Skip to main content

Posts

Describe About Her Shiva..?..!!

"அவ தான் இருக்கா இன்னும் என் வாழ்க்கைல" என் ஒவ்வொரு செய்கைகளிளும் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு நொடி பொழுதிலும்..! நெடுதூர பேருந்து பயணம் செய்து கொண்டிருந்தேன் பாடலின் ...

எழுத்துக்களின் அவசியம்

~ 💛 ~ சில பேருக்கு இசை மேல பைத்தியம் சில பேருக்கு ஓவியம் மேல பைத்தியம் சில பேருக்கு புத்தகம் மேல பைத்தியம் சில பேருக்கு காதல் மேல பைத்தியம் சில பேருக்கு குழந்தைகள் மேல பைத்தியம் இப்படி நம்மலோட பைத்தியமா ஒரு சில விஷயங்கள் நம்மை சார்ந்து இருக்கும் அது நமக்கு ஒரு வித தனிமையை கொடுக்கும் அந்த தனிமை கொடியதாக இருக்காது மிகவும் ஆழமான மிகவும் அழகான மிகவும் மென்மையான மிகவும் நம்பகத்தன்மையுள்ள ஒரு தனிமையாக அத்தனிமை இருக்கும், அத்தனிமையை நீங்கள் உணரும்போது லேசான ஈரப்பதத்துடன் கூடிய கடற்கரை மணல் போல் நம் மனசு சாந்தமான நிலையில் இயந்திரம் போல் சுழலாமல் ஒரு நிலையில் பக்குவமாய் இருக்கும், குல்முகர் மலர் பூத்துக்குலுங்கும் பூக்களில் வண்டுகள் மகரந்தம் தேடும் குயில்கள் ரீங்கார இசையினை மீட்டும் அந்தி நேர தென்றல் காற்று வீசும் இலையுதிர் காலம் நாழிகையை அழகாக்கும் இவ்வுலகம் பரந்து விரிந்து கிடக்கிறது இது நமக்கான தன்னை அறிதல் இது உங்களை உங்களுக்குள் தேடும் முயற்சி உங்களின் நாட்டத்தை வெளிக்கொண்டுவாருங்கள் முடிந்தவரை உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை எழுத்துக்களாக ம...

இன்றே இங்கே மீள்கிறேன்..!!

பைக்கை ஸ்டார்ட் செய்து நண்பனுடன் ஒரு வழியாக தியேட்டருக்கு வந்துவிட்டேன் இருக்கையின் நம்பர் பார்த்து போய் அமர்ந்தோம் ஏதோ ஒரு முனைப்பில் பின் சீட் பக்கம் திரும்பினேன், அது ஒரு Corner Seat..? சட்டென கண்களை மூடினேன் சட சடவென காலம் சில வருடங்கள் முன் சென்றது நெற்றிப்பொட்டில் வட்டங்கள் குடிபெயர்ந்து முன்காலங்களுக்கு என்னை கூட்டிச்சென்றது, ஆம் இது என் இரண்டாம் உலகம், நான் பயணித்த முதல் உலகம் இது அல்ல என் முதல் உலகத்தில் பூக்கள் பூத்து குலுங்கும், மண் வாசனையுடன் மழை செழிப்பாக பெய்யும் குழந்தைகள் என்னை சூழ்ந்து விளையாடுவார்கள் நண்பர்கள் என்னை வட்டம் போட்டு கேளிக்கை செய்வார்கள் காலத்தின் மாற்றங்கள் இங்கு தானே நிகழ்கிறது சொல்கிறேன் எனக்கான முதல் உலகத்தை பற்றி, முதல் உலகம் எனக்கான நண்பர்கள் இரவு நேர அரட்டைகள் பத்து ரூபாய் பானிபூரி. மதுரையின் பரோட்டா சுதந்திரமாய் ஒரு பள்ளி ஆறு மணி ட்யூஷன் சென்டர் யாரிடமும் விட்டுக்கொடுக்காத தங்கை சர்வமும் அவள் மாயம் என்ற பாணியில் அம்மா என் ஆசைகளை நிறைவேற்றி அழகுபார்க்கும் அப்பா மீசை கூட சரியாக முகத்தில் துளிர்விடவில்லை, அப்பாவின்...

தீரா தாகமாய் குந்தனின் காதல்..?..!!

~ 💛 ~ மேலும் கீழுமாய் பயணித்தது அவனுக்கான கடைசி நாட்களின் மருத்துவமனை அலைக்கதிர்கள் ஏனோ அன்று மறந்தது அவன் இதயத்தை இணைக்கும் விளிம்பான அவள் வருகையற்ற இதயக்கூட்டை..? இறுதியாய் கிடப்பில் கிடந்தவனின் நிலை..? அயர்ந்து உறங்கினான் இந்த தூக்கம் போதுமென்று அருகில் கல் நெஞ்சத்துடன் அவள்..?..!! - A Love Story of Kundhan Shankar & Zhoya #AmbikapathyClimax #PoetricalWayofTouch :)

