Skip to main content

Posts

ஹே சினாமிக்கா

*❤️ " ஹே சினாமிக்கா " 50- களில் பிறந்து 70 - களின் இளமை காதலில் தவழ்ந்து 80 - களில் சினிமாவுக்குள் வந்து தான் பார்த்த காதலை எழுத்துக்களின் மூலம் திரைக்கு கொண்டு வந்து பின்னர் 90 - களின் காதலில் ஒவ்வொரு ரசிகனையும் தன் காட்சியின் தாக்கம் மூலம் கவர செய்து பிறகு 2K - களின் இளமை ததும்பும் ஊடல் மிகுந்த காதலை Live in Relationship மூலம் மூன்று தலைமுறையினருக்கும் பிடித்தவாறு ஒரு இயக்குநர் படமெடுப்பது மிகவும் சவாலான விஷயம் அதுவும் மூன்று தலைமுறை படைப்புகளையும் ஹிட் கொடுப்பது என்பது சினிமாவில் எளிதான காரியமல்ல, 80'களில் - மௌன ராகம் 90'களில் - அலைபாயுதே 2K'க்களில் - ஓ காதல் கண்மணி இன்றுடன் படம் வந்து ஐந்து வருடங்கள் நிறைவு பெற்றிருக்கிறது, 90'ஸ் கிட்ஸ் களுக்கு எப்படியோ 2K - கிட்ஸ்களுக்கு "ஆதித்யா வரதராஜன் - தாரா காளிங்கராயர் " இந்த Pair எப்போதும் Favourite என்று சொல்லும் அளவிற்கு 2K - கிட்ஸ்களின் மத்தியில் படம் 2015 - ல் தலையில் வைத்து கொண்டாடப்பட்டது அவ்வளவு ஏன், படம் வந்து ஐந்து வருடங்கள் பிறகும் இன்று வரை வாட்ஸாப் ...

சதையை மீறும் மூன்றாம் பாலினம்

*💚 " சதையை மீறும் மூன்றாம் பாலினம் " மயக்கம் என்ன படத்துல செல்வராகவன் ஒரு அழகான  வசனம் எழுதியிருப்பாரு, கிரியேட்டிவிட்டி சார் கிரியேட்டிவிட்டி கடவுள் கொடுக்கணும், - ன்னு அது மாதிரி தான் பரதநாட்டியம் ஆடுறவங்க ஒவ்வொரு அசைவுலையும் அபிநயம் பிடிப்பாங்க அது ஒரு கலை - ல சேரும், அந்த கலை எல்லாருக்கும் ஈஸியா வந்துறாது,ஒவ்வொரு அசைவுலையும் அபிநயம் பிடிச்சு ஒரு நாள் ஆயிரம் பேர் மத்தியில அரங்கேற்றம் பண்ணுனா தான் அவங்க கலைக்கு பெருமை, ஆனா அவங்களோட அபிநயம் பிடிக்குற உடல் மொழி அவங்களோட எல்லா செயல்களிலும் அட்டை பூச்சி போல அவங்க கூடயே ஒட்டிக்கிரும்,அவர்கள் தில்லை அம்பல நடராஜன் வழியில் வந்த ஒரு ஈசனின் சீடர்கள் போன்றவர்கள் அதே போலத்தான், நம்ம கூட ஒருத்தன் படிப்பான் பிறப்பாலோ அல்லது மரபு வழில ஏற்படுற மாற்றத்தாலையோ அவனோட உடல் மொழியில சில மாற்றங்கள் ஏற்படும், ஆனா அவனோட விஷயத்துல அவன் தெளிவா இருப்பான் தனக்கு எது தேவைன்னு அவனுக்கு தெரியும், நிறைய கேலியும் கிண்டலும் தினம் தினம் பார்த்து ஒரு நாள் வாழ்க்கை வெறுப்பாக அவனுக்கு மாறும், * இங்க பாருடா "9" வந்துட்டா...

