Skip to main content

Posts

முழுமை

இங்க நம்ம முழுமைன்னு நினைச்சுட்டு இருக்குற எதுவுமே முழுமை கிடையாது ஒரு உதாரணத்துக்கு சொல்லணும்னா இந்த படத்துக்கான ஒரு கதையை நான் முழுமையாக எழுதி முடித்து விட்டேன் அப்படின்னு அந்த இயக்குநர் தான் எழுதி முடித்த கதைக்கான டைரியை தன் மேஜையில் வைத்து விட்டு தூங்க சென்றுவிட்டார், அடுத்த நாள் காலை அவருக்கு ஒரு ஃபோன் வருகிறது சில தனிப்பட்ட காரணங்களுக்காக சொந்த ஊருக்கு வர வேண்டி அந்த ஃபோனில் தகவல் வருகிறது,கிளம்பும் அவசரத்தில் இவர் தன்னுடைய கதை எழுதும் டைரியை வீட்டிலேயே வைத்து விட்டு சென்று விட்டார்,பிறகு ஒரு வாரம் கழித்து வந்து ஊருக்கு சென்று போன வேலையை முடித்து விட்டு தன் நண்பர்களுடன் பல வருடங்களுக்கு பிறகு ஒன்றாக கூடி உட்கார்ந்து அரட்டை அடித்து பேசி பொழுதை போக்கிய அந்த ஏழு நாட்கள் தனக்கு கொடுத்த உற்சாகத்துடன் முழு புத்துணர்ச்சியுடன் தன்னுடைய டைரியை எடுத்து தான் முழுமை அடைந்தது என்று முடித்து வைத்த அக்கதையை அடுத்த வாரம் கால்சீட் கிடைத்திருக்கும் அந்த பெரிய ஹீரோவிற்கு சொல்லி ஆக வேண்டும் என்ற முனைப்புடன் ஒரு முறை தான் எழுதிய கதையை வாசிக்கிறார், பல இடங்களில் அவர் திரைக்கதையில் செய்த சின்ன சின்ன தவ...

Chai with Halitha Shameem Akka!

* Chai With Halitha Shameem Akka!  எதிர்பாரா வாய்ப்புகள் எப்போதாவது தான் அமையும்,அப்பறம் நம்ம எதிர்பார்த்து காத்திருந்தாலும் பரிபோன வாய்ப்பு போனது தான்,கிடைக்கும் போது வாய்ப்பை சரியான முறையில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும், அப்படி ஒரு வாய்ப்பு இயக்குநர் ஹலிதா அக்கா - வை சந்திக்க அரங்கேறியது,அவர்களின் சொந்த ஊரான தாராபுறத்தில் மாலை ஐந்து மணிக்கு தாராபுரம் பழனி பிரிவில் உள்ள சூர்யா பேக்கரியில் சந்திக்கலாம் என்று தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்திருந்தார், கோடை கால விடுமுறையில் மதிய நேரம் வரும் ஐஸ் வண்டிக்காக ஒரு மணி நேரமாக வீட்டு திண்ணையில் ஐஸ் வண்டி சத்தம் கேட்குதா என எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் சிறுவனை போல நானும் மாலை அங்கு சென்று விட வேண்டும் அவர்களை சந்திக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மட்டுமே மனசுக்குள் ஓடிக்கொண்டிருந்தது,இயக்குநர் அக்காவிற்கு ஒரு மெசேஜ் அனுப்பி வைத்தேன் இன்று மாலை சூர்யா பேக்கரிக்கு உங்களை காண வருகிறேன் என்று, "வாங்க" என்று பதில் ரிப்ளை செய்திருந்தார்கள், கோவையில் இருந்து கிளம்பி போகும் வழியில் காரணம்பேட்டையில் Dhanasekar D  - ஐயும் அழைத்துக்கொண்...

