அன்று தன்னை அறிதல் என்னும் Self Realization வாயிலாக தனக்கு இருந்த Skills - ஐ அவன் உணரும் போது நீலப்போர்வை உடுத்திய தூவானம் தன் அந்திமழை துளிகளை பூமியின் செந்நிற மண்ணில் சங்கமித்து இங்கு உயிர் வாழும் ஜீவன்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்..!! எழுதுவோம்...

மண்ணும் மனிதமும்

தேகம் சிலிர்க்கும் இளமஞ்சள் வெயிலில் கதிரவன் பொழுது சாயும் நேரம் அது இளங்கதிர் வெளிச்சத்தில் ஊர் முழுக்க மஞ்சள் வண்ண மலர்களை கொட்டி நிரப்பியது போல் அந்த மாலை பொழுது மிக ரம்மியமாக அமைந்தது, காலை வயலுக்கு சென்ற விவசாயிகள் மாலை வேலை முடித்து வீட்டிற்கு திரும்பினர் தங்கள் கை கால்களை சொம்பு தண்ணியில் கழுவியபடி, பள்ளிக்கூடம் முடிந்து ஊரில் இருக்கும் மழலைகள் யாவும் வேற்று உடை மாற்றி அவர் அவர்களுக்கு பிடித்த கபடி, கண்ணாம்பூச்சி போன்ற விளையாட்டுக்களை விளையாடிக்கொண்டிருந்தனர் கூட்டு சேர்த்து, ஊரில் உள்ள பெண்கள் யாவரும் தங்கள் வீட்டில் கடவுளை வழிபட்டு அந்த அட்சய பொன்பாத்திரத்தில் நீர் நிரப்பிக்கொண்டு தங்கள் வீட்டின் விளக்கை ஏற்றிய வண்ணம் வீட்டின் தொலைகாட்சி பெட்டியில் தங்கள் இஷ்ட தெய்வத்தின் பாடல்களை ஒலித்த வண்ணம் அன்றைய இரவு உணவுக்கு வேண்டிய உணவுகளை தயார் செய்ய அதன் வேலைகளை செய்து கொண்டிருந்தனர் அந்த டீ கடையில் சூடான டீயுடன் ஆண்கள் அன்று விவசாயத்தின் விளைச்சல்கள் மற்றும் ஒன்றத்துக்கும் உதவாத இத்துப்போன நம்ம ஊரு அரசியல் கதைகளை பேச...

பரிணாம வளர்ச்சி மனிதனிடத்தில்..?

பரிணாம வளர்ச்சி என்பது அன்றாடம் சாப்பிடும் உணவு முறையில் இருந்து நாம் சந்திக்கும் மனிதர்களின் குணம் வரையில் ஒவ்வொன்றிலும் தன் பங்கினை பிரதிபலித்துக்கொண்டுதான் இருக்கிறது, நன்மை தீமை என்று பரிணாம வளர்ச்சியை நாம் சமக்கோட்டில் பிரிக்கலாம், ஆனால் அதை அணுகும் முறையையும் அதை ரசிக்கும் முறையையும் நாம் செய்வதில்லை, நன்மை தீமை என்று பாராமல் அதை கொஞ்சம் ரசித்து பார்த்தால் சில அழகான அனுபவங்கள் நமக்கு கிடைக்கும் அத்தகைய சிறு முயற்சி இது, ஏர் உழுதல் என்பது மிகவும் நேர்த்தியான கலைக்கு சமமான ஒரு தொழில், நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தில் ஏர் உழுதல் என்பது தொன்று தொட்டு வந்த ஒரு தொழில், இரு காளை மாடுகளின் பிடரியில் ஏர் கருவியை சுமந்து விவசாயம் செய்த காலம் அன்று, இன்றோ டிராக்டரில் இணைக்கப்பட்ட மின் கருவி மூலம் உழுதல் என்பது விவசாயத்தில் காலத்தின் தன்மைக்கேற்ப அதன் பரிணாம வளர்ச்சியை கால் ஊன்றி இருக்கிறது, அன்றைய காலக்கட்டத்தில் காலை எட்டு மணிக்கு வேலைக்கு வரும் விவசாயிகள் ஒரு தூக்குச்சட்டியில் நேற்று மீதமிருந்த மீன் குழம்பையோ அல்லது தண்ணீர் ஊற்றி வைத்த வடிச்...