Skip to main content

Posts

இரவுகள் நமக்கானவை

வாசிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் உருவாக்கப்பட்டது தான் இரவு, தனிமைக்காகவும் கனவுகளுக்காகவும் படைக்கப்பட்டவர்கள் தான் நாம், தனிமையை ரசித்து கனவுகளில் கரைந்து பிடித்த தலைப்பில் எழுதியோ பிடித்த தலைப்பில் வாசித்தோ இந்த இரவுகளை கொண்டாடலாம்..!! || இரவுகள் நமக்கானவை || : ) ❤️

இந்த பிரபஞ்சத்தின் பேரன்பே

இந்த பிரபஞ்சத்தின் பேரன்பே ஆயிரம் ஆயிரம் மழைத்துளிகள் உன்னை நனைத்தாலும் அந்த வானுக்கு எப்போதும் நீ சொந்தம் என்பது இல்லை, இந்த நிலத்தின் மீது தான் நான் உன்னை முதன் முதலில் கண்டு களித்தேன், கண்டு களித்த நாளிலிருந்து இன்று வரை நான் உன்னை பேணிக்காத்து கொண்டிருக்கையில் அந்த வானம் இன்று ஆயிரம் ஆயிரம் மழைத்துளிகளால் நனைத்து உனை தன் வசப்படுத்திக்கொள்ள பார்க்கிறது, நான் இந்த நிலம் போன்றவன் உன் பாதத்தில் இருந்து உச்சி வரை நான் உன்னை தினமும் தாங்குகிறேன், அவ்வளவு எளிதாக எனக்கு சொந்தமான ஆதிப்பேரன்பை இன்னொருவருக்கு வாரி வழங்க எனக்கு இன்னும் பெரிய மனசு வாய்க்கவில்லை, இந்த அரை வட்ட குடைக்குள் மழையாக நான் உனை அடைகாத்துக்கொண்டேன் மனதிலும் சரி இம்மண்ணிலும் சரி நீ எனக்கு சொந்தமான தூய ஒளி வா இந்த உலகத்திற்கு ஒளி வீசுவோம், - சொல்லப்படாத பேரன்பின் மொழி ❤️

தனிமை காதலன்

கடைசி வரைக்கும் உங்கள புரிஞ்சுக்காம போனவங்க வரவே இல்லேன்னா என்ன செய்விங்க..? ஹ்ம்ம்,நல்ல கேள்வி தான் பட் எல்லாரையும் மாதிரி நான் அவங்கள மட்டுமே நினைச்சுட்டு இருப்பேன் அப்படிலாம் சொல்லமாட்டேன் "நினைப்பேன்" அவ்வளோதான் இப்போ எப்படி சொல்றதுன்னா,அது என்னோட வாழ்க்கையில ஒரு பார்ட் தான், மூன்று அல்லது நான்கு வருஷம் கல்லூரி போறோம் படிக்குறோம் ஒரு நல்ல அனுபவத்தோட வெளிய வரோம் கரெக்ட்டா அது போலத்தான் அவங்களும், என்னோட வாழ்க்கைக்குள்ள ஒரு பார்ட் - டா வந்தாங்க, என்னோட வாழ்க்கைய நான் திரும்பி பார்த்தா அது ஒரு அழகான சாப்டரா இருக்கும் அதுல சந்தேகமே இல்ல Actually, என்னோட காதலும் அங்க இருக்குல, கடவுள் அழக ரசிக்க தான் கண்கள கொடுத்துருக்கான் நமக்கு, ஹ்ம்ம் அதே மாதிரிதான் நானும் அவங்களோட அழகுல மிதந்து தவழ்ந்து அவங்களுக்காக நிறைய எழுதி எழுதி எனக்குள்ளேயே வச்சுப்பேன்,அது என்னோட எழுத்து என்னோட ஆழ்மனசுல இருந்து வந்த வார்த்தைகள் அதுக்கு இப்போன்னு இல்ல இன்னும் ஆயிரம் ஜென்மங்கள் கடந்து யாராவது ஒருத்தங்ககிட்ட அது கிடைச்சு அவங்க அதை படிச்சாலும் அதோட உணர்வும் அது சொல்லுற வலியும் ஒன்னு தான், அதனால அவங்க என்ன...

