Skip to main content

Posts

Self Realisation என்னும் வலி போக்கும் மருந்து

குடித்தான் மதுவில் குளித்தான் ஆழியாய் அவன் மனம் ஆர்ப்பரித்தது அலையென தனிமையின் இருள் தாக்கத்தில் விழி இரண்டும் நீர் நிரம்பிய குளங்களாய் ஈரம் காய்ந்து படிந்தன அவன் கன்னங்கள் அவள் முத்தம் வைத்த ஈரச்சுவடுகள் மட்டுமே அவனை ஒரு நிலைப்படுத்தும் அன்றாட மருந்து கடற்கரை மணலில் அவள் பெயரை எழுதினாலும் சீற்றம் கொண்ட அலைகள் அதனை தன் வசம் இழுத்துக்கொண்டு சொந்தம் கொண்டாடுகிறது ஏனோ தெரியவில்லை தனுஷ்கோடி கடலின் எல்லையில் மீன் பிடிக்க சென்ற தந்தை இலங்கை ராணுவத்திடம் சிக்காமல் மீண்டும் நம் கரை வந்து சேருவாரா..? என்று எதிர்ப்பார்த்து பாதங்களில் கடற்கரை மணல் படிந்து காத்திருக்கும் அந்த தந்தையின் மகன் போல, இரவிலும் சரி பகலிலும் சரி வானிலும் சரி மண்ணிலும் சரி மழையிலும் சரி வெயிலிலும் சரி கடலிலும் சரி கரையிலும் சரி அவனுக்கான ஆசைகள் உறுதுணையின்றி தனிமையின் வெற்றிடத்தில் நிற்கிறது..? காலம் என்றோ ஒரு நாள் மாறும் என்று செவிகளில் பாடம் புகட்டினாலும் அவனுக்கான சூழ்நிலை கொண்ட கனாவில் அவன் மட்டுமே அவனின் ஒரே ஆறுதல்..? முயற்சி செய்தான் முயலாமை தவிர்த்தான் முயன்று முயன்று தோற்ற...

ஹாரிஸ் என்னும் 90's kids - களின் தீரா காதலன்..?

90's Kidsகளுக்கு பத்து வயது கடந்து முகத்தில் மீசை துளிர் விடுமா என்று ஏங்கிய பருவம் அது, ரஹ்மான் என்னும் இசைப்புயல் தமிழ்சினிமாவை செங்கோல் கொண்டு ஆட்சி செய்த காலமும் அது தான், பிரஷாந்த் நடிப்பில் வந்த மஜ்னு திரைப்படத்தின் பாடல்கள் மட்டுமே வெளிவந்த தருணம் அது, வானொலி எங்கும் பாடல்கள் பட்டையை கிளப்புகிறது, குல்மோஹர் மலரே பாடல் ஆல்பத்தின் Top Notch - ரஹ்மான் இசை என்று மனதில் பதிந்தது, காலங்கள் கடந்தது..? பிப்ரவரி 2001-இல் கெளதம் மேனன் என்னும் ராஜீவ் மேனனின் சிஷ்யன் இயக்கிய மின்னலே என்னும் படம் திரைக்கு வருகிறது,மின்னலே தீம்,வசீகரா இரண்டு பாடல்களை தங்களின் மொபைலில் ரிங்டோன் வைக்காதவர்கள் இல்லை,ஆல்பம் பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆனது,படம் வந்து மூன்று நான்கு வருடங்களுக்கு பின்னரும் Mechanical Engineering Student - னா ஒரு Fire வேணாம் என்று துவங்கும் Maddy Maddy BGM கல்லூரி மாணவர்களிடம் ப்ளூடூத் வழியே மாறி மாறி அனுப்பப்பட்டது படமும் மிகப்பெரிய வெற்றி, இசை Harris ஜெயராஜ் என்று இங்கிலீஷ் கலந்த தமிழில் டைட்டில் கார்ட் வரும், அங்கு தொடங்கிய பயணம் ஒரு இசை கலைஞனாய்..? முதல் படமாக வரவேண்டிய ...

