Skip to main content

Posts

வெந்து தணிந்தது காடு !!

இதுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல நீ ஒதுங்கி போ சித்து, முடியாதுன்னு சொன்னா இதுல உன்னோட ரியாக்ஷன் என்னவா இருக்கும் ராஜேஷ்..? ஏற்கனவே உனக்கும் எனக்கும் செட் ஆகாது இது என் பிரச்சனை இதுல நீ இடையில வராத சித்து, செட் ஆகாமையே இருக்கட்டும் ஆனா நான் வருவேன் ராஜேஷ், அப்போ நீயா நானான்னு பா** (பாத்துருவோம்) சித்து என்று ராஜேஷ் சொல்லி முடிப்பதற்குள் தாடை திரும்பும் அளவிற்கு அவன் வாயில் ஒரு பஞ்ச் வைத்தான் சித்து, வாயின் ஓரத்தில் ரத்தம் கசிய கீழே விழுந்தான் ராஜேஷ், சித்து தலையில் கனத்துடன் மிகவும் உஷ்ணமாய் இருந்தான், அன்று கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!! அந்த கல்லூரியில் கடைசி ஐந்து ஆண்டுகளாக படித்த எந்த மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை இளங்கலை, முதுகலை என பட்டம் வாங்க முன்னாள் மாணவர்கள் கடைசி ஐந்து வருட பேட்ச் என எல்லோரும் திரண்டு வந்திருந்தனர் கல்லூரிக்கு, ஒரு பக்கம் ஆட்டம் பாட்டம் என்று மாணவர்கள் குதூகலத்தின் உச்சியில் இருந்தனர், இன்னொரு பக்கம் மாணவர்கள் தங்கள் துறைக்கு ஏற்ப தனித்தனியே பட்டங்களை வாங்கிக்க...

திறவுகோல் !!

' <3 ' Stress - ஆக இருக்கும் நேரத்தில் மனமெங்கும் மார்கழியாய் இலை மேல படர்ந்த பனித்துளியாய் ஒரு இசை எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது தனிமையின் தாகத்தில் எனக்கான கார்த்...

மனிதம் !!

அவன் இன்னும் மாறவே இல்ல அப்படியே தான் இருக்கான்..? தன்னால முடிந்த வரை முடியாது என்பதை இன்னொருவருக்கு சொல்லிவிடக்கூடாது என்பதை அவன் மேலும் மேலும் செய்து கொண்டே இருக்கிறான் அன்று ஒரு நாள் தன்னிடம் இருக்கும் குறைந்த மதிப்பிலான தொகையில் ஒரு தயிர் சாதம் வாங்கி வந்து அந்த வேப்ப மரத்தின் நிழலில் அவன் அமர்ந்த போது ஒரு பதினைந்து வயது சிறுவன் அண்ணன் காலைல இருந்து சாப்பிடல ஏதாவது வாங்கித்தரமுடியுமா..? என்று இவனை பார்த்து கேட்டவுடன் தன் கையில் வைத்திருந்த தயிர் சாதத்தை அவனிடம் கொடுத்து சாப்பிட சொல்லிவிட்டு அருகே  இருந்த தண்ணீர் குழாயில் ஐந்து க்ளாஸ்  தண்ணீரை வயிறு முட்ட குடித்துவிட்டு அந்த சிறுவனிடம் மீண்டும் சென்று அவனுக்கு ஒரு க்ளாஸ் தண்ணீரை கொடுத்துவிட்டு சாப்பாடு போதுமா..?  இல்லை இன்னும் பசி அடங்கவில்லையா என்று கேட்டான், பசி அடங்கவில்லை தான் ஆனால் வயிற்றுக்கு போதும் என்ற மனம் வந்து விட்டது ஏனென்றால் இது எனக்கான உணவு இல்லை என்று அந்த சிறுவன் பதிலளித்தான், இது உனக்கான உணவு இல்லை என்று யார் சொன்னார்..? இந்த உலகில் விதைக்கப்பட்ட உணவு முறைகள் யாவும் அனைவருக்கும் கிடைக...

அன்பு தானே எல்லாம் !!

... வா கோவில் போகலாம் என்றான் நண்பன் போனோம் சாமி கும்பிட்டோம் வா தேவாலயம் செல்வோம் என்றான் இன்னொரு நண்பன் போனோம் இயேசுவின் ஆசீர்வாதம் பெற்றோம் வா மசூதி செல்வோம் என்றான் மற்றொரு நண்பன் போனோம் அவன் மட்டும் தொழுகை செய்தான் எனக்கு அவர்களின் தொழுகை முறை தெரியவில்லை அதனால் ஒரு ஓரமாக மண்டியிட்டு அவர்கள் செய்வதை போல் நானும் செய்து அல்லாவின் அருளை பெற்றோம் நான் மற்றும் மூன்று நண்பர்களும் ஒரு பழமுதிர்சோலையில் அமர்ந்து வெயிலுக்கு இளைப்பாற பழச்சாறு பருகினோம் அக்கடையின் வெளியே ஒரு மூதாட்டி கன்னம் சுருங்கி முன்னொரு  காலத்தில் செல்வந்தியாய் வாழ்ந்து கெட்ட ஜமீன் குடும்பத்தில் வாழ்ந்து இன்று வழியின்றி வீதிக்கு வந்த கதையாய் தொங்கிப்போன லோலாக்கு அணியாத காதுகளுடன் தள்ளாடும் வயதிலும் கொய்யாப்பழம் விற்று கொண்டு இருந்தார்கள் ஆனால் பழமுதிர்சோலையில் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட பழக்குவியல்களில் ஒன்றாக இருக்கும் கொய்யாப்பழத்தினை நிறைய செல்வந்தரான மனிதர்கள் காரில் வந்து வாங்கி சென்றனர்,  தெருவோர கடை என்பதால் அந்த மூதாட்டியின் பக்கம் அன்றாட வாழ்க்கை நடத்தும் குடும்பத்தினர் நிறைய...

