Skip to main content

அண்ணா சாலை பேருந்து கிறுக்கல்கள்

💙

யுவா :

ஹே!!!
சஞ்சனா எங்க இருக்க..?
நான் வந்து "More than Half an Hour"
ஆகுது,நீ வர தான..?
இல்ல என்ன வச்சு
எதும் ப்ராங்க் பண்ணுறியா..? 

சஞ்சனா :
நான் ஏன் ப்ராங்க் பண்ணணும்..?
பிராங்க் பண்ணுறவ தான் ரெண்டு
மாசம் முன்னாடியே மீட் பண்ண பிளான்
பண்ணி உன்ன ட்ரெயின் டிக்கெட் புக்
பண்ண சொல்லி இப்போ இங்க
உன்ன வர சொல்லப்போறேன் பாரு..? 

யுவா : 
சரி சரி,நீ வா பொறுமையா,
அதுவர என் மனசு கெடந்து அடிச்சுக்கும்,
அதுக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்கேன்,

சஞ்சனா :
இன்னும் கொஞ்ச நேரம் தான் 
அடிச்சுகிட்ட இருக்க மனசுல உள்ள
Excitement ஆ பொத்தி வச்சுக்கோ
என்ன First டைம் பார்க்க போறேல..?

யுவா :
என்னோட Excitement ஏ நீ தான்னு
சொன்னா கிரிஞ்சா இருக்குமோ..?

சஞ்சனா :
கிரிஞ்ச் தனமோ கிறுக்குத்தனமோ
உன்னோட மனசு கூட பேசிகிட்டு இரு,
Iam on My Way to See You டா யுவராஜே,

யுவா : 

(சிரித்துக்கொண்டே கட் செய்தான்)

யுவாவின் சீலேவின் குரல் :
(அவனது மனசாட்சியின் பெயர் - சீலே )

ஆமா,
சஞ்சனாவ First டைம் பார்க்க போறேன்,
நாங்க முதல பேசி பழகிகிட்டது இந்த
ஃபேஸ்புக்ல தான்,ஒரு பண்ணிரண்டு
வருஷத்துக்கு முன்னாடின்னு
சொல்லாம்,கேக்கவே ரொம்ப ஷாக்கிங்கா
இருக்குல்ல,பண்ணிரண்டு வருஷம் பேசி
பழகி இப்போ தான் First டைம் நாங்க மீட்
பண்ண போறோம்ன்னு சொல்லுறதே,

நம்பலேன்னாலும் அதான் நிஜம்,
ஆனா இந்த பண்ணிரண்டு வருஷத்துல
ரெண்டு வருஷம் தான் நல்லா பேசி
பழகிருப்போம்,மிச்ச இருக்க பத்து
வருஷத்துல விழுந்த பெரிய கேப்ல
இந்த பத்து வருஷத்துக்கும் சேர்த்தும்
ஒரு பத்து மெசேஜ் இருக்கும்,ஃபோன்
பண்ணி பேசினது கூட இல்ல,
இதெல்லாம் நம்புற மாதிரியா
இருக்குன்னு நினைக்கலாம்,
இது நிஜமா இருக்கனால தான் இதை
என்னால சொல்ல முடியுது,அப்பறம் ஒரு
நைட் நான் Random ஆ வச்ச ஸ்டேட்டஸ
சஞ்சனா பார்த்து அதுக்கு பதில் ரிப்ளை
பண்ண அங்க ஒரு Convo ஸ்டார்ட் ஆச்சு,

இரண்டு வருஷ பேரன்பும்
பத்து வருஷ இடைவெளியும் இணைந்து
பண்ணிரெண்டாவது வருஷத்தில் மீண்டும்
இருவரும் பேச தொடங்குகிறோம்,

அவள் பேசிய நாள் அன்று நல்ல ஒரு
பெருமழை பெய்து கொண்டிருந்தது,
இரவு முழுவதும் மழை தொடர்ந்தது,
இருவருக்கும் உள்ளான உரையாடலும் தொடர்ந்தது என சொன்னால் கூட அது மிகை ஆகாது,

