💙
: நல்ல மழை பெய்யுது,
ஒரு பைக் ரெய்டு போலாமா..?
கண்டிப்பா போகணுமா..?
: டேய்,ஒரு காதலிய மழைல பைக்
ரெய்டு கூட்டிட்டு போக அவன் அவன்
தவம் கிடக்கான்,நீ என்னடான்னா
கண்டிப்பா போகணுமான்னு சலிச்சுக்குற..?
அப்படி இல்ல,ஆனா அப்படி தான்
: நீயெல்லாம் ஜடம்,
சரி சரி உன்ன வெறுப்பேத்த தான்
கேட்டேன்,பத்து நிமிசத்துல வரேன்,
போகலாம்,
: பத்து நிமிஷம் சொன்ன
அஞ்சு நிமிசத்துல வந்துட்ட..?
மழை நின்றுச்சுன்னா பாவம் ரோஜா
பூ முகம் வாடி போயிருமே அதான்,
: அடேங்கப்பா,இப்படி வக்கனையா
பேச எங்க தான் கத்துகிட்டயோ ஆனா..?
சரி,வா அப்பறமா என்ன புகழ்ந்துக்கோ,
: நல்ல மழை,நீ என்கூட,இந்த மொமெண்ட
ஒரு பெயிண்டிங் மாதிரி நான் பாக்குறேன்,
அந்த பெயிண்டிங்க்கு கொஞ்சம்
அழகு சேக்குற மாதிரி ஒரு பிளாக்
காஃபி சாப்பிடலாமா..?
: மனுஷன் குடிப்பானா அந்த பிளாக் காஃபிய,ஆனா நீ குடிப்பன்னு I Know
அதுவும் Without Sugar ல,உனக்கு அத
சொல்லிட்டு எனக்கு Honey Tea ஒன்னு
சொல்லுடா,
காபியே ஒரு இன்பம் அதில்
Without Sugar பிளாக் காஃபி
என்பது இன்பத்திலும் இன்பம்,
: Very Sorry I Hate தட் கஷாயம்,
உன் சித்தாந்தத்த நீயே வச்சுக்கோ,
சரி,எப்பவும் மழை வரப்போ நீ பைக்
ரெய்டு போகணும்ன்னு சொன்னது
இல்ல,இன்னிக்கி என்ன புதுசா..?
: அது ஏதோ தோணுச்சு,நீ கூட இருந்தா
நல்லாருக்கும்ன்னு,நான் கேட்டதுக்கு
மட்டும் பதில் சொல்லுவ,அந்த ஒரு
அமைதி உங்கிட்ட இருந்து கிடைக்கும்,
See,என்ன பாரு நான் பேசிட்டே இருப்பேன்,
ஆனா உன்னோட அந்த Comfort Space
ஆன அமைதி எனக்கு பிடிச்சுருக்கு,
ஆனா என்னால அப்படி Change ஆக
முடியல,அட்லீஸ்ட் நீ கூட இருந்தேனா
அந்த Zone ல நான் கொஞ்சம் Calm &
Composed ஆ ஃபீல் பண்ணுறேன்டா,
கொட்டுற மழைல உனக்கு தேவைப்படுற
அமைதியும் காதலும் என்கிட்ட இருந்து
கிடைக்கணும்ன்னு நீ ஆசைப்பட்டா
உனக்கான தேவதூதனா உன்னோட
இருப்பேன்,இப்போ இருக்கேன்,
: இது தான் நீ,இப்படி பேசி தான்
என்ன மயக்குற,இதனால தான்
சில நேரம் உங்கிட்ட சண்ட போட்டு
விலகி போனாலும் மீண்டும் உங்கிட்ட
பேச எனக்கு பயம் இருக்கும்,எங்க
உன்னோட Law of Attraction Speech ல
உன்கிட்ட பேச வந்து மீண்டும்
உன்கிட்ட ஒட்டிப்பேனோன்னு,
நான் ஒன்னும் வசியம் பண்ணல உன்ன,
: நீ பேசுறதே பெரிய வசியம் ன்னு
சொல்லுறேன் லைக் Narcotics மாதிரி,
Narcotics ஆ..?
அப்போ என்ன Toxic ன்னு
சொல்லாம சொல்லுறியா..?
: கண்டிப்பா நீ "டாக்ஸிக்" தான்,
உன்கிட்ட வந்தாலே திரும்பி
போக மனசு வரமாட்டிதே,
திரும்ப போகணுமா என்ன..?
: என்ன எமோஷன் ஆக்காத,
வா,பைக்க ஸ்டார்ட் பண்ணு,
மனசுக்குள்ள இருக்க ஆசைய
Expose பண்ணமாட்ற ஹ்ம்ம்,
: அது Expose ஆகலேனாலும் சில
விஷயங்கள் ரெண்டு பேருக்கும்
தெரியும், அது மனசுக்குள்ள
இருக்கது Safe ன்னு ஃபீல் ஆகுது,
ஹ்ம்ம்,Your Wish டி,
: ஹே,
மழை ரொம்ப பெருசா
பெய்ய தொடங்குதுடா,
லைக் என் மனசு போல,
: குடைக்குள் மழை மாதிரியா..?
நீ தானே என் குடைன்னு சொல்லுவேன்!
Comments
Post a Comment