Skip to main content

Posts

Uraiyaadal & Stuff : 4

💙 : மழை பிடிக்கும்லடா உனக்கு..? எப்பவும்ன்னு சொல்லமுடியாது, Sometimes..!!!  : So,Depends On Your Mind வச்சு தான் அந்த மழைய கூட ரசிப்பயா என்ன..? Not Like that, ஆனா Mind நல்லா இருந்தா மனசும் நல்லா இருக்கும்,அப்போ மழைல நனஞ்சா நம்மளும் ஹாப்பியா இருப்போம்ல அது போல தான், : ஹ்ம்,என்ன பொறுத்தவர அது என்ன மாதிரியான மனநிலையா இருந்தாலும் சரி மழைல நனையணும்,அது ஒரு தனி ஃபீல் கொடுக்கும் லைக் நம்மளே புதுசா Reborn ஆன மாதிரின்னு சொல்லலாம், இப்படி மழை எல்லாரோட லைஃப்லையும் ஒரு Impact செய்யுதுல..? : நிச்சயமா,எப்பவுமே நம்ம Down ஆ இருந்தாலும் சரி, ரொம்ப Pressurized ஆ ஃபீல் பண்ணாலும் சரி இயற்கையால மட்டும் தான் நம்மள அந்த Situation ல இருந்து மீட்டெடுக்க முடியும்,Nature Can Heal Anything ன்ற Statement அ எப்பவுமே முழுசா நம்புற ஒரு கேரக்டர் நான், உனக்கு Nature அவளோ பிடிக்குமா..? : உன்ன எந்த அளவு பிடிக்குமோ அந்த அளவுன்னு சொல்லலாம்,ஆனா Cringe ஆ ஃபீல் ஆயிடுமோன்னு தோணுது, உனக்கு பிடிச்சிருக்கா..? அத டைரக்ட்டா  Express பண்ணு, சுத்தி இருக்கவங்க சொல்லுறதுக்காக உன்னோட Opinion Change பண்ணிகாத, : எல்லாருமே உன்ன ம...

Uraiyaadal & Stuff : 3

💙 : என்னடா தனியா உட்கார்ந்து ஆழமா யோசிச்சுட்டு இருக்க போலருக்கு..? யோசனையெல்லாம் இல்ல,ஆனா ஏதோ பித்து பிடிச்ச மாதிரி இருக்கது சொல்லுவாங்கல அந்த மாதிரின்னு வச்சுக்கலாம்,லைக் மனசுக்குள்ள எத நினைச்சும் கவல இல்ல,ஆனா இத ஜென் நிலைன்னும் சொல்ல முடியாது, Because of ஜென் நிலைன்னு சொல்லணும்ன்னா அந்த மனநிலை ரொம்ப தெளிவா இருக்கணும்ல, But Not Sure என்னோட Mind அந்த State ல இல்லன்னு எனக்கு Feel ஆகுது, : ஓ! சரி ஒரு காஃபி சாப்பிடலாமா..? நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீ என்ன கேக்குற..? : Just Mind Divert தான், காஃபி உன்னோட Favourite ல, So Confusion State ல இருக்க உனக்கு Just ஒரு Refreshment Therapy யா இருக்குமேன்னு தான் கேட்டேன், அப்படின்ற! சரி எனக்கு ஒரு...... : வெயிட், அந்த கஷாயம் தான உனக்கு..? கஷாயமா..?  எத சொல்லுற நீ..? : டேய்,உனக்கு "Black Coffee Without Sugar" அதானே.? ஆமாம், அது உனக்கு கஷாயமா..? : மனுஷன் குடிப்பானா இத..?  நான் "Batman" So குடிப்பேன்!  : ஓ! ராத்திரி பூரா தூங்காம இருந்தா இப்படி Batman,Introvert ன்னு உன்ன மாதிரி சொல்லிக்கலாம் போல, Batman is Just For Funny Langua...

Uraiyaadal & Stuff : 2

💙 : என்ன சார் அமைதியா இருக்கீங்க, அமைதியா இருந்து காரியத்த சாதிக்கலாம்ன்னு நினைக்கிற போல..?  அதுல என்ன தப்பு..? & One more thing காரியத்த சாதிக்கணும்ன்னு அமைதியா இல்ல,நம்ம செய்யுற அல்லது சாத்திக்கணும்ன்னு நினைக்கிற விஷயங்கள் வெளிய தெரியணும்ன்னு அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்,அதனால அமைதியா இருந்து என் வேலைய செஞ்சுட்டு இருக்கேன், : அமைதியா இருக்கவன அமுக்குனின்னு சொல்லுவாங்க எங்க ஊர்ல.. சொல்லிட்டு போங்க,இதே நான் செய்யுற எல்லாத்தையும் பரபரப்போட செஞ்சா என்ன ஆட்டம் ஆடுனடான்னு ஒரு டாக் வரும்,அதுக்கு இது Much Better ன்னு நினைக்கிறேன்,அது என்ன சொன்ன அமுக்குனியா..? ஹா ஹா "I Love that Particular Word - அமுக்குனி" அது உன் உச்சரிப்புல அழகாயிருக்கு, : இப்படியே பேசி மயக்கிரு! So,உன்னோட ஆராய்ச்சியோட முடிவு நான் பேசுனா பெண்கள மயக்குறவன், பேசாம அமைதியா இருந்தா அமுக்குனி, : நான் மயங்குன "அமுக்குனி" நீ. #UraiyaadalandStuff ')