தர்மம் செய்வோம்

நாம் காலை, மதியம், இரவு என்று மூன்று நேரமும் சாப்பிட சாப்பாடு இருக்கிறது இளவெயில் மாலையில் சுவைப்பதற்கு நொறுக்குத்தீனியாக டீ, பிஸ்கேட் போன்றவைகளும் கிடைக்கிறது, ...

Proud to be an Aggressionist

யாருங்க அவர்..? 2003 இறுதி போட்டில ஆஸ்திரேலியா கூட தோற்று போய் உலக கோப்பை வாங்கிக்கொடுக்க முடியாத ஒரு ஆள எதுக்காக தலைல தூக்கி வச்சுட்டு ஆடணும்..? கேட்டா ஒரு Settle ஆன இந்தியன் டீம்க்கு விதை போட்டு மரமாக்குனது அவர் தான்னு வாய் சவுடால் பேசுவிங்க, தூக்கிட்டு போங்கடா உங்க தாத்தாவ (தாதா) என்று நகையாடிய கூட்டம் ஒன்று இருக்கிறது இன்றும், பேசுங்க சார் நீங்க பேசாம யாரு பேசுவாங்க..? பேசிட்டு போங்க. மற்றவர்களுக்கு அவர் எப்படி என்று எனக்கு தெரியாது, என்னை பொறுத்தவரை எனக்கு Inspiration, இங்கு நிறைய பேர் கேட்பார்கள் Inspiration என்று நாம் ஒருவரை சொன்னால் அவர்கள் செய்த எந்த ஒரு விஷயத்தை நீங்கள் பின்பற்றி இருக்கிறீர்கள் அவர்களை Inspiration என்று சொல்லும் அளவிற்கு என்று. அது ஒரு Black & White TV காலம், அன்று அந்த தொலைக்காட்சியில் தான் என் பொழுது போக்கு கிரிக்கெட்டின் மூலம் எனக்குள் ஒரு காட்டுதீ போன்று அவரை பற்றிய விதைகள் என்னுள் விதைக்கப்பட்டு என் குருதி முழுவதும் பரவியது, கிரிக்கெட்டின் மீது அளவு கடந்த பைத்தியம் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்தது, ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் ...

Title : "The Tales of Red Roses "

இந்த மண்ணில் அன்புக்கு ஏங்குபவர்கள் அதிகம். அதில் வெகு சிலருக்கு அது அக்ஷய பாத்திரம் போல் கிடைக்கும், சிலருக்கு அந்த அன்பு நமக்கு கிடைக்குமா என்ற ஏக்கத்திலயே ஒரு வித தனிமையை அவர்களுக்கு உருவாக்கும். தேடாமல் கிடைத்து, தேடியும் கிட்டாமல், கிடைத்தும் உதாசீனப்படுத்தி என அன்புக்கு பலமுகங்கள் உண்டு. ரஹ்மான் சொன்ன இந்த கூற்றில் இருந்து நம் கதையை தொடங்குவோம் “All My Life I have had a Choice of Hate and Love. I Chose Love and I am here..!!" Now : (நிகழ்காலம்) அப்பா : ஹலோ மைக்கேல் இப்போதான் உன் நண்பன் சொன்னான் நீ இந்தியா வந்துட்டேன்னு, Are You Alright Micheal..? மைக்கேல் : Daddy ஐ லவ் யூ! நான் உங்கள பாக்கணும் உங்க தோள்ல சாய்ஞ்சு அழுகணும், என்னோட இந்த நாள்ல நீங்க என்கூட இருக்கணும் என்று கண்ணில் நீர் ததும்ப மைக்கேல் அவன் அப்பாவிடம் தன்னுள் அடக்கிவைத்திருந்த கண்ணீர்களை அந்த கடற்கரையின் கரையில் சிந்தினான். அவன் கால் தட சுவடு படிந்த அந்த கடற்கரையின் உப்புக்காற்று வீசும் ஆர்ப்பரிப்பில்லாத இரவு நேர அலைகளில் இருந்து ஒரு இதமான சுமையில்லாத மனமுடைய அமைதியை தன்னுள் உ...