ஒளி வழி ஓவியரின் கனா !!

இரண்டு வருடங்கள் பின் சென்றால் அன்று ஒரு நாள் வேலை விஷயமாக ஊட்டி வரை செல்ல வேண்டி இருந்தது, அன்றைய காலக்கட்டத்தில் மாதத்தில் ஒரு முறை ஊட்டி சென்று வருவேன், பெரும்பாலும் என்னுடைய பல்சர் 150 பைக் தான் என்னுடைய எல்லா பயணங்களிலும் உறுதுணையாய் உடன் வரும் ஒரு தோழன், வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ..? என்று கண்ணதாசனின் வரிகளுக்கேற்ப ஊட்டியின் மலைப்பாதைகள் முழுதும் Zig Zag வளைவுகளாக மொத்தம் 14 ஹேர்பின் பெண்டுகளுடன் இறைவனால் Gift Pack செய்யப்பட்ட ஒரு Natural Way of Greenish Road என்று சொல்லலாம், Headset மாட்டிக்கொண்டு பாடல் கேட்டுக்கொண்டே பயணம் செய்வது மலைப்பாதைகளில் சுகமானது என்றாலும் ஆபத்தை விலைக்கு வாங்கும் முயற்சி என்ற காரணத்தினால் அந்த பழக்கவழக்கத்தை தவிர்ப்பவன் நான்,அதற்கு பதிலாக எனக்கு பிடித்த பாடலை வாயில் முணங்கிக்கொண்டே பயணிப்பவன் நான், குழந்தை தனமாக இருந்தாலும் அதில் இருக்கும் சுகம் அறியாதோர் பலர், அன்றும் வீட்டிலிருந்து பைக்கை ஸ்டார்ட் செய்தேன், ஊட்டியில் நேற்று பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வழித்தடங்களில் மண் சரிவு ஆங்...

அன்பென்ற மழையிலே - ரஹ்மானின் மோட்சம்

கிறிஸ்துவ மதத்தின் தூய்மையான Jesus Christ அவர்களுக்கு ஒரு பாடல் எழுத வேண்டும் அதுவும் படத்தில் வரும் க்ளைமாக்ஸிற்கு முந்தைய காட்சி ஹீரோயின் துறவி வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறாள் இவ்வுலகத்தில் இருக்கும் பாவப்பட்ட ஜீவ ராசிகளிடம் இருந்து தனித்து விளங்க..? இப்படி ஒரு Content - ஐ யூகித்ததற்கே இயக்குனர் ராஜீவ் மேனனை தலையில் வைத்து கொண்டாடலாம் காலம் கடந்து, தூய்மையான Jesus Christ அவர்களுக்கு ஒரு பாடல் எழுத இங்கு நம்ம கவிப்பேரரசு வைரமுத்து வரவைக்கப்படுகிறார், பாடலுக்கு தகுந்த  Situation - ஜ இயக்குனர் சொல்லி முடித்த உடன் நம் கவிஞரின் மனதில் எண்ண நிலையில் மனம் இருந்தது என்று தெரியவில்லை..? பாடல் முழுவதும் அன்பு என்பது பரந்து விரிந்து கிடக்கும், இன்று 2019 - திலும் எனக்கான தனிமை உணர்வை நான் காதலிப்பதற்கு முக்கிய தருணம் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த பாடல், ஆம் எனக்கு மட்டும் இல்லை  நம்மில் நிறைய பேருக்கு இந்த பாடலின் வரிகளை கேட்டால் நம் தனிமைக்கு ரகுமான் அவர்கள் ஒரு மோட்சம் கொடுத்தது போல் அந்த வரிகள் அனைத்தும் ரகுமானை நம் தனிமையின் கடவுளாக பாவித்த விதம் இருக்கும், அது தான் வைரமுத்து அவர...

