Skip to main content

29 - Tamil Movie

❤️

"29 | Full of Spoilers"

மொத்தம் பத்து பகுதிகளாக "29"
திரைப்படம் நம்மை பல
உணர்வுகளுடன் பயணிக்க வைக்கிறது,

1.நீ நான் மழை குடை 

பனில நனைஞ்ச சிலந்தி வல மாதிரி
அவ முகமெல்லாம் குட்டி குட்டி 
Rain Drops,அவ உதடு திருப்பி போட்ட
திருக்குறள் மாதிரி,கீழ் வரி பெருசாவும்
மேல் வரி சிறுசாவும் இருக்கும்,

வேண்டா விருப்பா இருந்த ஒருத்தனோட
Bachelor வாழ்க்கையில ஒரு பொண்ணு
வேண்டி விரும்பி வர ஒரு பகுதியாக
நம்மை முதற்கட்டத்தில் "அட" என ரசிக்க வைக்கிறது,

2.கடல் காதல் ரோமம் ஆச்சரியக்குறி 

டைட்டானிக் ஜாக் மாதிரி கைல ஒரு கல
இருந்துச்சுன்னா பொண்ணுங்கள
திரும்பி பார்க்க வைக்கலாம்,ஹ்ம்ம்ம்
நமக்கு தான் கிட்டார் வாசிக்குறது
கவிதை எழுதுறது,வரையுறதுன்னு
எதுவுமே வராதே,சொல்லப்போனா நான்
பேசுறத விட என் மைண்ட் வாய்ஸ் தான்
கொஞ்சம் ஸ்வாரசியாம இருக்கும்,ஆனா
அவளுக்கு அது கேக்குமா என்ன,சரி ட்ரை
பண்ணி பாப்போம்,

அழகான பொண்ணுக்கு ஒரு காதலன்ன்ற
அடையாளம் கிடைக்குற பகுதியாக பூ
பாடலுடன் நம் நெஞ்சை வருடுகிறது,

3.அண்ணா சாலை பேருந்து கிறுக்கல்கள் 

Actually எனக்கு உன்
மைண்ட் வாய்ஸ் பிடிச்சிருக்கு,

சீலே யா..?
என் மைண்ட் வாய்ஸ தான்
நான் சீலேன்னு சொல்லுவேன்,

அப்போ சீலே சீலே தான்னு மிகவும்
சிறிதான இந்த பகுதி அதன் பெயரை
போல் பேருந்தில் எழுதி வைக்கும் சிறிய
காதல் கவிதையின் கிறுக்கல்கள் போல்
அழகாக இருந்தது,

4.சீலே 

உன்கிட்ட ஒரு நிதானம் வந்துருக்கு,
அதுக்கு காரணம் என்னவா இருந்தாலும்
எனக்கு சந்தோஷம் தான் பா,

ஒரு பொண்ணு இருக்காப்பா
அவ பேரு "விஜி" 

அவனுடைய மைண்ட் வாய்ஸ் என
சொல்லப்படும் "சீலே" முழுதும்
அவள் குடி பெயர்ந்து இந்த பகுதி
கவிதையாக தெரிகிறது,

5.ஒரு முத்தம் நான்கு உதடுகள் 

திரும்ப எழுந்து நிப்பேனான்னு
தெரியல,கண்ண திறப்பேனா
தெரியாது,இந்த நிமிஷம் எனக்கு
கேக்குறதெல்லாம் மழை சத்தமும்
அவளோட சிரிப்பு சத்தமும் தான் ன்னு
முடியுற இந்த பகுதி அவனுடன் சேர்ந்து
அவனுடைய காதலில் நமக்கும்
ஒரு பதட்டை கொடுக்கிறது,

6.கூதிர் காற்று அறுந்த காத்தாடி 

உன்னில் கலந்தேன்
என்னை இழந்தேனே 
தினம் வாடினேன் மலரே,

ன்னு அவளுடைய தூரம் இவனுக்கு
ரோஜாவில் இருக்க முள்ளாக
குத்துவதால் அறுந்த காத்தாடியை
போல் இந்த பகுதியில் அவன் நிலை குலைந்து போவது நமக்கும் காதலில்
வரும் ஒரு சிந்தனையை கொடுக்கிறது,

7.கவிழ்த்துப்போட்ட ரோஜாக்கள் 

Oh My God, எப்படி பாக்குறான்

First Time என்ன Half Saree ல பாக்குறான்,

He's Melting ன்னு அவன் காதல் தான்
அவனோட Identity ன்ற மாதிரி ஒரு பித்து
பிடித்தவனை போல் காதல் கிறுக்கனாக
இருந்தாலும் சில இடங்களில்
கண்மூடித்தனமானது காதல் என்றாலும்
கொஞ்சம் நெருடாலகவும் இந்த பகுதி
கொஞ்சம் உறுத்தல் செய்கிறது,