Annual Day Holidays எப்போடா விடுவாங்க,
எப்போ டா பாட்டி தாத்தா வீட்டுக்கு
ஊருக்கு போலாம்ன்னு இருக்க
பத்து வயசு பையனோட மனநிலை தான்
எனக்கும்,அதுக்கு அப்பறம் வந்து போன
நாள் எல்லாம் அவ மெசேஜ்காகவும்
அவ கால் காகவும் நான் காத்திருப்பதும்,
என்னை போலவே அவளும் ன்னு
சொல்லுற மாதிரி நாங்க பேசாத இந்த பத்து வருஷத்துல விட்டு போன
எல்லாத்தையும் பேசி தீர்க்கணும்ன்னு
முடிவு செஞ்ச மாதிரி அத்தனை கதைகள்,
அத்தனை இரவுகள்,அத்தனை Blue Heart
Symbol - கள் என ஒவ்வொரு இரவும்
திருநாளாகவே இருவருக்கும் சென்றது,

அப்பறம் ஒரு மீட்அப் பிளான் செய்து
இதோ இந்த ஆளற்ற ரயில்வே ஸ்டேஷன்
எதிரே உள்ள பஸ் ஸ்டாண்டில் அவளை
காண மனம் முழுவதும் பரிதவிப்புடனும்
ஆவலோடும் சுகமான வலியுடன் நின்று
கொண்டிருக்கிறேன்,

அவள் வந்த பேருந்து நின்றது
என் மனம் என் பேச்சை கேட்காமல்
லப்டப் லப்டப் என்று துடிக்கிறது,
நான் பெரு மூச்சு விட முயற்சி செய்தும்
மனம் அதை ஏற்க மறுத்ததால் அந்த
முயற்சியில் தோல்வியை சந்தித்தவனாக
அவளை எதிர்கொள்ள போகிறேன்
அவளிடம் சரணாகதி அடைய போகும்
அவளின் ஆசை........ காதலனா நண்பனா..
மொத்தத்தில் எனக்கு நானே
ஒரு புரியாத புதிராக இங்கு நிற்கிறேன்,

நல்ல மழை வேற
ஒரு மிகப்பெரிய மின்னல் 
மின்னல் ஒளியை மறைக்க
என் முகத்தை மறைத்தேன்,

"மின்னலின் Flash"

கையை விலக்கி பார்த்தேன்,
என் முன் இதோ "சஞ்சனா"

மீண்டும் ஒரு "Flash"
இப்போது அதே மின்னல் என் மனதில்,

கையில குடை வச்சிருந்தா
அந்த குடைய பார்த்தீங்கன்னா
90'ஸ் கிட்ஸ்க்கு தெரியும்,நம்ம சின்ன
வயசுல நம்ம தலைல Fit செய்யுற மாதிரி
ஒரு குடை இருக்கும்,லைக் அந்த மாதிரி
குட்டிஸ்கள் யூஸ் செய்யுற குடை அது,
என்ன அவளோட தலைல Fit தான்
பண்ணமுடியாது,ஏன்னா இவ
கொஞ்சம் அரும்பு மொட்டில் இருந்து
அல்லிப்பூவாக வளர்ந்த குழந்தை,

பஸ்ல வரப்போ ஜன்னல் கம்பில நிக்குற
மழைத்துளி கூட விளையாடிட்டே அதே
கையோட அவளோட லூஸ் ஹேர
அட்ஜஸ்ட் செஞ்சுருப்பா போல அவளோட
காதுகிட்ட,சற்று ஈரம் படிந்த அவளது அந்த
கூந்தல் தான் என் கண்களுக்கு எங்கள்
முதல் சந்திப்பில் அவளிடம் தென்பட்டது,

Sudden ஆ "ஹே யுவா"

"யுவா" இருக்கியா..?

மீண்டும் "Flash" ----->

சட்டென முழிப்பு வந்தது,

ஓ!!! கனவா..?..!!!

என் நினைவலைகளில் 
ஒரு யுவாவும் ஒரு சஞ்சனாவும்
தங்களின் முதல் சந்திப்பை நல்ல ஒரு
மழை நாள் அன்று பேருந்து நிறுத்தத்தில்
வைத்து தொடங்க இருக்கின்றனர்,

இதோ,அந்த யுவாவிற்கும்
சஞ்சனாவிற்குமான என்னுடைய
அண்ணா சாலை பேருந்து நிறுத்தத்தின்
கிறுக்கல்கள் "யுவாவின் சீலேவாக"..!!!

- Thanks to Director Rathna Kumar For 29 ')

Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...