கர்ணனின் தாக்குதல்

தாக்குதல் என்றாலே கொலைன்னு இல்ல,அது வன்முறைன்னு கூட சொல்லமுடியாது,இங்கே கன்னத்தில் அறைவது கூட தாக்குதல் தான் !  இந்த சமுதாயமும் சரி நாளைய வருங்கால சமுதாயமும் சரி உன் கன்னத்திலோ உன் பிள்ளை கன்னத்திலோ யாரோ ஒருவன் பளார் என்று ஒரு அறை விட்டால் முதலில் தாக்குதல் வேண்டாம் என்று நீயும் உன் பிள்ளையும் அமைதியாக இருக்கலாம்,ஏன் இரண்டாம் மூன்றாம் தடவையும் கூட,ஆனால் நான்காவது தடவை நீ நிச்சயமாக உன்னை அடித்தவன் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைவாய், இதுவே நிதர்சனம், தற்பாதுகாப்பு, உயிர் பழி கொலைன்னு அந்த அளவு யாரும் இங்க பண்ண சொல்லல,உரிமையை கேட்க கையில் வாள் ஏந்தும் சூழ்நிலை வந்தால் வாள் ஏந்த வேண்டும், நீ இன்று வாள் ஏந்தினால் நாளை உன் சந்ததிகள் நிம்மதியாக படிக்க முடியுமெனில் நிம்மதியாக ஒரு வாழ்க்கை வாழ முடியுமெனில் நீ இன்று வாள் எடுத்தே ஆக வேண்டும், அது உரிமைக்காக என்றாலும் சரி,தற்பாதுகாப்புக்காக என்றாலும் சரி,  உன் உரிமையை மீட்க வேறு வழியின்றி இன்று நீ வாள் எடுத்து போராடுக் கொண்டு இருக்கிறாய், அதே நேரம் நாளை வரப்போகும் உன் பிள்ளைகளுக்கும் தலைமுறைகளுக்கும் தேவையான அடிப்படை கல்விக்கும்,வாழ்க்க...

என் இனிய தனிமையே !!

சரியா மார்ச் மாதம் தொடங்குச்சு இந்த கொரோனா பிரச்சனை அப்போ இருந்து நம்ம எல்லோர் காதுக்கும் ஒரே அலைவரிசையில ஒலிக்குற ஒரு வார்த்தைன்னா அது லாக்டவுன் - ன்ற இந்த வார்த்தை தான், ஊர் சுற்றித்திரிந்த வேடந்தாங்கல் பறவையை சிறகுடைத்து நீ பறக்க கால அவகாசம் இப்போது சரியாக இல்லை கொஞ்ச நாள் இந்த கூண்டுக்குள் அடைஞ்சு இருன்னு சொல்லுற மாதிரியான உணர்வு தான் இங்க எல்லாருக்கும், பறவையோட குணமே பறக்குறது தான்டான்னு சூப்பர் ஸ்டார் கபாலில சொல்லுற மாதிரி நாலு ஊரு போய் நாலு மனுஷங்கள சந்திச்சு பேசுறஆளுங்க நம்ம,அப்படி இருக்கப்போ இந்த லாக்டவுன் நம்மல எப்படி எல்லாம் தலைகீழாக புரட்டி போட்டுச்சு,அதை பற்றி தான் இங்க பார்க்க போறோம், இதில் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் போது அந்த ஒரு தனிமை நிலையை ரசித்தவர்கள் யார்,அதை வெறுத்தவர்கள் யார்,இதை பற்றி சில நண்பர்களிடம் கருத்துக்கள் கேட்டிருந்தேன் அதில் சிலர் சொன்ன கருத்துக்கள் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் சற்று பயமாகவும் இருந்தது, --------------------> " தனிமை " <-------------------- நிறைய பேருக்கு வரம் நிறைய பேருக்கு சாபம் நிறை...

லவ் யூ டாடி !!

அணைகின்ற விளக்கு சுடர் விட்டு எரிவது போல் இறப்பதற்கு முன் அவர் குரலில் கடைசியாக சொன்ன வார்த்தை எந்தன் பெயர் மட்டுமே, நீங்கள் என்னை விட்டு சென்று சரியாக 18 வருடங்கள் ஆகிவிட்டது, தூங்குவோம் என கண்ணை மூடினால் எந்தன் கனவுகளில் உங்கள் உருவம் என் இரவு முழுவதையும் உங்கள் வசப்படுத்திக்கொண்டது, யாரோ ஒரு அப்பா தன் கால் வலிக்க மிதிவண்டியை மிதித்து தன் மகனை சொகுசாக கூட்டிச்செல்லும் போது இன்னும் கொஞ்ச நாள் நான் மழலை வகுப்பில் படித்திருக்கலாமோ என மனம் நாடுகிறது, வெளியூரில் வேலை பார்த்தாலும் சொந்த ஊருக்கு போய் புரோட்டா சாப்பிடும் போதெல்லாம் ஞாயிற்று கிழமை நீங்கள் வாங்கிக்கொடுக்கும் புரோட்டா மட்டுமே கண்களின் முன் வந்து செல்கிறது, கேட்டவை எல்லாம் கிடைத்தது நடுத்தர குடும்பத்தில் பிறந்தும் கூட நான் மட்டுமே தனிக்காட்டு ராஜா நீங்கள் உடன் இருந்த வரை, அன்று நீங்கள் வாங்கிக்கொடுக்கும் எனக்கு பிடித்த 50-50 பிஸ்கட்டுகளின் சுவை இன்றைய தினத்தில் காலாவதி ஆகிவிட்டது போல் அச்சுவையிலிருந்து, ரஜினி படமென்றால் முதல் காட்சி டிக்கெட்டை எப்படியாவது வாங்கி என்னை கூட்டிச்சென்று அவரின் ஸ்டைலை ரசிக்க வைத்தீர்கள் இன்றோ அந்த வி...