Uraiyaadal & Stuff : 1

💙 தாஜ்மஹால் கட்டுனா மட்டும் தான் காதலா?  : இல்லம்பியா நீ..? சரி,அங்க ஒரு அம்மா போறாங்களே, அவங்ககிட்ட பூ வாங்கி கொடுத்தா அது அப்போ காதல் இல்லையா..?  : Ofcourse,அதும் காதல் தான், ஹ்ம்ம், அதான் நானும் சொல்லுறேன், காதல் ல செய்யுற Effort தான் இதெல்லாம்,இதெல்லாம் செஞ்சா தான் காதல்ன்னும் இல்ல,அதே நேரம் சிறுசு,பெருசு ன்னு எதுவும் இல்ல, வாங்கிக்கொடுக்குறவங்க மனசு தான் முக்கியம் இங்க, பெண்களான நீங்க உங்க தலைல பூ வச்சோன உங்களுக்குள்ள சில மணி துளிகள் நீங்க அழகா இருக்கீங்கன்னு உணருறிங்கள்ள..? அந்த சில மணி துளிகளின் கூட்டுத்தொகை தான் "காதல்" : ஆமா,இவ்வளவு வக்கனையா பேசுற, உனக்கு ஏன் டா லவ் பிரேக்அப் ஆச்சு..? லவ் பிரேக்அப் ஆனா மட்டும் தான் சித்தாந்தம் ன்ற பேர்ல இப்படி வக்கனையா பேச முடியும், அதான் காதலோட மறுக்கவே முடியாத "One of the Harsh Reality". #UraiyaadalandStuff ')

பறந்து போ

❤️ பறவை பறப்பது இயல்பு, பல வருடங்களாக கூண்டுக்குள் அடைபட்ட பறவையாக இருந்தாலும் ஒரு கணம் அதன் கூண்டை திறந்து விட்டு பாருங்கள்,அதன் இயல்பு மாறாமல் சுதந்திரமாக அங்கிருந்து பறந்து தன் இடத்திற்கு செல்லும், மனிதனும் அது போல தான்,தன்னை சுற்றி இருக்கும் ஸ்ட்ரெஸ், பிரஷர், மூட் ஸ்விங் என இவைகளையெல்லாம் அவன் வாழ்விலிருந்து எடுத்துவிட்டால் அவன் இயல்பு மாறாமல் கூண்டுக்குள் இருந்து வெளிவந்த பறவை போல சுதந்திரமாக பெரு மூச்சுவிடுவான்,  மனிதனும் பறவையும் இயல்பில் ஒரே ரகம் தான்,சிறகு மட்டுமே வேறுபாடு, மனிதனுக்கும் ஒரு சிறு ஆசை தான், எனக்கும் சிறகு இருந்திருந்தால் எல்லா தேசத்திற்கும் நானும் பறவையை போல் தேசாந்திரியாக பறந்திருப்பேன் என்று, பறந்து போ..? சிறகில்லை என்றாலும்  உன் மனம் போன போக்கில்..!!! ')

எளிமை | Just Simple

❤️ பார்க்கும் எல்லாவற்றையும் எளிமையாக பார்க்க பழகு, நீ எளிமையாக இருக்கும் போது கிடைத்த அனுபவங்களும் அலாதி இன்பமும் நீ கோடி ருபாய்க்கு அதிபதி ஆனாலும் மீண்டும் கிடைக்காது, ஆடம்பரம் தவறு என்று சொல்லவில்லை,ஆனால் எளிமை உனது மேன்மைக்கான அடையாளம், எளிமை பல நேரங்களில் பலம்,பலவீனம் என இரண்டு விதத்திலும் பிரதிபலிக்கும், அது காண்போரின் மனநிலையே, எளிமைக்கான குரல் கூட தென்னகமெங்கும் இன்னும் பறையிசையாக எட்டுத்திக்கும் ஒலித்து கொண்டு தான் இருக்கிறது, எளிமையாக இரு எளிமையாக பழகு எளிமையாக எழுது அவ்வளவு ஏன்..? உனக்கான காதலை கூட எளிமையாக காதலித்து பார், இங்கு படைக்கப்பட்ட எல்லாமும் உனக்கானது!

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...