ஆட்டோ டிரைவர் மாணிக்கம்

* சவாரி செய்கிறான் இறப்புக்கும் பிறப்புக்கும் கால நேர அட்டவணையின்றி பொதுவாகவே நம்ம ஊருல ஆட்டோகாரர்கள்னா வண்டிய கொஞ்சம் ராஷ் - டிரைவ் பண்ணுவாங்கன்னு ஒரு பேச்சு அடிபடுது நம்ம மக்கள் மத்தியில அதுவும் இதில் பெரிதும் வாய் மொழிகளை வாங்கி காட்டிக்கொள்வது ஷேர் ஆட்டோக்காரர்கள் மட்டுமே வடிவேல் காமெடி வகையறாவில் சொல்ல வேண்டும் என்றால் நம்ம பங்கு ஆட்டோ டிரைவர்கள், ஆயிரம் வசைப்பாடு வாங்கினாலும் ஆட்டோகாரர்கள் பற்றி நல்ல விஷயம் பேசினால் நிறைய பேசிக்கொண்டே போகலாம், பாட்ஷா படத்துல "நான் ஆட்டோக்காரன்" பாட்டு தான் இவங்களோட "ஆட்டோ கீதம்" - ன்னு சொல்லுற அளவு அந்த டைம்ல அந்த பாட்டு ஹிட் அடிச்சதுக்கு இவங்களும் முக்கிய காரணம் - ன்னு சொல்லலாம், அந்தப்படம் வந்து இருபத்தி ஐந்து வருடம் ஆனாலும் இன்றைக்கும் ஆயுத பூஜை - ன்னா தமிழ்நாடுல இருக்க எல்லா ஆட்டோ ஸ்டாண்ட்லயும் தொடர்ச்சியா ஒரு பத்து தடவை அந்த பாட்டு ஒலி பரப்பாகும், என்ன தான் "ஓலா கேப்" மவுசு அதிகமாக இப்போது இருந்தாலும் நடுத்தர மக்களின் ஒரு மூன்று சக்கர தேர் - ன்னு சொல்லலாம், பிரசவம்,விபத்து,விசேஷம் என நடுத்தர மக்களின் வீட்டில் நட...

உழைப்புக்கேற்ற ஊதியம்

*💚 " உழைப்புக்கேற்ற ஊதியம் " பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய வயதில் எத்தனையோ இளம்பிஞ்சுகள் தன் எடைக்கு அதிகமான பொருட்களை தூக்கிக்கொண்டும்,என்ன தான் அரசு குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அனுமதிக்கக்கூடாது என்று சட்டம் போட்டிருந்தாலும் நிறைய காய்கறி, பழ கமிஷன் மண்டிகளிலும், உணவிடங்களில் இலை எடுப்பதற்கும்,எச்சி டேபிள் துடைப்பதற்கும் இங்கு நிறைய சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள், சில பிஞ்சுகள் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே பகுதி நேர வேலை பார்த்து அம்மா அப்பாவின் உதவியை எதிர்பார்க்காமல் தனது படிப்புக்கு தேவையான நோட்டு புத்தகங்களையும் பேனா பென்சில்களையும் தாங்களே வாங்கிக்கொள்கின்றனர், உழைப்பு தான் இங்க ஒவ்வொருத்தருக்கும் சோறு போடுது,உட்கார்ந்து வேலை வாங்கும் முதலாளித்துவத்தில் இருப்பவனும் ஒரு காலத்தில் அடிமட்ட தொழிலாளி தான், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ன..? அப்படி தான் இந்த சிறுவனும், தனக்கான தேவைகளை பூர்த்தி செய்ய ஐந்து வயதில் இருந்தே தன் உழைப்புக்கான முதலீட்டை தொடங்கிவிட்டான், ஆக ஐந்தில் இவன் வளைந்து விட்டான், ஐம்பதில் இவன் பேரும் புகழும் பெ...

குடை ராட்டினக்காரன்

*💚 " குடை ராட்டினக்காரன் " பண்டிகை காலமோ கோவில் திருவிழாவோ நிகழ்ந்தால் மட்டுமே இவர் வேலை முடிந்து செல்லும் போது தன் பிள்ளைகளுக்கு அரிசி முறுக்கோ இல்லை தேன் மிட்டாய்களோ வாங்கி செல்ல முடியும், அதுவும் நகரத்தில் இவரது பொழப்பு என்பது மிகவும் ஏக்கமான மனநிலை தான், 90 - களில் குடை ராட்டினத்துக்கு இருந்த மவுசு இப்போது அவர் அவர் தங்கள் பிள்ளைகளை மொபைல் விளையாட்டிற்குள் புகுத்தி விட்டதால் இந்த குடை ராட்டினக்காரன் நகரப்புறத்தையே தன் தொழிலுக்காக இழந்து நிற்கிறான், கால்களில் செருப்பின்றி கதிரவனின் தாக்கத்திலும் நிலவின் தன்மையிலும் எத்தனை நாள் தன் பிழைப்புக்கான வண்டியுடன் இவன் எத்தனை கிராமங்கள் சென்று இருப்பான் எத்தனை விதமான மனிதர்களை சந்தித்து இருப்பான் தன் அனுபவத்தில், கிராமங்களில் கோவில் திருவிழாக்கள், பொங்கல் போன்ற பண்டிகை காலத்தில் மட்டுமே இவன் குழந்தைக்கும் துணைவிக்கும் ஒரு இரண்டு வேளை சோறுடன் திண்பண்டங்கள் கிடைக்கிறது அதுவும் இவன் ஒரு வேளை உணவை மட்டுமே சாப்பிட்டு தெருக்களில் உறங்குவதால் மட்டுமே, இந்த பண்டிகையும் கோவில் திருவிழாக்களும் இல்லாத நாட்களில் நாடோடியாக திரியும் இந்த குடை ர...