8.காதல் இதயத்தின் அதிகப்பிரசங்கித்தனம் 

நீ என்கிட்ட எப்பவுமே இது வேணும்
அது வேணும்ன்னு கேட்டது இல்ல,
ஆனா நானா ஏதாவது ஒன்னு வாங்கிட்டு
வருவேன்,இன்னக்கி எதுவுமே வாங்மாம
வரோமேன்னு நினைச்சேன்,ஆனா நீயா
ஒன்னு என்கிட்ட கேட்ருக்க,உனக்கு நம்ம
பிரியுறது தான் வேணும்ன்னா நம்ம
பிரிஞ்சுடலாம் விஜி,பிரிஞ்சுடலாம் ன்னு
சொல்லிட்டு காதலில் மடத்தனமாக
இருக்கும் அவன் அவ தலை மேல கை
வச்சு "நல்லா இரு" ன்னு சொல்லிட்டு
அழுதுட்டே கிளம்புறது இந்த பகுதியோட
உச்சத நமக்குள்ள கடத்துது,

9.நெருப்பின் நடனம்

விஜி சொன்ன மாதிரி ஒரு இலக்கு
வச்சுட்டு அத தேடி ஓடுற சந்தோசம்
எப்படி இருக்கும்ன்னு இப்போ தான்
புரியுது ன்னு இந்த பகுதி முடியும் போது
அவனோட Identity என்னன்னு அவன்
கண்டுபிடிச்சு அதுல வெற்றி அடையுறது
பாக்கும்போது நமக்கும் ஒரு நிம்மதி
பிறக்கிறது,

10.சான்றோன் என கேட்ட காதலி 

நீ என்ன தான் என்ன
நிலா,வானம்,மேகம்,மழை, பூ,
புள்ளிமான்னு வர்ணிச்சாலும் நான்
ஒரு பொண்ணு அவ்ளோதான்,

நீயும் நெருப்பு, எரிமலை,
பாயும்புலி,அடங்காத காளை எல்லாம்
இல்ல,நீ ஒரு பையன் அவ்ளோதான்,

ஆனா இந்த உலகம் இன்னும்
பையன்,பொண்ணு,காதல்
இதெல்லாத்தையும் Romaticize பண்ணி
பண்ணி உண்மையிலேயே இந்த
உலகத்துல இருக்க பெரிய விஷயத்த
பத்தி யோசிக்க விடாம ஆக்கிருச்சு,
நம்ம ஸ்கூல் படிக்கும் போது Science
எக்ஸாம்ல ஒரு ஹார்ட் வரைவோம்ல
ஞாபகம் இருக்கா,அது வரையிறதுக்கு
கொஞ்சம் கஷ்டம்,ஆனா அது தான்
நிஜம்,லவ் பண்ணுறவங்க வரையுற
ஹார்ட் பாத்துருக்கியா,அது இந்த
க்ரீட்டிங் கார்டுல எல்லாம் இருக்குமே,
அது வரையுறது ஈஸி,ஏன்னா அது
Fantasy,உன் Fantasy ல இருந்து வெளிய
வா சத்யா இப்போ உனக்கு 29 வயசு,
உன் கற்பனை கனவு என்னோட நின்னுட
கூடாது,நாலு பேருக்கு தெரியுற மாதிரி
பெரிய ஆளா வரணும்,அப்போ
சான்றோன் என கேட்ட காதலியா
உன் பக்கத்துல நான் இருக்கணும்,

டேய் எனக்கு ஒரு கவிதை தோணுது
சொல்லட்டா,

நீ தொட்ட இடமெல்லாம்
மீண்டும் உன்னை தேடுது,
அதில் முதலாவதாய் என் இதயம்.

- விஜி 

ன்னு படம் விஜியோட வாய்ஸ் ஓவர்ல
படம் முடியும் போது ஒரு காதல் எப்படி
ஆண் ஒருவனை நல்ல ஒரு நிலைக்கு
மாற்றும்,அதே போன்று ஒரு காதல்
எப்படி பெண் ஒருத்திக்கு நல்ல
உந்துதலுடன் அவள் வெற்றிக்கு
வழி வகுக்கும் என இரண்டும் ஒரே
நேர்கோட்டில் முடியும் போது படம்
பார்த்து முடிக்கும் நமக்கும் ஒரு
மழைக்காலத்தின் சாரல் முகத்தில்
வருடும் சுகத்தை தந்து முடிவது
போல் மனம் எங்கும் மழைத்துளிகளின்
ஈரத்தோடு நனைகிறது,

29 - "ரத்னகுமாரின் எழுத்துச்சாரல்"

Comments

Popular posts from this blog

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ...

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...