Skip to main content

Posts

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

*❤️ தலைப்பு :  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  ஒரு கதை எங்க முடியுமோ அங்க தான் இன்னொரு கதையோட தொடக்கம் ஆரம்பிக்கும் அப்படி தான் இந்த கதையும், உலகத்துல ஒருத்தருக்கு ஏற்படுற கஷ்டம்,கவலை,ஏமாற்றம்,இழப்பு, பிரிவு - ன்னு எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு பெயர் வச்சா அது தான் என்னோட பெயர் "கெளதம்", இந்த கெளதம் - ன்ற பெயருக்கு பின்னாடி வாழ்க்கையோட மொத்த நிராகரிப்பும் ஒன்னு சேர்ந்து இருக்கும், அப்படி ஒரு ஜாதகத்தை கொண்டவன் தான் நான், எல்லாரோட வாழ்க்கையிலையும் வர மாதிரி தான் என்னோட வாழ்க்கையிலும் முகத்தின் மேல் தீண்டும் ஒரு பெண்ணின் விரல் போல காதல் என்னை சற்று அவள் மெல்லிய விரல்களால் தீண்டி சென்றது, " தாரா " இந்த பூமியோட மொத்த அன்பும் ஒருத்தங்க கிட்ட தான் இருக்கும் அப்படினா அது தான் என்னோட தாரா, எத்தனை சண்டை வந்தாலும் சச்சரவுகள் வந்தாலும் பிரியுற நிலைக்கு எங்க காதல் போனாலும் ஒவ்வொரு வாட்டியும் இது இன்னும் முடியல கெளதம், இன்னும் நம்ம ரொம்ப தூரம் போகணும் நம்மளோட கால் தடங்கள் இன்னும் இந்த பூமில ரொம்ப வருஷம் நிலைச்சு இருக்கணும், உங்க அப்பா சொன்னா கேப்பேல அப்படி தான் உன்னோட இ...

அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்

*❤️ சிறுகதை : " அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ் " காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்ததினால் கடல் அலைகள் ஆர்ப்பரித்த வண்ணம் தனது வேகத்தில் கொஞ்சம் வீரியத்துடன் காணப்பட்டது, எப்போதும் பரவலாக கூட்டம் இருக்கும் நாகர்கோவில் அருகில் உள்ள சங்குத்துறை கடற்கரை அன்று ஏனோ வெறிச்சோடி காணப்பட்டது, கடற்கரை முழுவதும் குளிர்ந்த காற்று வீச அருகிலிருந்த தென்னை மரங்களின் கீற்றுகள் யாவும் நடனமாட கருமேகம் வானத்தை சூழ ஒரு பெரிய இடி  பூமியின் மேல் விழுந்தது போல பேரிடியாக விழுந்தது, வீட்டின் முதல் பிள்ளைக்கு இடி என்றால் ஆகாது என்று நம் முன்னோர்கள் சொல்லி கேட்டதுண்டு, விழுந்த பேரிடியின் அதிர்ச்சியில் சற்று திளைத்து சுய நினைவுக்கு வந்தவனாக நான், சிறு தூரலில் ஆரம்பித்த மழை நேரம் எடுக்க எடுக்க பெருமழையாய் பெய்ய தொடங்கியது, ஆளற்ற கடற்கரையில் நான் மட்டும் தனியே பெருமழையில் நனைந்த வண்ணம் அமர்ந்திருக்கிறேன், என் கண்களில் இருந்து சிந்தும் கண்ணீர் இந்த உலகத்திற்கு புலப்படாத வண்ணம் மழை நீரில் சங்கமித்து என் கன்னம் வழியே தழுவி நிலத்தின் மேலே குடி பெயர்ந்தது, மழையில் நனைந்த வண்ணம் என் மனதில் ஒரு கேள்வி...

கரைகின்ற நொடிகளில்..!! ❤️

* இடரினில் தளர்ந்து இமைக்கா நொடியாய் உதிரம் வடிய நிற்கின்றேன்..!! என் மனதில் தோன்றும் சில விஷயங்கள் என் யூகத்திற்கு ஏற்றார் போல் நிச்சயம் எப்படியோ நடந்துவிடக்கூடும் பல நேரங்களில், அன்றைக்கு ஒரு நாள் இலையுதிர் காலத்தின் நல்ல மாலை மங்கும் வேளையில் நான் தனியே அந்த தேசிய நெடுஞ்சாலையில் என்னுடைய பைக்கில் வந்து கொண்டிருந்தேன், ஏதோ என் உள்மனம் சொன்னது இன்று ஏதோ சில தடைகள் நீ வீடு சென்றடையுமுன் உனக்காக காத்துக்கொண்டு இருக்கிறது என்று, சாலையோரம் இருந்த ஒரு ATM இயந்திரத்திற்கு சென்றேன், எனக்கு தேவை 500 ருபாய், கார்டினை இயந்திரத்திற்குள் சொருகி ரகசிய எண்ணை பதிவிட்டு என்னுடைய பணத்திற்கு நான் காத்துக்கொண்டிருக்கையில் "2000 Rs Notes Only Available" - ன்னு Screen ல Display ஆகுது, இன்னொரு ATM சென்றேன் மேலே சொன்ன அதே Process இப்பொழுது "Unable to Dispense Cash", மூன்றாவது முறை இப்போது, "என் கவனமின்மையால் "Incorrect Pin", நான்காவது முறை கார்டினை சொருகினேன், இந்த முறை "Exceeding the Day Limit", இதற்கு முன்னால் இந்த நாளில் நான் இரண்டு முறை...

வெந்து தணிந்தது காடு !!

இதுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல நீ ஒதுங்கி போ சித்து, முடியாதுன்னு சொன்னா இதுல உன்னோட ரியாக்ஷன் என்னவா இருக்கும் ராஜேஷ்..? ஏற்கனவே உனக்கும் எனக்கும் செட் ஆகாது இது என் பிரச்சனை இதுல நீ இடையில வராத சித்து, செட் ஆகாமையே இருக்கட்டும் ஆனா நான் வருவேன் ராஜேஷ், அப்போ நீயா நானான்னு பா** (பாத்துருவோம்) சித்து என்று ராஜேஷ் சொல்லி முடிப்பதற்குள் தாடை திரும்பும் அளவிற்கு அவன் வாயில் ஒரு பஞ்ச் வைத்தான் சித்து, வாயின் ஓரத்தில் ரத்தம் கசிய கீழே விழுந்தான் ராஜேஷ், சித்து தலையில் கனத்துடன் மிகவும் உஷ்ணமாய் இருந்தான், அன்று கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!! அந்த கல்லூரியில் கடைசி ஐந்து ஆண்டுகளாக படித்த எந்த மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை இளங்கலை, முதுகலை என பட்டம் வாங்க முன்னாள் மாணவர்கள் கடைசி ஐந்து வருட பேட்ச் என எல்லோரும் திரண்டு வந்திருந்தனர் கல்லூரிக்கு, ஒரு பக்கம் ஆட்டம் பாட்டம் என்று மாணவர்கள் குதூகலத்தின் உச்சியில் இருந்தனர், இன்னொரு பக்கம் மாணவர்கள் தங்கள் துறைக்கு ஏற்ப தனித்தனியே பட்டங்களை வாங்கிக்க...

திறவுகோல் !!

' <3 ' Stress - ஆக இருக்கும் நேரத்தில் மனமெங்கும் மார்கழியாய் இலை மேல படர்ந்த பனித்துளியாய் ஒரு இசை எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது தனிமையின் தாகத்தில் எனக்கான கார்த்...