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

*❤️ தலைப்பு :  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  ஒரு கதை எங்க முடியுமோ அங்க தான் இன்னொரு கதையோட தொடக்கம் ஆரம்பிக்கும் அப்படி தான் இந்த கதையும், உலகத்துல ஒருத்தருக்கு ஏற்படுற கஷ்டம்,கவலை,ஏமாற்றம்,இழப்பு, பிரிவு - ன்னு எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு பெயர் வச்சா அது தான் என்னோட பெயர் "கெளதம்", இந்த கெளதம் - ன்ற பெயருக்கு பின்னாடி வாழ்க்கையோட மொத்த நிராகரிப்பும் ஒன்னு சேர்ந்து இருக்கும், அப்படி ஒரு ஜாதகத்தை கொண்டவன் தான் நான், எல்லாரோட வாழ்க்கையிலையும் வர மாதிரி தான் என்னோட வாழ்க்கையிலும் முகத்தின் மேல் தீண்டும் ஒரு பெண்ணின் விரல் போல காதல் என்னை சற்று அவள் மெல்லிய விரல்களால் தீண்டி சென்றது, " தாரா " இந்த பூமியோட மொத்த அன்பும் ஒருத்தங்க கிட்ட தான் இருக்கும் அப்படினா அது தான் என்னோட தாரா, எத்தனை சண்டை வந்தாலும் சச்சரவுகள் வந்தாலும் பிரியுற நிலைக்கு எங்க காதல் போனாலும் ஒவ்வொரு வாட்டியும் இது இன்னும் முடியல கெளதம், இன்னும் நம்ம ரொம்ப தூரம் போகணும் நம்மளோட கால் தடங்கள் இன்னும் இந்த பூமில ரொம்ப வருஷம் நிலைச்சு இருக்கணும், உங்க அப்பா சொன்னா கேப்பேல அப்படி தான் உன்னோட இ...

அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்

*❤️ சிறுகதை : " அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ் " காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்ததினால் கடல் அலைகள் ஆர்ப்பரித்த வண்ணம் தனது வேகத்தில் கொஞ்சம் வீரியத்துடன் காணப்பட்டது, எப்போதும் பரவலாக கூட்டம் இருக்கும் நாகர்கோவில் அருகில் உள்ள சங்குத்துறை கடற்கரை அன்று ஏனோ வெறிச்சோடி காணப்பட்டது, கடற்கரை முழுவதும் குளிர்ந்த காற்று வீச அருகிலிருந்த தென்னை மரங்களின் கீற்றுகள் யாவும் நடனமாட கருமேகம் வானத்தை சூழ ஒரு பெரிய இடி  பூமியின் மேல் விழுந்தது போல பேரிடியாக விழுந்தது, வீட்டின் முதல் பிள்ளைக்கு இடி என்றால் ஆகாது என்று நம் முன்னோர்கள் சொல்லி கேட்டதுண்டு, விழுந்த பேரிடியின் அதிர்ச்சியில் சற்று திளைத்து சுய நினைவுக்கு வந்தவனாக நான், சிறு தூரலில் ஆரம்பித்த மழை நேரம் எடுக்க எடுக்க பெருமழையாய் பெய்ய தொடங்கியது, ஆளற்ற கடற்கரையில் நான் மட்டும் தனியே பெருமழையில் நனைந்த வண்ணம் அமர்ந்திருக்கிறேன், என் கண்களில் இருந்து சிந்தும் கண்ணீர் இந்த உலகத்திற்கு புலப்படாத வண்ணம் மழை நீரில் சங்கமித்து என் கன்னம் வழியே தழுவி நிலத்தின் மேலே குடி பெயர்ந்தது, மழையில் நனைந்த வண்ணம் என் மனதில் ஒரு கேள்வி...