நான்கு பொழுது தேநீர்
நிம்மதியான தூக்கம்
பசி மறக்க உணவு
பசியாற்ற ஒரு அன்னை
- இது போதும் எனக்கு,
வானெங்கும் இருள்
பூமியின் மண்வாசனை
வானவில்லின் வருகை
வைகை ஆற்றின் வெட்கம்
- இது போதும் எனக்கு,
பால் வாடை வீசும் மழலை
பாட சாலை செல்லும் சிறுவன்
காதலில் திளைத்த மாணவன்
திருமணத்தில் நிற்கும் கள்வன்
- இது போதும் எனக்கு,
கையில் ஒரு புத்தகம்
கதவுகளின் அருகே நான்
சூடான குழம்பியின் வாசம்
தித்திப்படைய மாலை நேர இன்பம்
- இது போதும் எனக்கு,
காதலின் பிரிவு
காதலியின் நினைவு
தனக்கான தேடல்
இதுவும் கடந்து போகும் என்ற நிலை
- இது போதும் எனக்கு,
பூ விற்று செல்லும் பெண்கள்
நடனமெடுக்கும் பின்புலங்கள்
பெண்மையை ரசிக்கும் அவள்
அவளின் ஆச்சரிய களிப்புடன் நான்
- இது போதும் எனக்கு,
Comments
Post a Comment