Skip to main content

Posts

இது போதும் எனக்கு

நான்கு பொழுது தேநீர் நிம்மதியான தூக்கம் பசி மறக்க உணவு பசியாற்ற ஒரு அன்னை - இது போதும் எனக்கு, வானெங்கும் இருள் பூமியின் மண்வாசனை வானவில்லின் வருகை வைகை ஆற்றின் வெட்கம் - இது போதும் எனக்கு, பால் வாடை வீசும் மழலை பாட சாலை செல்லும் சிறுவன் காதலில் திளைத்த மாணவன் திருமணத்தில் நிற்கும் கள்வன் - இது போதும் எனக்கு, கையில் ஒரு புத்தகம் கதவுகளின் அருகே நான் சூடான குழம்பியின் வாசம் தித்திப்படைய மாலை நேர இன்பம் - இது போதும் எனக்கு, காதலின் பிரிவு காதலியின் நினைவு தனக்கான தேடல் இதுவும் கடந்து போகும் என்ற நிலை - இது போதும் எனக்கு, பூ விற்று செல்லும் பெண்கள் நடனமெடுக்கும் பின்புலங்கள் பெண்மையை ரசிக்கும் அவள் அவளின் ஆச்சரிய களிப்புடன் நான் - இது போதும் எனக்கு, #IthuPothumEnakku | #InspiredbyKavingarVairamuthu ❤️

வலியும் வழியும்

கார்த்திக் நேத்தா - வின் ஃபேமஸான வரியில் இருந்து நம்ம ரைட்அப்பை ஆரம்பிப்போம் * வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் * வாகாய் - Living With Comfortness பாகாய் - உருகுதல் தன்னை ஒரு Comfort Zone வட்டத்திற்குள் அடைத்து தான் தொலைத்த ஒன்றை அன்றாடம் நினைத்து தினம் தினம் மனம் உருகுகிறான் உள்ளுக்குள், அதீத அன்பில் திளைத்து காதல் எனும் ஆழிப்பெருங்கடலில் நீந்தி பின் பிரிவு எனும் கரை வந்து சேர்ந்த பின் ஒருவனின் நிலை எப்படி மாறுகிறது என்பதை பார்ப்போம், பிரிவோ வலியோ சம்மந்தப்பட்ட பதிவுகள் எழுதவேணாம் என்று முடிவு செய்து பெரிதாக எழுதாம இருந்தேன் ஏனென்றால் மனதளவில் எனக்கும் சில நேரம் கடந்து வந்த பிளாக் டேஸ் நினைவுக்கு வந்து செல்வதால், இப்போ இந்த ரைட்அப் கூட என் நண்பன் Prakash Veera - காக தான் எழுதுறேன், மச்சான்,மாமா - ன்னு கூப்பிடுற பசங்க மத்தியில டார்லிங்க சுருக்கி "டார்லூ" - ன்னு கூப்புடுற அளவு ஒரு பாண்ட் எங்க ரெண்டு பேருக்குள்ள, நான்கு வருஷமா பழக்கம்ன்னு சொல்லலாம் ஆனா இதுவரைக்கும் நேர்ல சந்திக்கிற வாய்ப்பு எங்களுக்கு இப்போ வர அமையல, ஆனா அவன பத்தி எனக்கு தெரியும் அவனுக்குள்ள இருக்...

" டீ " | " காதல் "

தேக்கமான ஜென் மனநிலை என்ன செய்வதென புரியவில்லை தலை சுற்றுகிறது குழப்பத்திலே நானோ குறுகிய மன நிலையில், அன்று விரல்களில் நீ அகப்பட்டாய் என் உணர்வுக்கு மரியாதை தந்தாய் என் உதடுகளை சில நேரம் சுட்டாய் பெரிதான காயமாய் தெரியவில்லை, மூட்ஸ்விங்க்கான நிவாரணியாய் வந்தாய் பல நேரம் புத்துணர்ச்சியை தந்தாய் சக தோழன் போல் பயணம் செய்தாய் என் இதழ்களில் சிரிப்பை விதைத்தாய், மழையிலும் நீ வந்தாய் வெயிலிலும் துணை நின்றாய் குளிரிலும் குதூகலம் அடைய செய்தாய் இலையுதிர் மாலையிலும் சுகம் தந்தாய், நிறைய வலிகளை பார்த்தவன் என் வலிகளில் உடன் நின்றாய் நீயே அர்த்தமுள்ள உயிரானாய் நித்தம் என் குருதியில் கலந்தாய், அந்தி மாலை நேரமோ அதிகாலை பொழுதோ அக்னி வெயில் சுடும் பகலோ அடர்ந்த இருள் படர்ந்த இரவோ ஒரு கோப்பை உனை நான் கையில் ஏந்தினால் தான் அன்றைய நாள் எனக்கு வசந்த நாள், Picture Credits : Prashanth Devaraj #WorldTeaDay | #TeaForLife ❤️