இறைபாலன் அவன்

ஒரு ஊர்ல ஒரு மன்னன் இருந்தாராம் அந்த மன்னன் போருக்கு போறதுக்கு முன்னாடி தன் படைத்தளபதிகள கூப்பிட்டு போர்க்களத்தின் யுக்திகளை தெரிவிப்பார், அடுத்த நாள் போரின் போது எதிரி நாட்டு மன்னன் இந்த மன்னன் தலைக்கு பந்தயம் வைக்குறத விட முக்கியமா இந்த மன்னனோட படைத்தளபதிகள் மேல தான் தன்னோட முதல் குறிய வச்சு ஆட்டத்த ஆரம்பிப்பானாம்,  அப்படி படைத்தளபதிக்கு குறி வைக்கும்போது அந்த படைத்தளபதிகளுள் முதன்மை தளபதிக்கு தான் தன்னுடைய முதல் குறியை வைப்பான், ஏனென்றால் அவன் தான் தனக்கு கீழிருக்கும் படைத்தளபதிகளுக்கு முன்னோட்டமாய் அமைவான் அதற்காக, எதிரி நாட்டு மன்னன் போரில் முதன்மை படைத்தளபதியை வீழ்ச்சி செய்ய நிறைய யுக்திகளை கையாண்டு கொண்டே இருப்பான், ஆனால் அந்த முதன்மை படைத்தளபதி தன் சாதுர்யத்தால் எதிரி நாட்டு மன்னனின் படையை ஓட வைப்பான், அந்த மன்னனுக்கும் அடுத்து இந்த நாட்டினர் மீது படையெடுத்து போவதற்கே அச்சம் ஏற்படும் வகையில் ஒரு கில்லாடி வித்தையை அந்த மன்னனின் கண்ணுக்குள் விட்டு ஆட்டியிருப்பான், தன் மன்னனுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதன்மை படைத்தளபதியாய் சட்டென்று தன் கீழிருக்கும் படைகளை கூட்டிக்கொண்டு போருக...

முகமூடி

" முகமூடி " நண்பர்களிடம் பேச்சுக்களை குறைத்துவிட்டு அதற்கு பதிலாக எழுதுவதை அதிகப்படுத்திவிட்டேன், நிறைய வலிகளும் நாம் சொல்ல நினைக்கும் சொல்லாமல் தவிக்கும் விஷயங்கள் அனைத்தும் எழுத்துக்களாக மாறும் போது அது தரும் சுகம் என்பது ஈடு இணையில்லாத ஒன்றாகிறது, இது எனக்கு பிடித்திருக்கிறது முயற்சி செய்பவர்கள் செய்யலாம் மனிதர்களை விட இங்கே எழுத்துக்களுக்கு சக்தி அதிகம், என்னை நான் தனிமை படுத்திக்கொள்கிறேன் என்னை நினைத்து நானே சிரித்துக்கொள்கிறேன் என்னை நினைத்து நானே அழுது கொள்கிறேன் எனக்கு ஜோக்கர் வடிவமிட்டு எனக்கு நானே முகமூடி அணிந்து கொள்கிறேன், என்னை சுற்றி பல சாக்கடைகள் இருக்கிறது என் குடலை பிடுங்கி வெளியே எறியும் அளவிற்கு நாற்றம் வீசுகிறது ஆனால் இந்த பாதையில் தானே நான் சென்றாக வேண்டும் எனக்கான வழித்தடங்களை நோக்கி சாக்கடையை சில சமயம் கவனமாக தாண்டி போகிறேன் சில சமயம் கையை வைத்து மூக்கை பொத்திக்கொண்டு போகிறேன் ஒரு சில சமயம் அந்த நாற்றத்தை என்னால் முடிந்தால் சுத்தம் கூட செய்கிறேன், என்னை நானே பேணிகாத்துக்கொண்டால் தானே நான் உயிர் வாழ முடியும், மனிதனுக்கு மனிதன் உதவியையும் அன்பையும் மட்டு...

