❤️
(2007 காலகட்டத்தில் - மதுரையில்)
: ஆமா பாட்டு கேசட் வாங்கணும்
சொன்னியே இன்னக்கி
கீஷ்டுகானம் போகலாமா..?
போகலாம்,
ஆனா நல்லா மழையா இருக்கே,
: என்னடா நீ,இன்னக்கி உங்க தல நடிச்ச
பில்லா பாட்டு கேசட் ரிலீஸ் ஆயிருக்கு,
காலேல நான் அந்த பக்கம் ஸ்கூல்
போறப்போ திறக்காத கடை முன்னாடி
திருவிழா மாதிரி கூட்டமும் பேனர்களும்
இருந்துச்சு,நீ காலேலயே அந்த கூட்டத்துல
இருப்பன்னு பார்த்தா மழை வருது
போகணுமா ன்னு கேட்குறயே,
என்ன டா தல ஃபேன் நீ..?
பேனர்க்கு பால் அபிஷேகம் பண்ணி,
ஆட்டம் பாட்டம் போட்டா தான் ஃபேன்னு
ஒத்துப்பீங்களா..? நான் அந்த டைப்
கிடையாது, Screen ல அவரோட Presence அ
அந்த ஆளுமைய என்ஜாய் பண்ணுற
சிம்பிளான ரசிகன் நான்,
: நீ ஆளே ஒரு மாதிரி தான் போலயே,சரி
மழை வரதுக்குள்ள போயிட்டு வரலாம் வா,
கடையோட வாசல்ல இருக்க பேனர்ல
எங்க ஆளு கையில Gun வச்சு நிக்குற
அந்த ஸ்டைல பார்த்தயா,அதுக்கு
கீழ பாரு தலைவன் யுவன் பேரு,
: சரி, நீ பில்லா கேசட் வாங்கு,நான் வேற
கலெக்ஷன் இருக்கான்னு பாக்குறேன்,
ஹ்ம்ம் கேசட்லாம் எடுத்துட்டேன்,
கடைக்குள்ள இப்போ பில்லா பாட்டு தான்
போடபோறாங்க அத கேட்டுட்டு இருக்கேன்,
நீ வேற கேசட் வாங்கணும்ன்னா வாங்கிட்டு
வா,
(சிறிது நேரத்திற்கு பிறகு)
: ஹே,நான் ரெண்டு கேசட் வாங்கிட்டேன்
ராஜா சாரோட Rare Collections இருந்துச்சு,
Oh, Wow!! அது அடுத்த வாரம் தான் வரும்
சொன்னாங்க, இப்பவே வந்திருச்சா,
அப்போ நீ கேட்டுட்டு எனக்கு குடு,நான்
அந்த கலெக்ஷன்ஸ் வாங்கணும்ன்னு
நினைச்சேன்,
: நான் கேட்டுட்டு உனக்கு தரேன்,அதுக்கு
முன்னாடி உனக்காக ஒரு ஸ்பெஷல் கேசட்
நான் இப்போ வாங்கியிருக்கேன்,
எனக்காகவா,நீ வாங்குன ராஜா சாரோட
Rare Collections ஏ எனக்கு ராஜா சார்
பிடிக்கும்ன்ற காரணத்துக்காக தானே,
இதை விட வேற என்ன கேசட் அது..?
: பழைய படம் தான், ஆனா அதோட கேசட்
அவ்வளவு ஈஸியா கிடைக்காம நீ ரொம்ப
தேடி அலைஞ்ச ஒரு ஸ்பெஷலான கேசட்
அது,
ஹ்ம்ம்,நான் கண்டுபிடிச்சுட்டேன்,ஆனா
அதுல இன்னொரு ஸ்பெஷல் ஒன்னும்
இருக்கு,
: இன்னொரு ஸ்பெஷல் என்ன..?
நமக்கு என்ன பிடிக்கும்ன்னு நம்மள விட
நம்ம மீது உள்ள அக்கறைல நமக்காக
பாத்து பாத்து நமக்கு பிடிச்சதெல்லாம்
தேடி பண்ணுறவங்க கிட்ட இருந்து அப்படி
ஒரு ஸ்பெஷல் கேசட் கிடைக்குறதுன்றது
மேலும் இந்த தருணத்துல ஒரு
ஸ்பெஷலான மொமெண்ட் தானே,
நான் ஒன்னும் மெனக்கெடல் எடுத்து
தேடலையே,வேற பாடல்கள் தேடும்
போது தானே இது கிடைச்சது..?
: அதான் பிரபஞ்சத்தோட அழகு,அது
என்னோட ஸ்பெஷலான கேசட்,அது
இவளோ நாள் தேடியும் அது ஏன்
என்னோட கைக்கு கிடைக்கல..?
உனக்கு தானே கிடைச்சது,எனக்கு
ரொம்ப பிடிச்ச உன்கிட்ட இருந்து
அந்த கேசட் எனக்கு வரணும்ன்றது
தான் அந்த பிரபஞ்சத்தோட விதி,
: பரவாலயே, இந்த வயசுலயே
Universe பத்தி எல்லாம் பேசுறயே,
பிரபஞ்சத்தோட பார்வைல தான் நம்ம
இருக்கோம்,இங்க இருக்க எல்லாருக்கும்
விதி என்பது எழுதப்பட்டு இருக்கும்,
அதுக்கு பேர் தான் பிரபஞ்சத்தின்
விதின்னு சொல்லுறோம்,ஒரு விஷயம்
நமக்கு பிடிக்குதுன்னா அது நேரடியா
நமக்கு கிடைக்காம நமக்கு பிடிச்சவங்க
கிட்ட இருந்து கிடைச்சா அது
ஒருத்தங்களுக்கு மனசளவுல எவ்வளவு
சந்தோசத்தை கொடுக்கும்ன்னு அந்த
பிரபஞ்சத்துக்கும் தெரியும், அதனால கூட
அவங்க மூலமா நமக்கு அது கிடைக்கலாம்,
அதே நேரத்துல எல்லாமே நன்றாகவே
அமையும்ன்னு சொல்ல முடியாது,
அன்றைய நாள் நம்ம விதியின் படி
கொஞ்சம் நேரமும் காலமும் சரியில்லை
என்றால் கொஞ்சம் மனம் உடைந்து
போகவும் வாய்ப்புண்டு,எது எப்படியோ
பிரபஞ்சத்த நான் நம்புறேன்,
: என்ன நம்புற மாதிரியா..?
கையில மறைச்சு வச்சுருக்க
"இதயத்தை திருடாதே" கேசட்ட
சீக்கிரம் கொடு, இல்லேனா என்னோட
பிரபஞ்சமே நீ ன்னு கூட சொல்லுவேன்,
: நீ சொன்னாலும் சொல்லுவ,
இந்தா! இந்த கேசட் குள்ள என்ன விட
நீ பெருசா நினைக்குற பிரபஞ்சம்
ஒன்னு உள்ள இருக்கு,
: ஹா ஹா!!! மேடம் க்கு
"ராஜா சார் மேல Possessive" போல ஹ்ம்ம்.
Comments
Post a Comment