தாரக மங்கைகள்

நீங்க என்ன சாதி..? நீங்க என்ன மதம்..? நீங்க என்ன மொழி பேசுறவங்க..? இந்த கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் செவிலியர்கள், யார் இந்த செவிலியர்கள்..? ஒரு நோயாளிக்கு மருத்துவரின் பரிந்துரையின்படியும் அறிவியல் ரீதியாகவும் அவனுக்கு சிகிச்சை அளித்து அவர்களின் உடல்நலம் சம்பந்தப்பட்ட தேவைகளை கவனிக்கும் கடவுள், கையில் ஊசி எனும் ஆயுதம் எப்போதும் இருக்கும், இது ஒரு சேவை மனப்பான்மை சார்ந்த தொழில், சேவை மனப்பான்மை ஆண்களை விட பெண்களுக்கு எப்போதுமே கருணை ரீதியில் கொஞ்சம் அதிகம், அதனாலோ என்னவோ இந்த சேவை துறையில் பெண்களே அதிகம் தங்களை அர்ப்பணித்து சேவை செய்கின்றனர், கை கால் தூக்க முடியாமலும் உடம்பில் வலு இல்லாமலும் ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வரமுடியவில்லை என்றாலும் அவர்களின் இல்லத்திற்கே சென்று அவர்களுக்கு தகுந்த மருத்துவ ஆலோசனை கொடுத்து சரியான சிகிச்சை கொடுப்பவர்கள், அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு உதவி செய்வதில் இருந்து நோயாளிகள் மீது காட்டும் அக்கறை வரை, ஒரு கடும் நோய் ஊருக்குள் பரவினாலும் தூக்கம், குடும்பம்,தனது உயிர் என்று எதை பற்றியும் கவலை கொள்ளாமல் பிற உயிர்களுக்காக தங...

காதல் | ஊடல்

Yes, நான் உன்ன காதலிக்குறேன் காதல் மட்டுமா..?  ஹ்ம்ம், காதல் மட்டும்ன்னு சொல்லமுடியாது கொஞ்சம் ஊடலுடன்னு சேர்த்து சொல்லலாம், ஊடல் இல்லா காதல் இருக்கா என்ன..? காதல் செஞ்சா நம்ம உடம்புல ஊடுருவும் செல்கள் எல்லாமே நம்மல அறியாமையே ஒரு வித ஹீமோகுளோபின் சேன்ஜஸ நமக்கு பல நேரங்கள்ல கொடுக்கும், லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்ல சில நேரம் இருவருக்கும் உண்டான தேடல் அதிகமா இருக்கும், நீ ஒரு எல்லையின் விளிம்பிலும் நான் ஒரு முற்றத்தின் தொலைவிலும் எதிர் எதிர் திசையில் மாட்டிக்கொண்டோம், நானோ ஒவ்வொரு மணித்துளியும் என் காதல் வழியே உனக்கான சர்ப்ரைஸை கொடுக்க எண்ணினேன், உன் பாதங்கள் சென்ற திசை நோக்கி நான் வந்தேன் உனை தேடி உனை நாடி, உன் இடத்திற்கு வந்த பிறகு நானோ உனக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன், வா, உனக்கான ஒன்று இங்கே காத்துக்கொண்டிருக்கிறது, வானத்தை இதய வடிவில் மடித்து அதன் மீது செக்க சிவந்த சாயமூற்றி அதன் நீல நிறத்தில் கிஃப்ட் பாக் செய்து உன் கையில் கொடுக்க நான் ஆவலுடன் உனக்காக இங்கே வந்துள்ளேன், தேடலை நிறுத்திக்கொண்டு ஊடலின் வழி திளைப்போம் காற்றில் காதல் இதழ்களை வருடட்டு...

அம்மா

அறம் சொல்லித்தந்து அழகாக எனை படைத்து அன்பில் அரவணைத்து அன்னை - யாகிய அன்பின் தமிழே ஆக்கம் கொடுத்து ஆருயிர் பல தந்து ஆலமர விழுதாய் நின்று ஆலயமாக விளங்கும் கடவுளே இறைவியாய் இருந்து இடம் பொருள் ஏவல் அறிந்து இளங்காற்று என்னுள் வீச இமைக்கா நொடியாய் இருந்தவளே ஈசனின் பார்வதியாக ஈன்றவளாகிய ஸ்தானத்தில் ஈழம் பல உன் வாழ்வில் கண்டு ஈன்றெடுத்த பொற்கொடியாளே உணவும் மருந்தும் தந்து உதிரம் சிந்தி உயிர் கொடுத்து உலக மேடையில் உயர்வு செய்து உண்மையான அன்பை காட்டியவளே ஊக்கங்கள் பல தந்து ஊழல் இல்லா தூய்மையான ஊஞ்சலில் எனை சமநிலையில் சீராட்டி ஊதையை ரசிக்க செய்தவளே எழில் கொஞ்சும் இரவு நேரத்தில் எடை கனமுடைய எனை சுமந்து எக்களிக்க எனக்கு உணவளித்து எதிர்நீச்சல் பல வாழ்வில் அடித்தவளே ஏலேலோ ராகம் பாடி ஏகப்பட்ட இன்னல்களுடன் ஏற்றங்கள் பல இடருடன் கண்டு ஏழு நாட்களும் வாரத்தில் உழைப்பவளே ஐந்தெழுத்து மந்திரமாக ஐம்பூதங்களின் பரப்பில் ஐப்பசி மாத மேன்மை தந்து ஐம்புலன் அடக்கி அகிலம் வென்றவளே ஒற்றை காலில் நின்று ஒரு கை வசம் பார்த்து ஒழுக்கத்தை கற்பித்து ஒளிர்வாக என் வாழ்வில் வந்தவளே ஓசை எ...

இரவுகள் நமக்கானவை

வாசிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் உருவாக்கப்பட்டது தான் இரவு, தனிமைக்காகவும் கனவுகளுக்காகவும் படைக்கப்பட்டவர்கள் தான் நாம், தனிமையை ரசித்து கனவுகளில் கரைந்து பிடித்த தலைப்பில் எழுதியோ பிடித்த தலைப்பில் வாசித்தோ இந்த இரவுகளை கொண்டாடலாம்..!! || இரவுகள் நமக்கானவை || : ) ❤️