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன ...

Character Sketch of "96 & Pariyerum Perumal"

கதைகள் வேறு களங்கள் வேறு காட்சியின் சூழல் வேறு காட்சியின் அமைப்புகள் வேறு நண்பன் காதலன் ஆகினான் தோழி காதலி ஆகினாள் வெவ்வேறு காட்சிகள் வெவ்வேறு தாக்கங்கள் ஒரு பக்கம் கிராமிய களமும் மறு பக்கம் நகர சப்தங்களும், இரண்டு களங்களிலும் அவள் மொழிந்த அவள் பாவித்த அவள் சார்ந்த அவள் தவித்த அவனுக்கான அவள் சார்ந்த தேடல்களே முன்னிலை படுத்தப்பட்டிருக்கும் காட்சிகளில், இருவரும் கட்டி அணைக்கவில்லை இருவரும் முத்தங்கள் பகிரவில்லை இருவரும் தோள் சாய்ந்து கொள்ளவில்லை இருவரும் கை கோர்த்து பயணிக்கவில்லை இருவரும் சாலைகளை ஒன்றாய் கடக்கவில்லை, கண்கள் பேசியது வார்த்தைகள் தடுமாறியது இதழ் மௌன மொழி புரிந்தது காலங்கள் திசை மாறி இருந்தது காதல் மனசெங்கும் பரவிக்கிடந்தது கண்ணீர்கள் பாற்கடலாய் ததும்பியது பிரிவின் ஒட்டு மொத்த தேடல்களும் அவர்களின் பரிதவிப்பில் துளிர் விட்டது..? This is Love Clean Pure Love..!! ஜானகி தேவி(ஜானு)யும் கே.ராமச்சந்திரன்(ராம்)னும் ஜோதி மகாலக்ஷ்மி(ஜோ)யும் பரியேறும் பெருமாள்(பரியன்)ளும் - 96 | பரியேறும் பெருமாள்  :) )  🖤

சுய தேடல் | Connectivity Between Life of Ram Song

ஒரு தெளிவான சுயம் சார்ந்த தேடலை நாம் தொடங்கும் போது அதற்கு முன்பு ஏற்கனவே எங்கேயோ எப்போதோ ஒரு சுயம் மீட்டெடுத்தல் நிகழ்ந்திருக்கும் அப்படியான ஒரு நிகழ்வு தான் லைஃப் ஆஃப் ராமின் பாடலில் நிகழ்ந்திருக்கிறது தன் சுயத்தினை எங்கயோ தொலைத்து அதை மீண்டும் கண்டெடுக்க முற்படும் ஒருவன் என்னவெல்லாம் நினைப்பான் என்பதை கச்சிதமாய் எழுதியிருக்கிறார்கள். பாடல் வரிகள் : வாழ்வா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன் தீரா உள் ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆள்கிறேன். இதில், தீரா உள் ஊற்றை தீண்டவே என்று தன் பழைய சுயத்தினை தேடும் போது இன்றே இங்கே மீள்கிறேன் என மீட்கவும் செய்து இங்கே இன்றே ஆள்கிறேன் என தன் சுயத்தினை ஆள ஆரம்பிக்கிறான், ஜானு : ரொம்ப தூரம் போயிட்டியா ராம்..? ராம் : உன்ன எங்க விட்டேனோ அங்கயே தான் நிக்குறேன், ஆம், அந்த புள்ளியில் அந்த நேர்க்கோட்டில் அந்த மூலாதனத்தில் தான் ராம் இன்னும் நின்று கொண்டு இருக்கிறான் அவன் திருமணம் செய்யவில்லை Travel Photographer - ராய் தொலைத்த தன் தேடலுக்கான வாழ்கையை தொடருகிறான், ஒரு சிறு கற்பனை முயற்சி திரைக்கதையில் சிறிய மாற்றம் லைஃப் ஆஃப் ஷிவா என்று...