ஹே சினாமிக்கா

*❤️ " ஹே சினாமிக்கா " 50- களில் பிறந்து 70 - களின் இளமை காதலில் தவழ்ந்து 80 - களில் சினிமாவுக்குள் வந்து தான் பார்த்த காதலை எழுத்துக்களின் மூலம் திரைக்கு கொண்டு வந்து பின்னர் 90 - களின் காதலில் ஒவ்வொரு ரசிகனையும் தன் காட்சியின் தாக்கம் மூலம் கவர செய்து பிறகு 2K - களின் இளமை ததும்பும் ஊடல் மிகுந்த காதலை Live in Relationship மூலம் மூன்று தலைமுறையினருக்கும் பிடித்தவாறு ஒரு இயக்குநர் படமெடுப்பது மிகவும் சவாலான விஷயம் அதுவும் மூன்று தலைமுறை படைப்புகளையும் ஹிட் கொடுப்பது என்பது சினிமாவில் எளிதான காரியமல்ல, 80'களில் - மௌன ராகம் 90'களில் - அலைபாயுதே 2K'க்களில் - ஓ காதல் கண்மணி இன்றுடன் படம் வந்து ஐந்து வருடங்கள் நிறைவு பெற்றிருக்கிறது, 90'ஸ் கிட்ஸ் களுக்கு எப்படியோ 2K - கிட்ஸ்களுக்கு "ஆதித்யா வரதராஜன் - தாரா காளிங்கராயர் " இந்த Pair எப்போதும் Favourite என்று சொல்லும் அளவிற்கு 2K - கிட்ஸ்களின் மத்தியில் படம் 2015 - ல் தலையில் வைத்து கொண்டாடப்பட்டது அவ்வளவு ஏன், படம் வந்து ஐந்து வருடங்கள் பிறகும் இன்று வரை வாட்ஸாப் ...

சதையை மீறும் மூன்றாம் பாலினம்

*💚 " சதையை மீறும் மூன்றாம் பாலினம் " மயக்கம் என்ன படத்துல செல்வராகவன் ஒரு அழகான  வசனம் எழுதியிருப்பாரு, கிரியேட்டிவிட்டி சார் கிரியேட்டிவிட்டி கடவுள் கொடுக்கணும், - ன்னு அது மாதிரி தான் பரதநாட்டியம் ஆடுறவங்க ஒவ்வொரு அசைவுலையும் அபிநயம் பிடிப்பாங்க அது ஒரு கலை - ல சேரும், அந்த கலை எல்லாருக்கும் ஈஸியா வந்துறாது,ஒவ்வொரு அசைவுலையும் அபிநயம் பிடிச்சு ஒரு நாள் ஆயிரம் பேர் மத்தியில அரங்கேற்றம் பண்ணுனா தான் அவங்க கலைக்கு பெருமை, ஆனா அவங்களோட அபிநயம் பிடிக்குற உடல் மொழி அவங்களோட எல்லா செயல்களிலும் அட்டை பூச்சி போல அவங்க கூடயே ஒட்டிக்கிரும்,அவர்கள் தில்லை அம்பல நடராஜன் வழியில் வந்த ஒரு ஈசனின் சீடர்கள் போன்றவர்கள் அதே போலத்தான், நம்ம கூட ஒருத்தன் படிப்பான் பிறப்பாலோ அல்லது மரபு வழில ஏற்படுற மாற்றத்தாலையோ அவனோட உடல் மொழியில சில மாற்றங்கள் ஏற்படும், ஆனா அவனோட விஷயத்துல அவன் தெளிவா இருப்பான் தனக்கு எது தேவைன்னு அவனுக்கு தெரியும், நிறைய கேலியும் கிண்டலும் தினம் தினம் பார்த்து ஒரு நாள் வாழ்க்கை வெறுப்பாக அவனுக்கு மாறும், * இங்க பாருடா "9" வந்துட்டா...