❤️
: உன்கிட்ட நான் ரொம்ப நாளா இதை
கேட்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன்டா
நீ ஏன் ரொம்ப அமைதியா உன்ன எப்பவும்
ஒரு தனிமையான Space குள்ள வச்சுக்குற..?
அதுக்கு பல சந்தர்ப்ப சூழ்நிலைகள்,
பல தரப்பட்ட மனிதர்கள்ன்னு நிறைய
காரணம் இருக்கு,இப்படி ஒரு Space குள்ள
என்ன தனிமைப்படுத்தி வச்சுக்க ரொம்ப
கஷ்டப்பட்டேன் ஒரு Period of time ல,ஆனா
வருடங்கள் கடந்து போறப்போ வெளிய
இருந்து பார்க்கின்றவர்களுக்கு இது
ரொம்ப Disturbed ஆன ஒரு Space மாதிரி
இருக்கும்,ஆனா எனக்கு Most Comfort
Space ஆ இந்த தனிமை உணர்வு இருக்கு,
: ஆனா,இந்த Space உன்ன மேலும்
உனக்குள்ள ஒரு Inferiority Complex அ
தூண்டும்ன்னு உனக்கு ஃபீல் ஆகலயாடா..?
Not Like that,அப்படி சொல்லிடமுடியாது,
எனக்கு இந்த மாதிரி இருக்கது
எனக்குள்ள ரொம்ப அமைதியா இருக்கு
மனசளவுல,அதே நேரத்துல என்ன
Depend பண்ணியும் இங்க யாரும்
இருக்கமாட்டாங்க, நாளைக்கு நான் ஒரு
வேள இல்லன்னு தெரிஞ்சா கூட என்ன
யாரும் பெருசா தேடமாட்டாங்க,இது
Much Better ன்னு எனக்கு ஃபீல் ஆகிடுச்சு,
: அப்போ,இந்த Space ல
நீ Extreme Happiness ல இருக்கியாடா..?
Extreme Happiness ஓ இல்ல
Extreme Sadness ஓ ரெண்டையுமே
இன்னொருத்தங்களுக்கு கொடுக்காம
நான் ரொம்ப Subtle ஆன ஒரு கேரக்டரா
இங்க இருந்தேன்,இருக்கேன்,இருப்பேன்,
: Sounds Good,
ரொம்ப எதார்த்தமா பேசுறடா நீ,
எதார்த்தம் தாண்டி ஒருத்தங்களோட
கேள்விய புரிஞ்சுக்கிட்டு பதில்ல
சொல்லுறேன்னு நினைக்கிறேன்,
: கேள்வியோ பதிலோ ஒருத்தங்க
பேசுறத First Deep Listen பண்ணுறதே
இப்போலாம் பெரிய விஷயமா இருக்குடா,
ஒரு டைம்ல நான் பேசுறத கேட்க
ஆளில்லாதனால இன்னக்கி என்கிட்ட
பேசுறவங்கள நான் பேச வச்சு அவங்க
என்ன சொல்லுறாங்கன்னு கேட்கிறேன்,
: Maybe,அதனாலயோ என்னவோ நீ
முடிக்குற வார்த்தைல இருந்து நான்
நம்மளோட Conversation ஆ மேலும்
மேலும் ரயிலின் தண்டவாளம் போல
நீட்டிக்கொண்டே போய்கிட்டு இருக்கேன்,
உரையாடல் என்பது அழகு தானே,
அதில் நீ கேள்வியாகவும்,உன் கேள்விக்கு
நான் பதிலாகவும் இருப்பது பேரழகு.
Comments
Post a Comment