Self Realisation என்னும் வலி போக்கும் மருந்து

குடித்தான் மதுவில் குளித்தான் ஆழியாய் அவன் மனம் ஆர்ப்பரித்தது அலையென தனிமையின் இருள் தாக்கத்தில் விழி இரண்டும் நீர் நிரம்பிய குளங்களாய் ஈரம் காய்ந்து படிந்தன அவன் கன்னங்கள் அவள் முத்தம் வைத்த ஈரச்சுவடுகள் மட்டுமே அவனை ஒரு நிலைப்படுத்தும் அன்றாட மருந்து கடற்கரை மணலில் அவள் பெயரை எழுதினாலும் சீற்றம் கொண்ட அலைகள் அதனை தன் வசம் இழுத்துக்கொண்டு சொந்தம் கொண்டாடுகிறது ஏனோ தெரியவில்லை தனுஷ்கோடி கடலின் எல்லையில் மீன் பிடிக்க சென்ற தந்தை இலங்கை ராணுவத்திடம் சிக்காமல் மீண்டும் நம் கரை வந்து சேருவாரா..? என்று எதிர்ப்பார்த்து பாதங்களில் கடற்கரை மணல் படிந்து காத்திருக்கும் அந்த தந்தையின் மகன் போல, இரவிலும் சரி பகலிலும் சரி வானிலும் சரி மண்ணிலும் சரி மழையிலும் சரி வெயிலிலும் சரி கடலிலும் சரி கரையிலும் சரி அவனுக்கான ஆசைகள் உறுதுணையின்றி தனிமையின் வெற்றிடத்தில் நிற்கிறது..? காலம் என்றோ ஒரு நாள் மாறும் என்று செவிகளில் பாடம் புகட்டினாலும் அவனுக்கான சூழ்நிலை கொண்ட கனாவில் அவன் மட்டுமே அவனின் ஒரே ஆறுதல்..? முயற்சி செய்தான் முயலாமை தவிர்த்தான் முயன்று முயன்று தோற்ற...

ஹாரிஸ் என்னும் 90's kids - களின் தீரா காதலன்..?

90's Kidsகளுக்கு பத்து வயது கடந்து முகத்தில் மீசை துளிர் விடுமா என்று ஏங்கிய பருவம் அது, ரஹ்மான் என்னும் இசைப்புயல் தமிழ்சினிமாவை செங்கோல் கொண்டு ஆட்சி செய்த காலமும் அது தான், பிரஷாந்த் நடிப்பில் வந்த மஜ்னு திரைப்படத்தின் பாடல்கள் மட்டுமே வெளிவந்த தருணம் அது, வானொலி எங்கும் பாடல்கள் பட்டையை கிளப்புகிறது, குல்மோஹர் மலரே பாடல் ஆல்பத்தின் Top Notch - ரஹ்மான் இசை என்று மனதில் பதிந்தது, காலங்கள் கடந்தது..? பிப்ரவரி 2001-இல் கெளதம் மேனன் என்னும் ராஜீவ் மேனனின் சிஷ்யன் இயக்கிய மின்னலே என்னும் படம் திரைக்கு வருகிறது,மின்னலே தீம்,வசீகரா இரண்டு பாடல்களை தங்களின் மொபைலில் ரிங்டோன் வைக்காதவர்கள் இல்லை,ஆல்பம் பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆனது,படம் வந்து மூன்று நான்கு வருடங்களுக்கு பின்னரும் Mechanical Engineering Student - னா ஒரு Fire வேணாம் என்று துவங்கும் Maddy Maddy BGM கல்லூரி மாணவர்களிடம் ப்ளூடூத் வழியே மாறி மாறி அனுப்பப்பட்டது படமும் மிகப்பெரிய வெற்றி, இசை Harris ஜெயராஜ் என்று இங்கிலீஷ் கலந்த தமிழில் டைட்டில் கார்ட் வரும், அங்கு தொடங்கிய பயணம் ஒரு இசை கலைஞனாய்..? முதல் படமாக வரவேண்டிய ...

ஒளி வழி ஓவியரின் கனா !!

இரண்டு வருடங்கள் பின் சென்றால் அன்று ஒரு நாள் வேலை விஷயமாக ஊட்டி வரை செல்ல வேண்டி இருந்தது, அன்றைய காலக்கட்டத்தில் மாதத்தில் ஒரு முறை ஊட்டி சென்று வருவேன், பெரும்பாலும் என்னுடைய பல்சர் 150 பைக் தான் என்னுடைய எல்லா பயணங்களிலும் உறுதுணையாய் உடன் வரும் ஒரு தோழன், வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ..? என்று கண்ணதாசனின் வரிகளுக்கேற்ப ஊட்டியின் மலைப்பாதைகள் முழுதும் Zig Zag வளைவுகளாக மொத்தம் 14 ஹேர்பின் பெண்டுகளுடன் இறைவனால் Gift Pack செய்யப்பட்ட ஒரு Natural Way of Greenish Road என்று சொல்லலாம், Headset மாட்டிக்கொண்டு பாடல் கேட்டுக்கொண்டே பயணம் செய்வது மலைப்பாதைகளில் சுகமானது என்றாலும் ஆபத்தை விலைக்கு வாங்கும் முயற்சி என்ற காரணத்தினால் அந்த பழக்கவழக்கத்தை தவிர்ப்பவன் நான்,அதற்கு பதிலாக எனக்கு பிடித்த பாடலை வாயில் முணங்கிக்கொண்டே பயணிப்பவன் நான், குழந்தை தனமாக இருந்தாலும் அதில் இருக்கும் சுகம் அறியாதோர் பலர், அன்றும் வீட்டிலிருந்து பைக்கை ஸ்டார்ட் செய்தேன், ஊட்டியில் நேற்று பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வழித்தடங்களில் மண் சரிவு ஆங்...