Skip to main content

Uraiyaadal & Stuff : 5

💙

: அப்பறம்..? சார்,
என்ன பாட்டு கேட்டுட்டு இருக்கிங்க..?

அதுவா!
இது Underrated ஆன ஒரு பாட்டு,
இப்போ இருக்க ஜெனெரேஷன்க்கு
இப்படி ஒரு பாட்டு இருக்கும்ன்னு
கூட தெரியுமான்னு தெரியல,

மலையாளம்ல நிவின் பாலி நடிச்ச
"தட்டத்தின் மறையது" படத்தோட
தமிழ் ரீமேக் "மீண்டும் ஒரு காதல் கதை"
ன்ற பேருல வந்துச்சு,அதுல வர
ஒரு பாட்டு தான் இப்போ கேக்குறேன்,

: ஓ! சரி பாட்டு எழுதினது யாரு..?

அப்படி வா!
அதான் விஷயமே,
இந்த பாட்டோட பேரு "மோகினி"
இசை மற்றும் குரல் ரெண்டும் நம்ம ஜி.வி.
பிரகாஷ்குமார் மற்றும் சத்யபிரகாஷ் தான்,

பாட்டோட வரிகள எழுதினது
கவிஞர் தாமரை அவர்கள் தான்,

: ஓ! வாவ்.. தாமரை அவங்களா..?
அப்போ பாட்டோட வரிகள் எல்லாம்
மழைக்காலத்துல வீட்டு ஜன்னல்ல
சிறப்பு விருந்தினரா வருகை தர
மழைத்துளிகள் போல Crystal Clear ஆ
ரொம்ப அழகான தமிழ்ல இருக்குமே..?

Obviously,அவங்க பேனால இருந்து
வந்த வரிகளுக்கு உயிர் இருக்குன்னு
நான் நம்புறேன்,ஏன்னா அந்த வரிகளோட
நம்ம காதல்,வாழ்க்கை,எதிர்பார்ப்பு,
ரசனைன்னு இப்படி பல பரிமானங்கள்ல
அவங்க வரிகள் கூட நம்ம பயணம்
செய்யுறோம்,அந்த பயணத்தின்
சவுகரியம் நமக்கு அம்மா கிட்ட இருந்து
கிடைக்குற ஒரு தாலாட்டு போன்ற
உணர்வ கொடுக்குறதனால தாமரை
அவர்களின் வரிகளை சார்ந்து இருக்கது
கூட லைஃப்ல ஒரு தனி அழகு தான்,

: நான் சொல்லணும்ன்னு நினைச்சத
நீ சொல்லிட்ட,எனக்கும் அவங்க எழுதுன
"கண்கள் நீயே" பாடல் ரொம்ப பிடிக்கும்,
ஆமா இந்த பாட்டுல ஸ்பெஷல் லிரிக்ஸ்
எதுவும் இருக்கா..? உனக்கு பிடிச்ச மாதிரி
ரொம்ப பெர்சனலா..?

பின்ன! இருக்காதா என்ன..?..!!!

---------->

வரணும் வரணும் எனக்காகவே நீ
இதயம் இதயம் முழுதும்
எரியும் எரியும் அணையாத தீ தீ
என் தேவதூதம் நீ

---------->

என்னோட இதயம் முழுதும்
எனக்காக நீ வரணும்,அதே போல 
ஒரு அணையாத தீயா நீ என்னோட
Divine அதாவது தெய்வீகமான ஒரு
தேவதூதம் லைக் கடவுளால் படைக்கப்பட்ட
ஒரு தேவதை போன்றவள் நீ என்று அவன்
காதலியை வர்ணிப்பது போன்ற வரிகள
தாமரை அவர்கள் இங்க எழுதியிருப்பாங்க,

அந்த "தேவதூதம்" ன்ற வார்த்தைல
இந்த பாட்டு ரிலீஸ் ஆனப்போ கேட்டு
மிரண்டு போன உணர்வுல இருந்து
இப்போ வர மீள முடியல,ஒரு வார்த்தைல
ஒரு பாட்டே ரொம்ப Blessed ஆ
தெரியும்ன்னா அது இந்த பாட்டு தான்,
அப்போ அந்த வார்த்தைய எழுதுன
தாமரை அவர்கள் நம்ம எல்லாரோட
கொண்டாட்டத்துக்கும் தகுதியான
ஒருத்தவங்க தான,

: ச்ச,என்னமா ஃபீல் பண்ணி அவங்க
வரிகள கேட்ருக்க நீ,ஆமா உனக்கு ஏன்
பாடலோட வரிகள் மீது இவ்வளவு ஈர்ப்பு..?

ஈர்ப்பு ன்றத தாண்டி,
Simple "I Love Writings"
So நான் எதாவது ஒன்ன எழுதிட்டே
இருப்பேன்,என்ன மாதிரி எழுதிட்டே
இருக்கவங்கள பிடிக்கும்,அப்படி
எழுதுறவங்களோட எழுத்த வாசிச்சு
வாசிச்சு அதோட சுகம் தலைல ஏறிடுச்சு,
அப்பறம் பாட்டு கேக்கும் போது அந்த
வரிகள கேட்க ஆரம்பிச்சேன்,சில
பாடல்கள் கொண்டாட்டம்ன்னு மட்டுமே
கடந்து போற மாதிரி இருக்கும்,ஆனா
சில பாடல்கள் நம்மளோட ஒட்டு மொத்த
வாழ்க்கையோட பிரதிபலிப்பா இருக்கும்,
அப்படி பிரதிபலிப்பா இருக்க வரிகள
கவனிக்க ஆரம்பிச்சேன்,இன்னக்கி
அந்த பாடல் வரிகளும் அதை எழுதிய
கவிஞர்களும் என்ன உச்சி குளிர வச்சுட்டு
இருக்காங்க,தட்ஸ் இட் இதான் விஷயம்,

: ஜஸ்ட் ஒரு பாட்டு தான்,
ஆனா அதே பாட்டு எல்லாருக்குமான
பாடலா உணர்வுகளின் பேரில்
கனெக்ட் ஆகுறப்போ நடக்குற
மல்டி மேஜிக் தான இதெல்லாம்,

Exactly,அழகா சொல்லிட்ட நீ,

: உன்னோட "தாமரை வரிகள் " போல..!!!

#UraiyaadalandStuff ')

Comments

Popular posts from this blog

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ...

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...