திம்மு திம்மு | பாடல்

ஒரு பாடல் எப்போ கேட்டாலும் இமையோரம் கண்ணீர் - ன்ற சூழ்நிலைக்கு கூட்டிட்டு போகும்ல அப்படி ஒரு பாட்டு தான் இது, அதுக்கு காரணம் என்னோட ஆசான் நா. முத்துக்குமார் - ன்னு எங்கனாலும் எப்போனாலும் என்னால சொல்ல முடியும், உடம்பெல்லாம் சிலிர்க்கும் இன்னும் எத்தனை வருஷம் கழிச்சு கேட்டாலும்,ரொம்பவே சாஃப்ட் ஆன ஒரு ட்யூன் கொடுத்த ஹாரிஸ் க்கு என் முதல் நன்றி, முத்துக்குமாரின் வரிகளுக்கு ஹாரிஸ் எப்போதும் தன் பாடல்களில் ராகத்திற்கு மெனக்கெடுவார் என்பது தெரிந்தது தான் என்றாலும் இயக்குநர் பிரபு தேவா இந்த படம் கமிட் ஆகும் போதே ஹாரிஸ் தான் என் படத்திற்கு இசை அமைக்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொண்டார்,படத்தின் அத்தனை பாடல்களுக்கும் பிளாக்பஸ்டர் என்றாலும் இந்த பாடல் எப்போதும் தனி ஈர்ப்பை எனக்கு கொடுத்துக்கொண்டே இருக்கும், இரவுகள் என்பது பிரிந்து போன காதலனுக்கு துயர் நிறைந்த இருளாக இருக்கின்றது அதே நேரத்தில் பிரிந்து போன காதலியை நினைத்து பக்கம் பக்கமாக "இவன் இரவுகளில் அவள்" என்று கவிதையும் இரவில் தீட்டும் படலமும் ஒரு காதலனின் வாழ்வில் இருக்கின்றது, இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் இசை ஒரு அங்கமாக அக்காதலனுக...

Love You Dada !!

எப்பவுமே தாதாவ பொறுத்தவர எனக்கு எமோஷனல் கனெக்ட் தான், So, இதுவரைக்கும் யார்கிட்டயும் சொல்லாத ஒரு விஷயத்த இங்க எழுதுறேன், இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட என் வாழ்க்கையில் நடந்த ஒரு பேரிடர் சம்பவம், அன்று " ஜூலை 8, 2004 " நான் ஏழாம் வகுப்பு படித்து வந்தேன் அது ஒரு வியாழக்கிழமை தினம், சச்சின் அவுட் ஆனா டிவிய ஆஃப் செய்யுற காலம் அது, ஆனா அப்போவே தாதா அவுட் ஆனா தான் அந்த இடத்தைவிட்டு அழுதுட்டே எந்திருச்சு போவேன் நான், ஒரு வேள அன்னக்கி தாதா பட்டைய கெளப்புனா அன்னக்கி எங்க ஏரியால என்னோட சவுண்ட் தான் அதிகமா இருக்கும், ஒரு கர்வம் இருக்கும் எல்லாரும் சச்சின் சச்சின் ன்னு ஒரு பாதையில போனப்போ நான் மட்டும் தாதா தாதா - ன்னு சுத்திட்டு இருப்பேன் அப்போ, அன்னைக்கும் அப்படி தான், வழக்கம் போல தாதா பிறந்தநாள்ன்னு ஸ்கூல்ல பசங்க கிட்ட அவர பத்தி பேசிட்டு லஞ்ச் பிரேக்ல ஸ்கூல் பக்கத்துல இருக்க நண்பன் வீட்டுல கிரிக்கெட் விளையாண்டுட்டு ஸ்கூல் கிட்ட இருக்க கடையில சாயங்காலம் போடுற சூடான புரோட்டா எல்லாம் தாதா பிறந்தநாள் காக பசங்களுக்கு எல்லாம் டிரீட் வச்சுட்டு ஆடி பாடி கொண்டாடிட்டு இருந்த...